பயனர் பேச்சு:மகிழ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வாருங்கள்! உங்களை வரவேற்கிறோம் !!

வாருங்கள், மகிழ்!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி --> இருக்கும் பொத்தானை அழுத்தவும் . .

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள். புதிய சொற்களை சேர்க்க இங்கு செல்லுங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி

வருக!--செல்வா 03:31, 30 மார்ச் 2010 (UTC)

விளக்கம்[தொகு]

  • உங்களைச் சந்திப்பத்திலே மகிழ்ச்சி. மேலுள்ள புதிய சொற்களைச் சேர்க்கவும் என்பதனைக் காணவேண்டுகிறேன். புத்தகங்களில் உள்ள வடிவமைப்பினையும், பலரது கருத்துக்களையும் ஒன்றிணைத்து அப்புதிய படிவம் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஆலமரத்தடியில் இதன் வடிவமைப்பைப் பற்றி தங்கள் கருத்துகளைக் கூறவும்.

முதலில் பொருள், மொழிபெயர்ப்பு, அதன்பின் விளக்கம் என்ற வரிசையில் இருப்பது நலமென்று முடிவெடுக்கப் பட்டுள்ளது. உங்களைப் பற்றி அறிய ஆவலாக உள்ளேன். த*உழவன் 05:43, 1 ஏப்ரல் 2010 (UTC)

மகிழ்! விக்சனரிக்கு நீங்க வந்ததில் மகிழ்ச்சி. மேலும் பலப்பல பங்களிப்புகளைச் செய்திட உங்களை வேண்டுகிறேன். பூஜை என்ற சொல்லுக்கு நீங்கள் எழுதியிருந்த உள்ளடக்கம் கண்டேன்; கருத்துரையாக உள்ளது. அஃதை பூஜை பக்கத்தின் உரையாடல் பகுதியில் இடலாமே? -- பரிதிமதி 22:08, 5 ஏப்ரல் 2010 (இந்திய நேரம்)

சொல்லாய்வு குறித்து[தொகு]

  • பல சொற்களின் சொல்லாய்வு விவாதத்திற்குரியதே. இது பற்றி நம் விக்சனரிக் குழுமத்தில் பேசியிருக்கிறோம். இது குறித்து உங்களின் கருத்தினையும், உழைப்பினையும் நான் பேண விரும்புகிறேன். ஆதாரங்களை இணையுங்கள். எனக்கு 3மணிநேர மின்தடை வர உள்ளது. விரிவாக, பிறகு தொடர்வோம்.த*உழவன் 00:28, 9 ஏப்ரல் 2010 (UTC)
  • தமிழ்சொல்லைப் பற்றிய ஆய்வுகளை, பலர் செய்திருக்கிறார்கள். அவற்றில் மிக முக்கியமானதாக, பலர் நினைப்பது பாவாணர் அவர்களின் ஆய்வுகளையே. அவரின் படைப்புகளை ஒன்றைத்தவிர, மற்றவைகளை இங்கு தொகுத்துள்ளோம். அவற்றினை காண வேண்டுகிறேன்.
  • தமிழ் சொற்களின் உயர்வை நான் உணர்கிறேன். இருப்பினும் நடுநிலை காக்கவேண்டியது, நம் கடமையல்லவா? மேலும், இங்கிருந்து ஆங்கிலத்திற்கு சென்றது என்பது போல, அவர்களும் அதே காரணத்தினை முன்நிறுத்தி, எங்கள் மொழியிலிருந்து தான், உங்கள் மொழிக்கு வந்த து என்று சொல்ல வாய்ப்புண்டல்லவா? இதுபோன்ற விவாதம், கருத்துரையாடல் ஒருமொழியின் வளர்ச்சிக்கு அவசியமானதே. நமது கருத்தினைப் பலரும் ஏற்றுக் கொள்வர் என்று நாம் உறுதியாக சொல்லமுடியாது. பலரது கருத்தும் ஒன்றிணைப்பதற்கான இடமாக உரையாடற்பகுதியினைப் பற்ற எண்ணுகிறேன்.
  • சொற்பக்கத்தில் மொழிபெயர்ப்பினையும், அச்சொல்லைப் பயன்படுத்தும் விதத்தினை, பயன்பாடு என்ற பகுதியிலும், அச்சொல் இலக்கியத்தில் பயன்படுத்தியிருந்தால் இலக்கியப் பயன்பாடு என்ற பகுதியிலும் எழுதினால் நன்றாக இருக்கும்.

