எல்லே

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

எல்லே(பெ)

  • ‘ஏ பெண்ணே' என்று தோழி முதலிய பெண்பாலாரை விளிக்க பயன்படும் சொல், குறிப்பாக அந்தோ என்ற பொருள் தரும் இரக்கக் குறிப்பிடைச் சொல்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • "எல்லே! இளங்கிளியே இன்னம் உறங்குதியோ!" (‘ஏ பெண்ணே! இளங்கிளியே! எல்லோரும் வந்த பிறகும் நீ உறங்குகின்றாயோ?’ என்ற பொருளில் தோன்றுமிடம் - திருப்பாவை பாசுரம் 15)
  • "எல்லே! இவை காணிய எய்தினனோ!" ('அந்தோ; இவற்றைக் காண்பதற்காகவா இங்கு வந்தேன்' என்ற பொருளில் தோன்றுமிடம் - யுத்த காண்டம், அதிகாயன் வதைப் படலம், கம்பராமாயணம்)


ஏடி

"https://ta.wiktionary.org/w/index.php?title=எல்லே&oldid=1212707" இலிருந்து மீள்விக்கப்பட்டது