எலக்ட்ரான்
Appearance
பொருள்
- அணுவின் ஓர் அடிப்படை அணுத்துகள் அல்லது துணிக்கை; இது அணுவில் உள்ள எதிர்மின்மத் தன்மை கொண்ட சிறு துகள். இதனால் இதனைத் தமிழில் எதிர்மின்னி என்பர். அணுக்கருவில் இருக்கும் நேர்மின்மத் தன்மை கொண்ட நேர்மின்னி அல்லது புரோட்டான் என்னும் அணுத்துகளைக் காட்டிலும் ஏறத்தாழ 1838 மடங்கு சிறிய எடை கொண்ட துகள். இதனைத் தமிழில் இலத்திரன் என்றும் அழைப்பர்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:*(சொல் தொடரில் பயன்பாடு) - எலக்ட்ரான் நகர்வதால் மின்னோட்டம் நிகழ்கின்றது.
- (இலக்கணக் குறிப்பு) - எலக்ட்ரான் என்பது ஒரு பெயர்ச்சொல்லாகும்.