நம் தமிழ் மொழி உலகின் 6 மூத்த மொழிகளில் ஒன்று என்கின்றனர். அவைகளை ஆராயந்த பன்னாட்டு அறிஞர்களின் கருத்தினை நாம் தொகு வேண்டிய நிலையில் உள்ளோம். இதுபற்றியபிற தொடுப்புகளை, பிறகு மறவாமல் அனுப்புகிறேன்.

இது பற்றிய நூல்கள் இருப்பின் தெரியப் படுத்துங்கள். அவற்றினையும் மின்னூலாக மாற்றி (பாவணார்நூல்கள் போல), பலரும் கண்டுணர வழிவகுப்போம். தொடரட்டும் உங்களின் பணி. உங்கள் பதிவுகளில் சிலவரிகளை மட்டுமே, இடம் மாற்றியுள்ளோம். உங்களின் கருத்தறிய ஆவல். நன்றி மகிழ். வணக்கம். 04:29, 9 ஏப்ரல் 2010 (UTC)

தமிழின் பெருமைக் குறித்த அயலக அறிஞருரை[தொகு]

  1. George L. Hart(உலகின் 6 தொன்மொழிகளையும் ஆய்ந்தவர்)

உங்களது சாட்டு வாக்கியங்களுக்கானத் தொகுப்பு அரிய செயலாகும். தமிழ் மற்றும் ஆங்கில மொழிக்கான பகுப்புகள் உருவாகப் பட்டுள்ளன. நன்றி. தொடரட்டும், உங்கள் செஞ்செயல். வணக்கம்.த*உழவன் 12:58, 12 ஏப்ரல் 2010 (UTC)

  • மகிழ்ந்தேன், மகிழ்! நன்றி. அப்புறம் சொல்ல மறந்துவிட்டேன். பகுப்பு:பெயர்ச்சொற்கள் என்பதனைக் காணவும். பெயர்ச்சொல் என்றாலே, தமிழ் பெயர்ச்சொல் என்பதனைக் குறிக்கும். உங்களைப் போன்றே, நானும் பகுப்பு:தமிழ்-பெயர்ச்சொற்கள் என்று முன்பு உருவாக்கினேன். பேராசிரியர்செல்வா அங்ஙனம் குறிப்பிடத் தேவையில்லை என்பதனை உணர்த்தினார்.ஏனெனில், தமிழ் விக்சனரி என்பதால் பிற மொழிகளுக்கு மட்டும் அடைமொழி இருந்தால் போதும். அதனை உங்களிடமும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எனவேபகுப்பு:சாட்டு வாக்கியங்கள் என்ற பகுப்பே போதுமானது. அதன்கீழ் பிற மொழி பகுப்புகளை, துணைப்பகுப்புகளாக அடங்கும் படி செய்யலாம்.

இச்சாட்டு வாக்கியங்கள் நான் பயன்படுத்தும் பல இணைய அகரமுதலிகளில் இல்லை. இத்தொகுப்புப் பணி காலத்தினையும் கடந்து நிற்கும் அரியப்பணியே. எனக்கு இக்குறள் தான் சட்டென நினைவுக்கு வருகிறது. மிக்க நன்றி. மகிழ்.

தொடர்ந்து உங்கள் சாட்டு வாக்கியங்களை, காண ஆவலுடன் முடிக்கும், த*உழவன் 05:39, 13 ஏப்ரல் 2010 (UTC)

அப்பகுப்பினை, பெயர்மாற்ற காரணம்[தொகு]

  • தாங்கள் உருவாக்கியப் பகுப்பினை பெயர்மாற்றம் செய்துள்ளேன். பகுப்பு:தொகுப்புச் சொற்கள் என்பதில் புறமொழிச்சொற்கள் என்பதற்கு அடுத்து புறமொழிகளிலுள்ள தமிழ் சொற்கள் வருமாறு பெயர் மாற்றம் செய்துள்ளேன். எனவே, ஏற்கனவே இருந்த பிற மொழியில் உள்ள தமிழ் சொற்கள் என்பதனை நீக்கியுள்ளேன். அதிலிருந்த சொற்கள், புதிய பகுப்பிற்கு மாற்றி விட்டேன். இனிவரும் காலங்களில், பகுப்பு:புறமொழிகளிலுள்ள தமிழ் சொற்கள் என்ற புதிய பகுப்பைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். த*உழவன் 05:28, 18 ஏப்ரல் 2010 (UTC)

