உள்ளடக்கத்துக்குச் செல்

நாழிகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நாழிகை

  • (பெரும்பாலும் சோதிடம், பஞ்சாங்கம் முதலியவற்றில் பயன்படுத்தும்) 24 நிமிடம் கொண்ட ஒரு கால அளவு. பழங்காலத்தில் மக்கள் இப்போது உள்ள 1 மணி நேரக் கணக்கு போல நாழிகைக் கணக்கை பயன்படுத்தி வந்தனர்.
விளக்கம்
  • இருவிரல்களை உரசி ஒலி உண்டாக்குவதை நொடித்தல் என்போம். கண்களை மூடித் திறப்பதை இமைத்தல் என்போம். நொடிப் பொழுது, இமைப் பொழுது என்று இவற்றின் கால அளவைக் குறிப்பிடுகிறோம். ஒரு second என்பதோ ஒரு நொடி. அறுபது நொடி - ஒரு மணித்துளி (நிமிடம்) அறுபது மணித்துளி ஒரு மணி. பகல் முப்பது நாழிகை; இரவு முப்பது நாழிகை. ஒரு நாள் - அறுபது நாழிகை. இரண்டரை நாழிகைப் பொழுது, இப்போதுள்ள ஒரு மணி. காலை மணி பத்தாகும்போது, நாழிகையும் பத்தேயாகும். எப்படி? காலை ஆறு மணிக்கு முதல் நாழிகை தொடக்கம். 10 மணிக்கு இடையில் நான்கு மணி நேரம். நான்கு மணியை இரண்டரையால் பெருக்கினால் (4 x 21/2) பத்து வரும். ஆக பத்து மணி என்னும் நேரம் அந்த நாளின் பத்தாவது நாழிகையும் ஆகும். (மொழிப்பயிற்சி-51, கவிக்கோ ஞானச்செல்வன், 05 ஆக 2011)

1 நாழிகை = 24 நிமிடம்

2 1/2 நாழிகை = 1 மணி

2 நாழிகை = 1 முகூர்த்தம்

2 முகூர்த்தம் = 1 சாமம்

60 நாழிகை = 1 நாள்

7 நாள் = 1 வாரம்

15 நாள் = 1 பக்ஷம் (பட்சம்)

2 பக்ஷம் = 1 மாதம்

2 மாதம் = 1 ருது (பருவம்)

3 ருது = 1 ஆயனம்

2 ஆயனம் = 1 வருடம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாழிகை&oldid=1986743" இலிருந்து மீள்விக்கப்பட்டது