பஞ்சபாத்திரம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பஞ்சபாத்திரம்(பெ)
- பூசையில் அர்க்கியம், பாத்தியம், ஆசமனீயம், ஸ்நானீயம், சுத்தோதகம் என்பவைகளுக்கு உபயோகிக்கப்படும் ஐந்து நீர்வட்டில்
- அகன்றவாயுள்ள தீர்த்தபாத்திரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பெருமாள் கோவில்களில் 5 பாத்திரங்களில் பெருமாள் முன் இருக்கும் நீரில் ஒன்றைத்தான் நமக்குத் தருகிறார்கள். அதென்ன பஞ்ச பாத்திரங்கள்? அர்க்கயம் - கைகளுக்கு, பாத்யம் - பாதங்களுக்கு, ஆசமனீயம் - இது ஆசமனம், ஸ்நானீயம் - திருமேனிக்கு, சர்வார்த்த தோயம் - மற்ற அனைத்துக்கும். இவை தான் பஞ்ச பாத்திரங்கள்! இவை இல்லாமல் தண்ணீர் முகந்து வைக்க இன்னொரு பெரிய பாத்திரம், தரையில் இருக்கும். அதில் இருந்து நீர் எடுத்து தான் இந்த பாத்திரங்களுக்கு நீர் விடுவார்கள்!
- நமக்குக் கொண்டு வந்து கொடுக்கும் தீர்த்தம், சர்வார்த்த தோயம் என்ற அந்த ஐந்தாம் பாத்திரத்தில் இருந்து. அது தான் நடுவில் வைக்கப்பட்டு இருக்கும்! மற்ற அனைத்தின் நீரும் இந்த ஐந்தாவதில் இருந்து தான் போகவும், வரவும் செய்யும்!([1])
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பஞ்சபாத்திரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +