கருமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கருமம் (பெ)

 1. செயல்
 2. வினைப்பயன்
 3. தொழில்
 4. வேதசம்மதமான சடங்கு
 5. கடமைச் செயல்
 6. உத்தரகிரியை
 7. (இலக்கணம்) செயப்படுபொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. action; work; deed
 2. fruit of deeds; fate
 3. business; profession, occupation
 4. religious rites; duties that are enjoined by the Sastras
 5. moral duty; specific obligation
 6. funeral ceremonies
 7. (Gram.) object of a verb
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 • மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்டுஞ்சார்
எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரா ரவமதிப்புங் கொள்ளார் (நீதிநெறி விளக்கம், குமரகுருபரர்)
கருமமே கண்ணாயி னார். (குறள், 467)
 • எண்ணித் துணிக கருமம் (குறள், 467)
 • கரும வரிசையாற் கல்லாதார் பின்னும், பெருமை யுடையாருஞ் சேறல் (நாலடி, 249)
 • தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார் (குறள், 266)
 • கானப்பேர் கைதொழல் கருமமே (தேவா. 897, 10)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கருமம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :செயல் - சடங்கு - வினை - வினைப்பயன் - தொழில்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கருமம்&oldid=1633849" இருந்து மீள்விக்கப்பட்டது