குளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
குளம்
குளம்:
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) குளம்

  1. மழை நீரை மட்டுமே தேக்கி வைப்பது குளம் ஆகும்.
  2. மனித முயற்சியால் ஆறு அல்லது நீருற்றுக்களை மறித்து ஆக்கப்பட்ட நீர் நிலை.
  3. வாவி
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
  • நகரத்தில், அதுவும் இந்த நங்கநல்லூரில் நீங்கள்ளாம் குளத்தைப் பார்த்திருக்கவே மாட்டீர்கள். இந்த ஊரில் குளம் என்று அறியப்படுவது, குட்டை என்ற கணக்கில் கூடச் சேர்த்துக்கொள்ள முடியாத அளவுக்குச் சிறியது. குளம் பார்க்கவேண்டுமானால், புதுக்கோட்டைக்குப் போகவேண்டும். அது குளம். குளம் என்றால் மிகப்பரந்துபட்ட நீர்நிலை என்று பொருள். ஏதோ இக்குனூண்டு தண்ணித்தொட்டி இல்லை. நீங்க நினைக்கிற மாதிரி கிணறும் இல்லை. (பெரிதினும் பெரிது கேள், ஹரி கிருஷ்ணன். தென்றல்)
  • சுனை, கயம், பொய்கை, ஊற்று என்பன தானே நீர் கசிந்த நிலப்பகுதிகளாகும். குட்டை, மழை நீரின் சிறிய தேக்கமாகும். குளி(ர்)ப்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'குளம் ' என்பதாகவும் உண்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'ஊருணி ' எனவும் ஏர்த் தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலை 'ஏரி ' என்றும், வேறு வகையாலன்றி மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை 'ஏந்தல் ' என்றும், கண்ணாறுகளை உடையது 'கண்மாய் ' என்றும் தமிழர்கள் பெயரிட்டு அழைத்தனர். (தண்ணீர், தொ. பரமசிவன் )

 :குலம் - ஏரி - தடுப்பணை - குட்டை - கிணறு

"https://ta.wiktionary.org/w/index.php?title=குளம்&oldid=1986664" இலிருந்து மீள்விக்கப்பட்டது