உள்ளடக்கத்துக்குச் செல்

குருத்துவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

குருத்துவம் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (கிறித்தவத்தில்) ஒருவர் குருவாக ஏற்படுத்தப்பட்டு அடைகின்ற திருநிலை
  • குரு என்னும் திருப்பணியாள் நிலைக்கு ஒருவரை உயர்த்தும் சடங்கு. இது ஒரு திருவருட்சாதனம்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்

கத்தோலிக்கத் திருமறைச் சுவடி: "திருப்பலி மற்றும் திருவருட்சாதனங்களை நிறைவேற்றவும், நற்செய்தி அறிவிக்கவும், இறைமக்களை வழிநடத்தி உருவாக்கவும் உரிமை அளிக்கின்ற அருட்சாதனமே குருத்துவம் ஆகும்".

பயன்பாடு
  • இயேசு, என்றென்றும் நிலைத்திருப்பதால், மாறாத குருத்துவப் பணியைப் பெற்றுள்ளார் (எபிரேயர் 7:24) திருவிவிலியம்
  • செக்கரியா கடவுளின் திருமுன் குருத்துவப் பணி ஆற்றி வந்தார் (லூக்கா 1:8) திருவிவிலியம்
  • பிற இனத்தார் தூய ஆவியால் அர்ப்பணிக்கப்பட்ட, கடவுளுக்கு உகந்த காணிக்கையாகும்படி அவர்களுக்கு கடவுளின் நற்செய்தியை அறிவிப்பதே என் குருத்துவப் பணி (உரோமையர் 15:16) திருவிவிலியம்

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---குருத்துவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

உயர்வு - பெருமை - ஆசாரியத்தன்மை - கனம் - நன்றி

"https://ta.wiktionary.org/w/index.php?title=குருத்துவம்&oldid=1050726" இலிருந்து மீள்விக்கப்பட்டது