பேச்சு:சுரைக்குடுக்கை
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
இது நீரில் மிதப்பதற்கு தானே பயன்படும். உடலை தேய்த்து குளிக்க என்று குறிப்பிடப் பட்டிருப்பது தவறல்லவா? பீர்க்கங்காய் நாரில் தான் உடலை தேய்த்து குளிப்பர் --த♥ உழவன் +உரை.. 04:26, 22 நவம்பர் 2012 (UTC)
- ஆம், நீங்கள் சொல்வது மெத்த சரியே!! பீர்க்கங்காய் நார்தான் உடலை தேய்த்துக் குளிக்கப் பயன்படும்... 'பீர்க்கங்குடுக்கை' என்னும் புதிய பக்கத்தை உருவாக்குகிறேன். தற்போதுள்ள 'சுரைக்குடுக்கை' என்ற பக்கத்தை படத்தோடு நீக்கிவிடுங்கள். என் தவறுக்கு மன்னிக்க வேண்டுகிறேன் ..சிறு குழப்பம் என் மதியில்...இனிமேலும் இத்தகைய தவறுகள் ஏற்படாதவாறு எச்சரிக்கையாக இருக்க முயற்சிக்கிறேன். --71.62.61.237 14:15, 22 நவம்பர் 2012 (UTC)
- நீக்க வேண்டியதில்லை, இதை அப்படியே பீர்க்கங்குடுக்கை என்ற தலைப்பிற்கு நகர்த்தி விடுங்கள். பார்க்க விக்கிப்பீடியா உதவிப்பக்கம் w:உதவி:பக்கத்தை நகர்த்துதல்--சண்முகம்ப7 (பேச்சு) 15:42, 22 நவம்பர் 2012 (UTC)
- நான் தனியாகவே 'பீர்க்கங்குடுக்கை' என்னும் தலைப்பில் ஒரு பக்கத்தை உருவாக்கிவிட்டேன்.'சுரைக்குடுக்கை'
பக்கத்தில் நான் கொடுத்துள்ள விளக்கமும், பின்னர் இடப்பட்ட படமும் வேறு தலைப்பிற்கு நகர்த்த ஒத்துவராது. நீக்கிவிடுதலே நல்லது. நன்றி.--71.62.61.237 16:19, 22 நவம்பர் 2012 (UTC)
- நீக்கலாம் ஒன்றும் ஆட்சேபனையில்லை, நீக்குவதை விட வேறு வழிகள் இருந்தால் அதை முயல வேண்டும் என்பதே எனது எண்ணம், அதனாலேயே நகர்த்தல் பற்றி கூறினேன், இப்போது மற்றொரு எண்ணம் தோன்றுகிறது, பொருளையும் விளக்கத்தையும் ஏன் சுரைக்குடுக்கைக்கு ஏற்றவாறு மாற்றக் கூடாது? சுரைக்குடுக்கை என்பதும் ஒரு உருவாக்கப்பட வேண்டிய சொல்தானே--சண்முகம்ப7 (பேச்சு) 05:13, 23 நவம்பர் 2012 (UTC)
- நீக்குவதைவிட பொருளையும் விளக்கத்தையும் மாற்றுதல் சிறந்தது. பழ.கந்தசாமி (பேச்சு) 15:52, 23 நவம்பர் 2012 (UTC)
- தமிழ்ப் பேரகர முதலியிலுள்ள பொருளுக்கு மாற்றிவிட்டேன். பழ.கந்தசாமி (பேச்சு) 16:01, 23 நவம்பர் 2012 (UTC)
- விரைவில் படங்களை எடுத்து, விக்கிப்பொதுவகத்தில்(Commons) ஏற்றி, இங்கு இணைக்கிறேன்.--த♥ உழவன் +உரை.. 01:47, 25 நவம்பர் 2012 (UTC)