அரை
Jump to navigation
Jump to search
பொருள்
பெயர்ச்சொல்[தொகு]
வினைச்சொல்[தொகு]
- மாவாக்கு, கூழாக்கு
மொழிபெயர்ப்புகள்[தொகு]
விளக்கம்
- ஒரு காலத்தில் பருப்பொருளை உணர்த்திய சொற்கள் பிற்காலத்தில் நுண் பொருளை உணர்த்துமானால் அந்நிலை நுண்பொருட்பேறு ஆகும்..."இடுப்பு" என்பதை உணர்த்திய "அரை" என்ற சொல், "பாதி" என்னும் நுண்பொருளையும் உணர்த்த உயர்ந்தமை இதற்குச் சான்றாகும் (நல்ல தமிழ்ச் சொற்கள் அன்றும் இன்றும், முனைவர் ச.சுப்புரெத்தினம், தமிழ்மணி, 27 பிப் 2011)
- உயரத்தில் அரைப் பகுதியாக இருப்பதால் இடுப்பு, "அரை" எனப்படும். (வேருக்கு நீர் வார்த்தவர்கள், தமிழ்மணி, 30 அக். 2011)
பயன்பாடு
- இடுப்பில் கட்டுவது அரை நாண் கயிறு. அரை - hip.
- ஒன்றில் பாதி அரை. அரை - half.
- மாவு அரைந்தது. (தன்வினை)
- அவன் மாவை அரைத்தான். (பிறவினை)
சொல்வளம்[தொகு]
- அரை
- அரைப்பு, அரைத்தல்
- அரைவை, அரைதல்
- ஒன்றரை, இரண்டரை, மூன்றரை, நான்கரை, ஐந்தரை
- ஆறரை, ஏழரை, எட்டரை, ஒன்பதரை, பத்தரை
- அறை-பாதி-அடி
- அரை <--> அறை.