உலகாயதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

உலகாயதம்(பெ)

  1. பொருள்முதல்வாதம்
  2. புறச்சமயங்கள் ஆறனுள் ஒன்று
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. materialism
  2. one of six external religions
விளக்கம்
  • உலகாயதம் = உலக + ஆயதம்
  • அறுவகைச் சமயங்கள் :- உலகாயதம், பௌத்தம், சாங்கியம், நையாயிகம், வைசேடிகம், மீமாஞ்சகம் என்பன (தண்டியலங்காரம்
பயன்பாடு
  • நாடகம் பார்க்க வருகையில், நாலும் ஆறும் எட்டும் பத்துமாய் வந்ததே - அப்படியா? அல்ல; அல்ல! ஒட்டுமொத்தமாய் ஒரு சேரக் கொட்டகையைவிட்டு, ஒரே நேரத்தில் வெளியேறுகிறது - கூத்தைப் பார்க்க வந்த கூட்டம்! மேற்கண்ட காட்சியை ஒரு மேற்கோளாகக் காட்டி - ஓர் உலகாயத உண்மையை, நமக்கு உணர்த்துகிறான் முந்நூற்று முப்பத்திரண்டாம் குறளில் - வள்ளுவன்!
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.
கூத்தாடும் அரங்கிற்குக் கூட்டம் ஒவ்வொருவராக வருவதும், கூத்து முடிந்த பின் கூட்டம் ஒரே கும்பலாய் வெளியேறுவதும்போல். செல்வம் சேரும்போது, சிறுகச் சிறுகச் சேர்வதும் - அது விலகும்போது ஒட்டுமொத்தமாய் ஒரே நேரத்தில் விலகுவதும் இவ்வுலகில் நிகழ்கிறது. (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 09-மார்ச் -2011)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---உலகாயதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சார்வாகமதம் - உலோகாயதம் - ஆன்மீகம் - லோகாயதம் - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=உலகாயதம்&oldid=1979680" இலிருந்து மீள்விக்கப்பட்டது