எள்ளுப் பெயரன்
Appearance
எள்ளுப் பெயரன் (பெ)
பொருள்
- ஒருவரின் கொள்ளுப் பெயரரின் (கொள்ளுப் பேரரின்) மகன்
- ஒருவரின் கொள்ளுப் பெயரனின் (கொள்ளுப் பேரனின்) அல்லது கொள்ளுப் பெயர்த்தியின் (கொள்ளுப் பேத்தியின்) மகன்.
விளக்கம்
- கொள்ளுப்பெயரர் என்பது கொள்ளுப் பெயரன் அல்லது கொள்ளுப் பெயர்த்தியைக் குறிக்கும் பொதுச்சொல். அதே போல எள்ளுப்பெயரர் என்பது எள்ளுப் பெயரன் அல்லது எள்ளுப் பெயர்த்தியைக் குறிக்கும் பொதுச்சொல்.
- உறவு சிறுத்துப் போவதை, தானியங்களை உதாரணம் காட்டி பெயர் வைத்தனர் நம் மூதாதையர் பிள்ளையின் மகன் பேரன், அவன் பிள்ளை கொள்ளுப்பேரன் பேரனை விட தூர உறவுடையவர், கொள்ளுப்பேரனுடைய பிள்ளை எள்ளுப்பேரன். கொள்ளை விட எள் சிறியது. (அந்துமணி பதில்கள், தினமலர் வாரமலர், செப்டம்பர் 18,2011)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - English - great-great-grandson
( மொழிகள் ) |
சான்றுகள் ---எள்ளுப் பெயரன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி