அனானி
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
அனானி(பெ)
- தன் பெயரைக் குறிப்பிடாதவர்; அநாமதேயன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- யாருக்கும் தெரியாத 'மர்ம நபராக' இணையத்தில் உலாவருவது எளிது. தொழில்நுட்பம் தெரியாத அப்பாவி என்றால், மற்றவர்களிடம் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. தொழில்நுட்ப மேதை என்றால், அந்த மர்ம நபரை யாராலும் அடையாளம் காண முடியாது. இவர்களைத்தான் 'அனானிகள்' என்கிறார்கள். தமிழும் ஆங்கிலமும் கலந்த புதுமொழி இது.
- கட்டுரைகளுக்கு கருத்துச் சொல்வது, அவற்றுக்குப் பதிலடி தருவது, சமூக வலைத் தளங்களில் ஊடாடுவது என எல்லா இடங்களிலும் அனானிகளைப் பார்க்க முடியும். அரசுக்கு எதிரான கடுமையான கருத்துகளை முன்வைக்கும்போது, தங்களுக்கு ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக பலர் அனானிகளாகச் செயல்படுவார்கள். பிறரது கண்காணிப்பு வலையில் இருந்து தப்புவதற்காகவும், தங்களது சமூக அந்தஸ்து பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும் பிரபலங்கள்கூட இப்படி அனானிகளாக இணையத்தில் உலவுகிறார்கள். . (அனானி'களின் தாக்குதல்!, தினமணி, 12 ஏப்ரல் 2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அனானி--- DDSA பதிப்பு + வின்சுலோ +