பெருந்திணை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பெருந்திணை, .
- பொருந்தாக் காதல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- அகத்திணை ஏழினுள் ஒன்று. ஒத்த சாதியல்லாத, விதிக்கு மாறான, தன்னைவிட வயதில் முதிர்ந்தவளுடனான, அல்லது மனம் ஒவ்வாதவரோடு கூடும் காதல்.
பயன்பாடு
- நாவலைப் படிக்கும்போது எங்கள் பழைய இலக்கியங்களில் சொல்லப்படும் பெருந்திணை அதாவது பொருந்தாக் காதல் நினைவுக்கு வருகிறது. வயது வித்தியாசத்தினால் இது பொருந்தாக் காதல் ஆகவில்லை. (மூன்றாம் சிலுவை, அ.முத்துலிங்கம், உயிர்மை)
- உள்ளம் ஒத்த தலைவனும், தலைவியும் ஒன்றுகூடித் தாம் துய்த்த இன்பம் இத்தகையது எனப் பிறருக்குப் புலப்படுத்த முடியாததாக விளங்குவது அகம்; அதாவது காதல். இதை "அன்பின் ஐந்திணை' என்றே தமிழ் இலக்கணம் கூறுகிறது. தலைவன், தலைவி பெயர்களைச் சுட்டிக்கூறுவதையும் தடை செய்கிறது. ஒருதலைக் காதலை கைக்கிளை என்றும், பொருந்தாத காதலைப் பெருந்திணை என்றும் கூறுகிறது. இவை இரண்டும் ஒவ்வாத காதலாகும். (காலம் செய்யும் கோலம், தினமணி, 18 பிப் 2011)
- (இலக்கியப் பயன்பாடு)
- கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் (தொல். பொ. 1).
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பெருந்திணை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற