ஏரி
Appearance
பொருள்
ஏரி (பெ)
- மழைக்காலத்தில் ஆறுகள், ஓடைகள் மூலம் மிகையாக வரும் நீரைத் தேக்கி வைப்பது ஏரி ஆகும்.
- மனித முயற்சியின்றி இயற்கையாகவே சூழவுள்ள உயர் நிலத்தால் அடைக்கப்பட்ட நீர் நிலை.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- lake
- (மலாய்) - [[tasik)
பயன்பாடு
- சுனை, கயம், பொய்கை, ஊற்று என்பன தானே நீர் கசிந்த நிலப்பகுதிகளாகும். குட்டை, மழை நீரின் சிறிய தேக்கமாகும். குளி(ர்)ப்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'குளம் ' என்பதாகவும் உண்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'ஊருணி ' எனவும் ஏர்த் தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலை 'ஏரி ' என்றும், வேறு வகையாலன்றி மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை 'ஏந்தல் ' என்றும், கண்ணாறுகளை உடையது 'கண்மாய் ' என்றும் தமிழர்கள் பெயரிட்டு அழைத்தனர். (தண்ணீர், தொ. பரமசிவன் )