நன்றி[தொகு]

அண்மையில் பல சொற்களுக்கு நீங்கள் தகுந்த எடுத்துக்காட்டு வரிகள் சேர்த்து செம்மையாக்கியமைக்கு மிக்க நன்றி! --செல்வா 19:26, 18 ஏப்ரல் 2010 (UTC)

மொழிப்பட்டை பற்றிய கருத்துக் கணிப்பு[தொகு]

பயனர்களின் கருத்து வேண்டப்படுகின்றது. ஒரு சொல்லின் மொழியை அறிவிக்கும் பட்டையை உருவாக்குவது பற்றி உங்கள் கருத்துகள் வேண்டப்படுகின்றது. இக் கருத்துக் கணிப்பு 4 நாட்கள் நடைபெறும் (சூன் மாதம் 8 ஆம் நாள்வரை)). மொத்தம் மூன்று கேள்விகள் உள்ளன. உங்கள் கருத்துகளைப் ஆலமரத்தடி என்னும் பக்கத்தில் பதிவு செய்யுங்கள். நன்றி.--செல்வா 15:08, 4 ஜூன் 2010 (UTC)

கருத்து-உரையாடற் பகுதி[தொகு]

  • சொற்பக்கம் கருத்துக்களைத் தெரிவிக்காமல், அச்சொல்லின் உரையாடற் பக்த்தில் கருத்திடவும்.இதிலுள்ள படி கருத்துகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.நன்றி.த*உழவன் 06:35, 30 ஜூன் 2010 (UTC)

ஒவ்வொரு உரையாடலுக்கு பிறகும், ~~~~ என்ற குறியீட்டை இடுங்கள். அக்குறியீடுகள் உங்கள் பெயர், தேதி, நேரம் முதலியவற்றினைத் தானாகவே குறித்து விடும். என்பேச்சுப் பக்கத்தினையும், உற்சாகம் பக்கத்தினையும் காணவும்.நன்றி(த*உழவன் 05:32, 5 ஜூலை 2010 (UTC))

பாரசீகச்சொற்கள்[தொகு]

  • உங்களது இந்த பகுப்புத்துவக்கம் மகிழ்ச்சியளிக்கிறது. பத்திரங்களில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் கஸ்பா என்ற சொல்லும் பாரசீகச் சொல்தானே? இந்திய இராணுவ அமைப்பிலுள்ள பல பதவிப் பெயர்கள் பாரசீகச்சொற்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவற்றையும் கவனியுங்கள்.--த*உழவன் 06:56, 23 ஜூலை 2010 (UTC)

சொற்றொடர் நீக்கம்[தொகு]

பினாமி என்பதை விட, இரவல் பெயர் என்பதே நல்ல தமிழ் வாக்கியமாகும். என்னும் சொற்றொடரை நீக்கியுள்ளேன். ஈடான தமிழ்ச்சொற்கள் நாம் தரலாமேயொழிய மேற்கண்டவாறு சொல்லுதல் பொருந்தாது (சாய்வு, அறிவுரை என்பது போல் ஆகிவிடும்). சில கருத்துகளைத் தனிக்கருத்துகளாக உரையாடல் பக்கங்களில் இடுவது வேறு, சொற்பொருளுக்கான பக்கங்களில் இடுவது வேறு. அருள்கூர்ந்து புரிந்து கொள்ள வேண்டுகிறேன். மேலும் சில சொற்களின் வேர் எந்த மொழியில் இருந்து வந்தது என்பதில் உறுதி இல்லாமல் இருக்கலாம். ஆகவே எந்தச் சான்றுகோளின் அடிப்படையில் கடன் வழங்கிய மொழியைச் சுட்டுகிறோம் என்பதைத் தருவது நல்லதென்று நினைக்கின்றேன். பினாமி என்பது உருதுச்சொல் என்கிறது சென்னைப் பேரகரமுதலி. --செல்வா 22:28, 23 ஜூலை 2010 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:மகிழ்&oldid=763439" இலிருந்து மீள்விக்கப்பட்டது