பரத்தன்
Appearance
பொருள்
பரத்தன்(பெ)
- வேசியருடன் கூடி ஒழுகுபவன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
- விபசாரிக்குத் தமிழில் பரத்தை என்று பெயர். இதற்கு நிகரான ஆண்பாற் சொல் பரத்தன் என்று தமிழில் இருக்கிறது. "நண்ணேன் பரத்த நின் மார்பு' (தலைவி கூற்று) எனும் சங்கத் தொடர் காண்க. சிலப்பதிகாரத்தில் இருபாலர்க்கும் ஏற்பப் பொதுமையில் பரத்தர் எனும் சொல் எடுத்தாளப்பட்டுள்ளது. "வம்பப் பரத்தர் வறுமொழி யாளர்' என்பது சிலம்பு. ஆதலின் தமிழில் பரத்தை - பரத்தன் இருபாற் சொற்களும் உண்டு எனக் கண்டு மகிழ்க. (பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, தினமணிக்கதிர், 25 செப் 2011)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- நண்ணேன் பரத்தநின் மார்பு (குறள், 1311).
( மொழிகள் ) |
சான்றுகள் ---பரத்தன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி