பதாகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பழங்காலத்து மெக்சிகோ முடியாட்சியின் சான் பாஸ் படையின் பதாகை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

படாகை என்றும் அழைக்கப்படும் பதாகை ஓர் அரசனின் அதிகாரத்தின் அடையாளமாகக் கருதப்படும் கொடியைக் குறிக்கும் சொல்லாகும். இதனால், அரசனைப் பதாகையான் என்றும் அழைப்பர். அதேபோல், ஒரு விருதின் அடையாளமாக உள்ள கொடியையும் இச்சொல் குறிக்கும்.[1] இவ்விரு பொருட்களிலிருந்து மாறுபட்டு, பரதநாட்டியத்தில், உள்ளங்கையையும் விரல்களையும் சேர்த்து உருவாக்கும் ஒரு நிலையைக் குறிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.[2] பெருவிரலையும் அணிவிரலையும் மட்டும் ஒன்றுசேர்த்து, பிறவற்றை நிமிர்ந்த நிலையில் வைக்கும் நிலையைத் திரிபதாகை என்பர்.[3]

(பெ)

பரதநாட்டியத்தில் பதாகை

பதாகை

  1. ensign, banner, standard - அடையாளக் கொடி, சின்னம்; விளம்பரக் கொடி
  2. Gesture with one hand in which the thumb is bent while the other fingers are held close and upright - அபிநயம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- ensign

பயன்பாடு[தொகு]

என் பதாகை தாங்கிய உன் முகம் - "பார்த்த முதல் நாளே", வேட்டையாடு விளையாடு, 2006

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பதாகை&oldid=1635246" இருந்து மீள்விக்கப்பட்டது