பசுமை
Appearance
பசுமை (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பச்சை நிறம்
- குளிர்ச்சி
- இளமை எ.கா: பசுங் காய்
- அழகு
- புதுமை
- சாரம்
- நன்மை
- செவ்வி
- உண்மை. எ.கா: உள்ள பசுமை சொல்லு
- பசுமை கலந்த பொன்னிறம். பசும்பொன்
- சால்வை வகை
- செல்வம், செழிப்பு
- மயிர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- greenness, verdure
- coolness, moistness
- youth, tenderness
- elegance, beauty, pleasantness
- newness, freshness, rawness
- essence, essential part of a thing
- good, advantage
- season, right time
- reality, truth
- greenish-yellow
- easy circumstances, prosperity
- cashmere shawl
- hair
விளக்கம்
பயன்பாடு
- கழனிகளெல்லாம் பெரும்பாலும் நடவு ஆகியிருந்தன. இளம் நெற்பயிர்கள் மரகதப் பச்சை நிறம் மாறிக் கரும் பசுமை அடைந்து கொண்டிருந்த காலம் (பார்த்திபன் கனவு, கல்கி)
- எடுப்பான தோற்றமும் அவருக்கு இருந்த வசதியுள்ளவர்களின் உடம்பு, மேனி மினுமினுப்பு, கண்களின் பார்வையில் ஒரு பசுமை, எல்லாம் அவருக்கும் வாய்த்திருந்தன (நெஞ்சக்கனல், நா. பார்த்தசாரதி)
- ஆல மரத்தில் தழைத்திருந்த இலைகள் ஒரு பசுமை; அரச மரத்தில் குலுங்கிய இலைகள் இன்னொருவிதப் பசுமை; தடாகங்களில் கொழு கொழுவென்று படர்ந்திருந்த தாமரை இலைகளில் மோகனப் பசுமை; வாழை இலைகளின் கண்கவரும் பசுமை; தென்னங் குருத்துக்களின் தந்தவர்ணப் பசுமை; பூமியில் இளம் புல்லின் பசுமை; ஓடைகளில் தெளிந்த நீரின் பசுமை; நீரில் அங்குமிங்கும் தத்திப் பாய்ந்த தவளைகளின் பசுமை (பொன்னியின் செல்வன், கல்கி)
- பசுமை நிறைந்த நினைவுகளே, பாடி திரிந்த பறவைகளே (திரைப்பாடல்)
- இயற்கையில் அழகென்று எதைச் சொல்கிறார்கள்? பசுமையை. ஏனென்றால் பசுமை மனிதனுக்கு உணவு தருவது. (இரவு , ஜெயமோகன்)
- மலைகள் சில காய்ந்து நின்றன, சில பசுமை பொலிந்து நின்றன (கும்பமேளா, ஜெயமோகன்)
- பசுமைப் புரட்சி - green revolution
- பசுமை இல்ல வாயு - greenhouse gas
- பசுமை மாறாக் காடுகள் - evergreen forest
(இலக்கியப் பயன்பாடு)
- உனது நேசப்பெருவெளி பசுமை தீய்ந்து
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பசுமை--- DDSA பதிப்பு + வின்சுலோ +