பயனர் பேச்சு:Pazha.kandasamy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
Chat bubble 1.svg புதிய உரையாடலைத் தொடங்குக Chat bubble 1.svg
Gnome-stock person admin2.svgStar with eyes.svg

பதிவேடுகள்

20092010201120122013

தமிழ்-தமிழ்-ஆங்கிலம் அகரமுதலி திட்டம்[தொகு]

இதற்காக வரும் பிப்ரவரி மாதம் சோதனை ஓட்டம் நடத்த, திட்டமிட்டு செயல்படுகிறேன்.தங்களுக்கு மின்னஞ்சலொன்றை அனுப்பியுள்ளேன்.--16:16, 12 சனவரி 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

நெறி/நெரி[தொகு]

கந்தசாமி ஐயா, நேற்று strangle என்ற சொல்லிற்கு 'நெறி' என்ற பொருளைப் பதிவேற்றினேன். பிறகு சற்று சிந்தித்துப் பார்த்ததில், அது 'நெரி'யாக இருக்குமென்று தோன்றியது. போக்குவரத்து நெ'ரி'சல் என்று தான் சொல்கிறோம். தேடித் பார்த்ததில் பொன்னியின் செல்வனிலே கூட 'நெறி' வினைச்ச்சொல்லாக வருகிறது. உங்கள் கருத்தைத் தெரிந்து கொள்ள ஆவல் :) Azhagiya manavalan 17:00, 20 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

மலாய்-தமிழ் அகரமுதலி[தொகு]

நலம்.பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் சந்திப்போம்.இன்னும் ஒரு வாரத்தில் மலாய்-சீனம் அகரமுதலியை பதிவேற்ற உள்ளேன். விரைவில் திட்டப்பக்கத்தை இங்கு அறிவிக்கிறேன்.கணினி இருந்தாலும், இணைய இணைப்பு வசதியில்லையென்பதால், உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப இயலவில்லை. மீண்டும் சந்திப்போம். வணக்கம்.--04:04, 23 சனவரி 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

முதற்பக்க அறிமுகம் வேண்டல்[தொகு]

வணக்கம். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறேன். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்சனரி:பங்களிப்பாளர் அறிமுகம்/பழ. கந்தசாமி பக்கத்தில் சேர்க்க முடியுமா? w:விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். ஒருவேளை, உங்கள் தனிப்பட்ட தகவல், புகைப்படத்தைப் பகிர விரும்பாவிட்டாலும் உங்கள் விக்சனரிப் பங்களிப்புகளை ஆவணப்படுத்தவும், காட்சிப்படுத்தவும் இது உதவும். நன்றி--இரவி 12:20, 14 பெப்ரவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

உதவி: புதிய சொற்கள் சேர்பதற்கான வார்ப்புருகள் தேவை....[தொகு]

ஒரு வேளை இந்த பக்கத்தை http://ta.wiktionary.org/w/index.php?search=fsdfsdf&title=சிறப்பு%3ASearch அணுகும் அணுக்கம் தங்களுக்கு இருந்தால் செப்பனிடுங்கள். ஆங்கில சொற்க்களஞ்சியத்தில் புதிய சொற்களை சேர்க்கும் பொழுது Noun,Verb ... போன்றவற்றிற்கு ஏற்கனவே உருவாக்கி வைத்து உள்ள templates உபயோகித்துக் கொள்ள தெரிவுகள் உள்ளன. ஆனால் தமிழில் சொற்களைச் சேர்க்கும் பொழுது அவைகள் வருவதில்லையே இவற்றை செய்ய முடியுமாயின்; வினைசொற்கள் , பெயர்ச்சொற்கள் அனைத்தும் ஒரே வடிவில் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. பின்வரும் தொடுப்புகளைச் சென்று பார்த்தால் தங்களுக்குத் நான் கூற வருவதை தெரிந்து கொள்ள முடியும் என்று தோன்றுகிறது. http://en.wiktionary.org/w/index.php?search=sdfsdfdsfd&title=Special%3ASearch இங்கு சில பொத்தான்கள் (Buttons) உள்ளன இவற்றைப் போல தமிழிலும் செய்தால் அனைத்து சொற்களும் ஒரே கட்டமைப்பில் இருக்க முடியும் என்று எண்ணுகிறேன். அன்புடன் -Pitchaimuthu2050 (பேச்சு) 12:44, 27 பெப்ரவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

