உள்ளடக்கத்துக்குச் செல்

தீற்றுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
தீற்றுதல்:
என்றால் பற்களைச் சுத்தம் செய்தல் என்பதும் ஒரு பொருள் ஆகும்...ஒரு பெண்மணி தன் பற்களை விளக்குகிறார்
தீற்றுதல்:
என்றால் பூசுதல்...இங்கு சுவர் வண்ணம் பூசப்படுகிறது...
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • தீற்றுதல், வினைச்சொல்.

(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)

  1. ஊட்டுதல்
    (எ. கா.) நென்மா வல்சி தீற்றி (பெரும்பாண். 343).
  2. சுண்ணமுதலியவற்றால் துவாரமடைத்தல்
  3. பூசுதல்
    (எ. கா.) வெண்மை தீற்றிய . . . மாளிகை (கம்பரா. நகரப். 27).
  4. ஆடையைச் சுருக்கெடுத்து மெதுவாக்குதல். (W.)
  5. கயிற்றின் முறுக்காற்றுதல் (W.)
  6. பல்விளக்குதல் (W.)
  • பேச்சு வழக்கில் தீட்டுதல் என உச்சரிப்பு மாறுகிறது

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To feed by small mouthfuls
  2. To cover and fill up a hole or crevice with mortar or clay
  3. To smear; to put on an outer coat of mortar or clay; to rub; to polish, as plaster
  4. To rub and smooth the folds of a cloth
  5. To stiffen a cord with glue
  6. To clean the teeth


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தீற்றுதல்&oldid=1284646" இலிருந்து மீள்விக்கப்பட்டது