கலக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கலக்கம் (பெ)

  1. கலங்குகை, தெளிவின்மை
  2. அங்கலாய்ப்பு, மனக் குழப்பம்
  3. துன்பம்
  4. அச்சம்
  5. புத்திமாறாட்டம்
  6. அழுகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. being agitated, as the surface of a sheet of water; turbidity
  2. disquiet, mental worry; discomposure, embarrassment
  3. distress, affliction
  4. terror, dread
  5. perplexity, distraction, bewilderment
  6. weeping, bewailing
விளக்கம்
பயன்பாடு
  • தூக்கக் கலக்கம்
  • துரை தூக்கக் கலக்கம் மாறாமல் புன்னகை செய்கிறான் (வேருக்கு நீர், ராஜம் கிருஷ்ணன்)
  • சீதாவின் கண்களில் ததும்பி நின்ற கண்ணீர்த் துளிகள் உலர்ந்து போயின. அவளுடைய மனதில் குடிகொண்டிருந்த பெரும் பாரம் இறங்கி விட்டது. கலக்கம் தீர்ந்து மனதில் தெளிவு ஏற்பட்டிருந்தது. தான் இனி கடைப்பிடிக்க வேண்டிய பாதைதான் என்ன என்பதைப்பற்றி அவள் ஒரு தீர்மான முடிவுக்கு வந்திருந்தாள். (அலை ஓசை, கல்கி)
  • மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா? (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

  • நலத்தக நாடிற் கலக்கமு மதுவே (தொல். பொ. 270)
  • கலக் கத்தைக் கையாறாக் கொள்ளாதா மேல் (குறள். 627)
  • மகபதி கலக்கங்கொண்டு (கந்த பு. தாரக. 2)
  • சித்தவிகாரக் கலக் கந் தெளிவித்த . . . தேவர் (திருவாச. 10, 6)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

சொல்வளம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=கலக்கம்&oldid=1283167" இருந்து மீள்விக்கப்பட்டது