 • அப்படிப்பட்ட வார்ப்புரு நிச்சயம் நன்மை தரும். இதைச் செய்ய என்ன தேவை என எனக்குத் தெரியவில்லை. தகவலுழவனிடம் கேட்டால் அவரால் நிச்சயம் உதவமுடியும் என நினைக்கிறேன். அவர் பக்கவார்ப்புருக்களை அவர் அவ்வப்போது உருவாக்கி வருகிறார். நன்றி. பழ.கந்தசாமி (பேச்சு) 16:08, 27 பெப்ரவரி 2012 (UTC)Reply[பதில் அளி]
  • இரண்டு வருடங்களுக்கு முன் முயன்றேன். சில அணுக்கத் தடைகள் உள்ளது. இப்போதைக்கு அதனை இரவி மட்டுமே செய்ய இயலும். அவர் மட்டுமே பல தமிழ் விக்கித்திட்டங்களை கவனிக்கிறார். விக்சனரிக்கென்று, இன்னும் ஒரு அதிகாரி வேண்டும். அதற்கு திரு.பழ.கந்தசாமி இணக்கம் தெரிவிக்க வேண்டுகிறேன். அவர் இங்கு பங்களிப்பதில் இருந்தே நடுநிலையோடு, அனைவரிடமும் கருத்தினை நிலைநாட்டி, தமிழ் விக்சனரியின் முன்னேற்றத்திற்கு கருத்து சொல்வதோடு, இடைவிடாது செயல்பட்டுள்ளார். அவரின் கருத்து கண்டு, அவரை முன்மொழிய வேண்டும்.ஆவலுடன்..--06:09, 10 மார்ச் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
 • தகவலுழவன், நன்றி. பலரும் விரும்பித் தேவைப்படும் அணுக்கத்தை அளித்தால் இங்கு தினம் பங்களிப்பவன் என்ற முறையில் எந்நாளும் உதவத் தயாராக உள்ளேன். பழ.கந்தசாமி (பேச்சு) 02:59, 11 மார்ச் 2012 (UTC)Reply[பதில் அளி]
மிக்க மகிழ்ச்சி. சில ஐயங்களை தெளிவுபடுத்திக் கொண்டு, விரைவில் உங்கள் பெயரை முன்மொழிகிறேன்.வணக்கம்.--04:40, 11 மார்ச் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

ஒருங்கிணைக்கலாமா?[தொகு]

பகுப்பு:எசுப்பானியம் - உடற்பகுதிகள் உள்ளது. அதோடு பகுப்பு:எசுப்பானியம் - உடலியல் என்ற பகுப்பினை இணைக்கலாமா?--06:03, 10 மார்ச் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

AWB ஐயம்[தொகு]

நாம் ஆங்கிலச் சொற்களை உருவாக்கும் போது, அனைத்து எழுத்துக்களையும், பொதுவிதியின் படி, கீழ்ஆங்கில எழுத்தில் உருவாக்குகிறோம். AWBயும் முன்பு கொடுக்கப்பட்ட சொற்களை அப்படியே தரவேற்றியது. தற்பொழுது நாம் கீழ்எழுத்துக்களில் தரவுகளைக் கொடுத்தால், புதியதாக உருவாக்கும் ஆங்கிலச்சொல்லின் முதல் எழுத்தை மட்டும், ஆங்கில மேலெழுத்தாக மாற்றி பதிவேற்றுகிறது. ஆகவே, பதிவேற்றுவதில், சிறுதடை உள்ளது. தமிழ் சொல்லைப் பொருத்தவரை, தமிழ் இலக்கியங்களை இணைப்பதில் காலதாமதம் ஆகிறது. அவ்வாறு இணைக்காமல் பதிவேற்றிவிட்டு, பிறகு மீண்டும் ஒரு முறை இலக்கியமேற்கோள்களுக்கென பதிவேற்றலாமா? ஆம் எனில் ஒரு வாரத்தில் 20-30000சொற்கள் பதிவேற்ற இயலும். உங்களின் கருத்தறிய ஆவல்.--06:23, 27 மார்ச் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

 • AWB ஆங்கலச் சொற்களின் முதலெழுத்தை மேலெழுத்தாக மாற்றினால், நாம் பைத்தான் மூலம் பதிவேற்றலாம். எனது கணினியில் பைத்தான் script உள்ளது.
 • தமிழ்ச் சொற்களைக் குறைந்தபட்சம் தமிழ்ப் பேரகரமுதலியிலுள்ள இலக்கிய மேற்கோளுடனாவது பதிவு செய்துவிடுவது நல்லது. இல்லையெனில், மீண்டும் அனைத்துச் சொற்களிலும் அதைச் சேர்ப்பது கடினமாக இருக்கும் என நினைக்கிறேன். உஙகளிடமுள்ள சொற்பட்டியல் எதை மூலமாகக் கொண்டது? நிறைய இலக்கியச் சொற்கள் உள்ளனவா? முடிந்தால் அவற்றை என் பார்வைக்கு அனுப்பினால், என்ன செய்யலாம் எனக் கலந்துரையாட வசதியாக இருக்கும். நன்றி. பழ.கந்தசாமி (பேச்சு) 06:43, 27 மார்ச் 2012 (UTC)Reply[பதில் அளி]

பைத்தான்[தொகு]

