கயில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கயில்(பெ)

  1. பூரணம்
  2. உடைத்த தேங்காயின் பாதி
  3. ஆபரணத்தின் கடைப்பூட்டு
  4. பிடர். பிடரி
    • கயில்கலந் திருண்டுதாழ்ந்த கருங்குழல்(சூளா. சுயம். 112).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. perfection
  2. half of a coconut
  3. clasp of a necklace
  4. nape of the neck
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

வந்து மதுரை மதில் பொரூஉம், வான் மலர் தாஅய்,

அம் தண் புனல் வையை யாறு' எனக் கேட்டு, மின் அவிர் ஒளி இழை வேயுமோரும், பொன் அடர்ப் பூம் புனை திருத்துவோரும், அகில்கெழு சாந்தம் மாற்றி ஆற்றப் புகைகெழு சாந்தம் பூசுவோரும், கார் கொள் கூந்தல் கதுப்பு அமைப்போரும், வேர் பிணி பல் மலர் வேயுமோரும், புட்டகம் பொருந்துவ புனைகுவோரும், கட்டிய கயில் அணி காழ் கொள்வோரும்; வாச நறு நெய் ஆடி, வான் துகள் மாசு அறக் கண்ணடி வயக்கி, வண்ணமும் தேசும் ஒளியும் திகழ நோக்கி, வாச மணத் துவர் வாய்க் கொள்வோரும்; இடு புணர் வளையொடு தொடு தோள்வளையர், கட்டு வடக் கழலினர், மட்டு மாலையர், ஓசனை கமழும் வாச மேனியர், மட மா மிசையோர், பிடிமேல் அன்னப் பெரும் படை அனையோர் - பரிபாடல்-12 (இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கயில்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கயில்&oldid=1967950" இலிருந்து மீள்விக்கப்பட்டது