சள்ளை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சள்ளை(பெ)
- தொந்தரவு, தொல்லை
- சல்லிக்கெண்டை - பசும்பழுப்பு நிறமும் பொன்னிறக் கண்ணும் 25 பவுண்டு நிறையும் உள்ளதாய் நன்னீரில் வாழும் கெண்டை மீன்வகை
- ஆற்றுமீன் வகை.
- இடுப்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- annoyance, nuisance, trouble
- a freshwater fish, barbus carnaticus
- grey river-mullet, mugil
- hip, loins
விளக்கம்
பயன்பாடு
- ஆஸ்பத்திரிக்குச் செல்லும் வழியில் டிவிஎஸ் 50 உறுமிக்கொண்டு நின்றுவிட்டது. காலால் எற்றிக்கோண்டே சென்று ஓரமாக நிறுத்தினேன். சங்கிலி கழன்றுவிட்டது. சள்ளையாக இருந்தது. அதைக் கழட்டி மாட்டினால் கையெல்லாம் கறையாகிவிடும் (கோட்டி, ஜெயமோகன்)
- சள்ளைக்கடுப்பு - குளிர் மிகுதியால் நேரிடும் உடல்வலி - pain in the body caused by cold
- சள்ளைக்கடுப்பு - lumbago, pain in the loins
(இலக்கியப் பயன்பாடு)
- சள்ளைவெள்ளை யங்குருகு தானதுவா மெனக்கருதி வள்ளைவெண்மலரஞ்சி (தேவா. 628, 4)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சள்ளை--- DDSA பதிப்பு + வின்சுலோ +