கணையெக்கி
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- கணையெக்கி, பெயர்ச்சொல்.
- முன் துவாரம் வழியாக எறிகணைகள் ஏற்றப்பட்டு, நேரடியாகக் குறிவைக்காமல், வான்நோக்கி சுடப்படும் கணையெக்கி. இதில் சாய்கோணத்தை மாற்றுவதன் மூலம் எறிகணையின் எறி பாதையை மாற்றி குறியை மாற்றலாம்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]கணையெக்கியானது எறிகணைகளை எக்கி ஏவும் ஆற்றல் வாய்ந்தது. ஆதலால் 'எறிகணை' என்னும் சொல்லில் உள்ள 'கணை' என்னும் விகுதியையும் 'எக்குதல்' என்னும் சொல்லின் எக்கு என்னும் வினைவடிவினை எடுத்து அதனை இ விகுதியோடு புணர்த்தி எக்கி என்றாக்கி இரு சொற்களும் புணர்க்கப்பட்டுள்ளது.
கணை + எக்கி = கணையெக்கி[1]
எக்குதல் என்னும் சொல்லுக்கு,
-மேலே செல்ல வீசுதல்
-உள்ளிழுத்தல்
-தாக்கி யூடுருவுதல்
ஆகிய பொருட்கள் உள்ளன. இவை mortar செய்யும் அத்தினை காரியத்தினையும் குறிக்கிறது. அதாவது மோட்டார் என்னும் ஆய்தமானது எறியங்களை உயரத்திற்கு செலுத்துவதில்லை ; மாறாக மிக குறுகிய தொலைவிற்கு மட்டுமே செலுத்துகிறது ( கூடியது 4.5கி.மீ). மேலும் அது மனித வலு இல்லாமல் தானகவே எக்கி எறியத்தினை செலுத்துகிறது. அந்த எறிகணையனது எதனையும் தாக்கி ஊடறுத்துச் செல்லும் வலிமை வாய்ந்தது. ஆகவே இச்சொல்லானது mortar என்னும் இங்கிலீசுச் சொல்லுக்கான சரியான தமிழாக்கமாகும்.
பயன்பாடு
[தொகு]- ...பரந்தனில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 6 கணையெக்கிகள் கண்டெடுக்கப்பட்டன.
சொல்வளம்
[தொகு]- வேட்டெஃகம் - துமுக்கி - இயந்திரச் சுடுகலன் - தெறாடி - தகரி -சேணேவி - படைக்கலம் - தெறுவேயம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +