பச்சிலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பச்சிலை(பெ)

  1. பசுமையான இலை; பச்சையிலை
  2. பச்சிலைகளால்ஆகிய மருந்து; மூலிகை மருந்து
  3. மர வகை
  4. பன்றி வாகை
  5. ஒருவகைப் புகைச் சரக்கு
  6. ஒருவகைத் துகில்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. green leaf; fresh leaf
  2. medicament consisting of leaves; herbal medicine
  3. Mysore gamboge, garcinia xanthochymus
  4. tube-in-tube wood
  5. a fumigating substance
  6. A kind of ancient garment
விளக்கம்
பயன்பாடு
  • பச்சிலை வைத்தியம்
  • அவனது அப்பாவைப் பாம்பு கொத்தியது கண்ணில். எவ்வளவு நாட்டுவைத்தியம் செய்தும் குணமாகவில்லை. பச்சிலை தேடி எத்தனை ஊருக்கு அலைந்திருப்பான் அந்தச் சிறுவயதில். கடைசியில் எதுவும் உதவவில்லை ( தாய்மை, ரிஷான் ஷெரீப்)
  • பச்சிலை வாசனை, காட்டுப் பூக்களின் விநோதமான நறுமணம், மரங்களின் குளிர், எந்த விலங்கு எந்த நேரத்தில் நம்மைக் கடந்து போகுமோ என்கிற திகில் ( புதிய மனிதா... காட்டுக்கு வா!, விகடன்)
  • பாம்படக் கிழவியின் பச்சிலை மருந்துக்கு பேயும் ஓடிப்போகும்! (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

  • யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை (திருமூலர்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பச்சிலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :பசுமை - இலை - பச்சை - மூலிகை - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=பச்சிலை&oldid=1068610" இருந்து மீள்விக்கப்பட்டது