குந்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

குந்து(வி)

 1. இருகாலையும் ஊன்றவைத்து உட்கார்
 2. உட்கார்
  • கந்தப்பு பலகையை இழுத்துப்போட்டுக் குந்தினார். (அழைப்பு, அ.முத்துலிங்கம் சிறுகதை)
 3. முன்னங்கால்களைமட்டும் ஊன்றி நில்
  • குந்தி யுறித்தயி ருண்டவர் (பாரத. கிருட். 199)
 4. நொண்டி நட
  • அடியொன்று கடிதோட்டிக் குந்திவந்தனன் (கம்பரா. கும்பக.348)
 5. வளை
  • குந்துவன்னெடுஞ் சிலைமுதற் படைகளும் (கம்பரா. பிரமாத்.56)
 6. தவறு
  • குந்தாவருந் தீமை (திவ்.திருவாய். 2, 6, 1)

(பெ)

 1. உட்காருதல்
 2. திண்ணையொட்டு
  • அரைச் சாக்கு நெல்லு காயப்போடக்கூடிய அளவிற்கு ஒரு குந்து. அதை ஒட்டியபடி கிடக்கும் மண்சுவரில் கரிக்கணக்கு எழுதாத இடமாகப் பார்த்து, ஒரு தேதியில்லாத முருகன் காலண்டர் பரிதாபமாகத் தொங்குகிறது. (கோடை மழை, அ.முத்துலிங்கம் சிறுகதை)
  • கிணற்றடியில் கால் கையைக் கழுவிப்போட்டுக் குந்திலே சாய்ந்தார். (அழைப்பு, அ.முத்துலிங்கம் சிறுகதை)
 3. நொண்டுகை
 4. பழத்தின் சிம்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்(வி)

 1. sit on the heels with legs folded upright
 2. sit, squat
 3. stand on tiptoe
 4. hop on one leg
 5. bend, as a bow
 6. fail, miss

(பெ)

 1. sitting on the heels, squatting
 2. pial or raised floor of a verandah used as a seat
 3. hopping
 4. fibre in fruits or roots
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

சொல் வளப்பகுதி


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குந்து&oldid=1634053" இருந்து மீள்விக்கப்பட்டது