பதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

 • பதம், பெயர்ச்சொல்.
 1. சொல், வார்த்தை
 2. பக்குவம்
  சில்பதவுணவின் (பெரும்பாண். 64)
 3. உணவு. (திவா.)
  பதமிகுத்துத் துய்த்தல் வேண்டி (சிலப். 28, 189)
 4. சோறு
 5. அவிழ்
 6. தண்ணீர்
 7. ஈரம். (திவா.)
  மாவெலாம் பதம் புலர்ந்த (கம்பரா. மூல பல. 79)
 8. கள்.
  மகிழ்ப் பதம் பன்னாட் கழிப்பி (பொருந. 111)
 9. அறுகம்புல்
 10. இளம்புல்
 11. இனிமை.
  வெங்குருவரசர் பதம்பெற வெழுதி வரைந் திடு மேடு (திருவாலவா. 38, 40)
 12. இன்பம். (சூடா.)
 13. அழகு
 14. ஏற்றசமயம்.
  எண்பதத் தா லெய்தல் (குறள், 991)
 15. தகுதி
 16. பொழுது
 17. நாழிகை
 18. கூர்மை.
  கத்தி பதமாயிருக்கிறது
 19. அடையாளம்
 20. அளவை. (சங். அக.)
 21. பொருள். (யாழ். அக.)
 22. காவல். (யாழ். அக.)
 23. கொக்கு. (யாழ். அக.)
 24. முயற்சி. (யாழ். அக.)
 25. மாறுவேஷம். (யாழ். அக.)
 26. அழிவு (தேச இயக்கத்தில் சத்ரபதி சிவாஜி பாடல் - பாரதியார்)
 27. பாதம்

விளக்கம்
[தொகு]

 • ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துக்கள் சேர்ந்து, ஒரு பொருள் தந்தால் அது பதம் எனப்படும்.
 • இந்தி ச் சொல்லான पद (Word) (பத்) என்பது, பதம் என்ற இச்சொல்லின் உச்சரிப்பை ஒட்டி வருகிறது.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 • ஆங்கில உச்சரிப்பு - patam
 1. a word
 2. Proper consistency; required degree of hardness or softness, quality or fitness
 3. Cooked food
 4. Boiled rice
 5. A grain of boiled rice
 6. Water
 7. Dampness, moisture
 8. Toddy
 9. Bermuda grass
 10. Tender grass
 11. Gentleness, sweetness
 12. Joy, delight
 13. Beauty
 14. Fit occasion, opportunity
 15. Suitability
 16. Time
 17. Indian hour of 24 minutes
 18. Sharpness, as of the edge of a knife
 19. Sign, indication
 20. Measure
 21. Thing, substance
 22. Watch
 23. Crane
 24. Effort
 25. Disguise
 26. Death
 27. Foot
விளக்கம்
 • ...
பயன்பாடு
 • ...
(இலக்கியப் பயன்பாடு)
 • ...
(இலக்கணப் பயன்பாடு)
 • ...

சொல்வளம்[தொகு]

பதம்
பதவுரை, பதனீர்
எதிர்ப்பதம், பகுபதம், பகாப்பதம்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பதம்&oldid=1985635" இலிருந்து மீள்விக்கப்பட்டது