திகிரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

திகிரி:
-தண்டசக்கரம்
திகிரி:
-தேர்
திகிரி:
-வண்டி
திகிரி:
-சூரியன்
திகிரி:
-மூங்கில்
திகிரி:
-மலை
(கோப்பு)

பொருள்[தொகு]

 • திகிரி, பெயர்ச்சொல்.
 1. வட்டவடிவு (பிங்.)
 2. உருளை
  (எ. கா.) ஒருதனித் திகிரி யுரவோன் (சிலப். 4, 2).
 3. தண்டசக்கரம்
  (எ. கா.) அத்திகிரி பரித்த பச்சை மண்ணெனலாகும் (காஞ்சிப்பு. திருநகரப். 76).
 4. திருமாலின் சக்கராயுதம்
  (எ. கா.) காலநேமி மேலேவிய திகிரிபோல் (கம்பரா. சித்திர. 40).
  (எ. கா.) குலால்மகன் முடுக்கி விட்ட மட்கலத் திகிரி போல (கம்பராமாயணம்)
 5. அரசாணை
  (எ. கா.) தீதின் றுருள்கநீ யேந்திய திகிரி (மணி. 22, 16).
 6. தேர்
  (எ. கா.) சேகரக் கூவிரத் திகிரி யூர்வோன் (ஞானா. 7, 17).
 7. வண்டி (யாழ். அக.)
 8. சூரியன்
  (எ. கா.) விசும்புடன் விளங்கும் விரைசெலற் றிகிரி (அகநா. 53)
 9. மூங்கில் (பிங்.)
 10. மலை(திவா.)
 • உரிச்சொல்
 • புறமொழிச்சொல்--உருது--digar--மூலச்சொல்
 1. காண்க... திகர் (C. G. )
 2. வேறு
  (எ. கா.) திகர் ஜில்லா. (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 • Noun
 1. circle, circular form
 2. wheel
 3. potter's wheel
 4. The discus weapon of lord vishnu, a hindu god
 5. royal authority
 6. chariot, car
 7. cart
 8. sun
 9. bamboo
 10. hill, mountain
 • Adjective
 1. another, different

விளக்கம்[தொகு]

 • பொதுவாக வட்ட வடிவில் உள்ளவற்றை குறிப்பிடும் போது திகிரி என்ற சொல் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திகிரி&oldid=1401434" இலிருந்து மீள்விக்கப்பட்டது