உள்ளடக்கத்துக்குச் செல்

கருவேப்பிலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பொருள்

[தொகு]
  • கருவேப்பிலை, பெயர்ச்சொல்.
  1. கறிவேம்பின் இலை (பதார்த்த. 523.)
  2. காண்க--- கறிவேம்பு (பேச்சு வழக்கு)
  3. ஒருசெடிவகை (L.)
  • வெங்காரை(காட்டு கறியிலை)
மொழிபெயர்ப்புகள்
  1. curry leaf
  2. See...கறிவேம்பு
  3. china box
விளக்கம்
  • கறிவேப்பிலை என்று அறியப்படும் இந்த இலைகள் கறி, சாம்பார், ரசம், கூட்டு போன்ற உணவுப் பொருட்களில் மணமும் சுவையும் ஊட்ட சேர்ப்பர்... இதைத் தனியாகவும் துவையல், தொக்கு, பொடி முதலியவன செய்து அன்னத்துடன் பிசைந்து உண்பர்...
  • மருத்துவ குணங்கள்

கருவேப்பிலை அரோசிகம், சீதபேதியால் வரும் வயிறளைவு, புராணசுரம், பித்தம் , மந்தபசி, செறியாமை, வாந்தி, சூட்டால் ஏற்படும் ஓசையுடன் கூடிய மலக்கழிச்சல், குழந்தைகளுக்கு உண்டாகும் வாந்தி, ஓக்காளம் ஆகியனவற்றைக் குணப்படுத்தும்... இரைப்பைக்கு வலு சேர்த்தாலும், குடலில் வறட்சியை உண்டாக்கும்... ஆகவே இதைத் தனியாக உண்ணும்போது நெய்யை சற்று அதிகமாகச் சேர்த்துக்கொள்ளல் நல்லது..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கருவேப்பிலை&oldid=1405167" இலிருந்து மீள்விக்கப்பட்டது