உள்ளடக்கத்துக்குச் செல்

रीठा

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இந்தி

[தொகு]
रीठा:
ரீடா2-பூவந்தி-உலர்ந்தக்காய்கள்
रीठा:
ரீடா2-பூவந்தி மரம்

sapindus emarginatus...(தாவரவியல் பெயர்)

பொருள்

[தொகு]
  • रीठा, பெயர்ச்சொல்.
  1. பூவந்தி
  2. பூவந்திக் கொட்டை
  3. மணிப்புங்குக்காய்
  4. சோப்புக்காய்

விளக்கம்

[தொகு]
  1. தமிழ்நாட்டில் சீக்காயைத் தலையைச் சுத்தம் செய்யப் பயன்படுத்துவதைப்போலவே வட இந்தியாவில் தலைக்கூந்தலைச் சுத்தப்படுத்த மக்கள் வெகுவாக உபயோகப்படுத்தும் சம்பிரதாயமான ஒரு தாவரம்...தமிழகத்திலும் இதனைப் பயன்படுத்துவோர் உளர்...
  2. இத்தக் காய்களின் உலர்ந்த சதைப்பகுதியை இடித்து, நீரில் சற்று ஊறவைத்துப் பிழிந்தால், மிகுந்த நுரையோடு, நறுமணத்தோடுக் கூடிய, திடமான நீர்மம் உண்டாகும்...இதை எண்ணெய் வைத்தத் தலையில் தேய்த்துக் குளித்தால் எண்ணெய் பிசுக்கும், அழுக்கும் அறவே நீங்கிவிடும்...
  3. இந்தக் காய்களின் கொட்டைக்குள்ளிருக்கும் பருப்பில் 2-3 குன்றி எடை நசுக்கி, முலைப்பாலில் ஊறப்போட்டு, வடிகட்டி மூக்கின் வழியாக 2-3 துளி விட, மூக்கிலும் வாயிலும் கபத்தை வெளியாக்கும்...இதனால் மூர்ச்சை, பற்கிட்டல், காக்கைவலி முதலியவைகள் போகும்...
  4. தினமும் அணியக் கூடிய கம்மல், மோதிரம், சங்கிலி, வளையல் போன்ற தங்க நகைகள், அதிகப் பயன்பாட்டால் மங்கிப்போகும்...அச்சமயத்தில் உலர்ந்த மணிப்புங்குக்காய் கழுவிய நீரில் போட்டு, சற்றுக் கைவிரல்களால் அல்லது மெல்லிய புருசால் தேய்த்து எடுத்தால் புத்தம் புது நகைகளைப் போல் ஒளிரும்.


( மொழிகள் )

ஆதாரங்கள் ---रीठा--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi

"https://ta.wiktionary.org/w/index.php?title=रीठा&oldid=1460959" இலிருந்து மீள்விக்கப்பட்டது