கோப்புகளை நாளை ஒழுங்கு படுத்தி அனுப்புகிறேன். எது மாதிரி கோப்பு பைத்தானுக்கு வேண்டும் என்று எனக்குத்தெரியவில்லை. பதிவேற்றிய கோப்பு மாதிரியை அனுப்பவும். --07:02, 27 மார்ச் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
கோப்புச்சோதனைக்காக, மின்னஞ்சல் ஒன்றினை, தங்களுக்கு அனுப்பியுள்ளேன்.--00:09, 28 மார்ச் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
 • மீண்டும் கோப்பினை, உங்களின் வழிகாட்டுதல்படி, சரி செய்து அனுப்பியுள்ளேன். --04:34, 29 மார்ச் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
 • தகவலுழவன், நன்றி. உங்கள் கோப்புகளைப் பதிவேற்றிப்பார்த்தேன், புதிய பக்கங்கள் மட்டும் சேர்ந்துள்ளன. ஏற்கனவே உள்ள பக்கங்களை எந்த மாற்றமும் செய்யவில்லை. தற்போதைக்கு எனது பயனராகப் பதிவேற்றினேன். தகவலெந்திரன் பயனர், மற்றும் கடவுச்சொல் தெரியாததால் அதைப் பயன்படுத்தவில்லை. நான் உங்களிடம் பேசும்போது வாங்கிக்கொள்கிறேன்.
 • சொல்லை அடுத்து சில blanks இருந்தன. அவற்றை மட்டும் நான் நீக்கவேண்டியிருந்தது.
 • பொருள் பகுதியில் அக இணைப்புச் சேர்த்தாலும் நலமாக இருக்கும்.
 • தொடர்ந்து ஆர்வத்துடன் பங்களித்துவருவதை உண்மையிலே பாராட்டுகிறேன். பழ.கந்தசாமி (பேச்சு) 06:57, 29 மார்ச் 2012 (UTC)Reply[பதில் அளி]
 • மிக்க மகிழ்ச்சி. உண்மையில் என் சோம்பலை விரட்டி, என்னை செயல் பட வைப்பவரில் நீங்களே முன்னணி.பைத்தானைக் கற்க இந்த சைத்தான் ஏங்குகிறது. காசு கொடுத்த கற்கவும் முயற்சி எடுத்தேன். வெளியூர் செல்லவேண்டும் என்பதால் இரண்டு அர்த்தமாக இருக்கிறேன்.சுந்தரிடம் கேட்டுப் பாரத்தேன். அவர் சுயதொழில் என்பதால் நேரமில்லாமல் தவிக்கிறார்.இந்த பக்க வடிவில் விளக்கம், பயன்பாடு, சொல்வளப்பகுதி வார்ப்புருக்களை எடுத்து விடலாமென்று எண்ணுகிறேன். மற்றொன்று, இது போல பக்க வடிவம் இருப்பின், மற்ற விக்கிகளைப் போல எளிமையாக நன்றாக இருக்குமென எண்ணுகிறேன்.இன்று இரவு பிறவற்றினையும் அனுப்புகிறேன். நான் அனுப்பிய கோப்பில் TRIM செய்ய வேண்டும் அப்படித்தானே? எனினும், சீர்செய்த உங்கள் பதிவேற்றியக் கோப்பினை அனுப்பவும். யார் கணக்கில் ஏற்றினால் என்ன? தமிழ் விக்சனரி வளர்ந்தால் சரி. பணப்பணிக்குச் செல்கிறேன். இம்மனப்பணி 10மணி நேர இடைவெளிக்குப் பிறகு வருகிறேன்.வணக்கம்.--07:11, 29 மார்ச் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

பிற கோப்புகள்[தொகு]

 • உரிச்சொற்களுக்கு அனுப்பியுள்ளேன். சரியா? ஐயமொன்றையும் வினவியுள்ளேன்.ஆம். எனில், அடுத்து பெயர்ச்சொற்களுக்கு அனுப்புகிறேன்.தகவலுழவன் (பேச்சு)
 • தகவலுழவன், நன்றி. u என்பது உரிச்சொல்லைக் குறிக்க. n-பெயர்ச்சொல், v-வினை என வைத்துள்ளேன். சில சொற்களைப் பதிவேற்றிப் பார்த்ததில் ஒன்றைக் கவனித்தேன். ஒரு சொல்லுக்கு பல பொருள்கள் இருந்தால்மட்டும், ஒவ்வொரு பொருளையும் தனி column-த்தில் இடவேண்டும். ஒரு பொருள் பல வார்த்தைகளைக் கொண்டிருந்தால், அவ்வார்த்தைகள் அனைத்தையும் ஒரை colum-த்தில் இடவேண்டும். பலபொருள் இருந்தால் ஒவ்வொரு பொருளையும் பதிவேற்றும்போது தனித்தனி வரியில் இடுமாறு அமைக்க அதுவசதி. உதாரணமாக, unnegotiable என்ற சொல்லுக்கு "பாங்கு பத்திர வகையில் மாற்றத்தகாத" என்பது ஒரே பொருள் என்பதால் அதை ஒரே colum-த்தில் இட்டால் வசதியாக இருக்கும். aback என்பதற்கு பின்புறமாக, பின்னோக்கி என 2 column-த்தில் இட்டால் பதிவேற்றத்தில் இரு தனித்தனி வரிகளில் பொருள் வரும். அவ்வாறு மாற்றி அனுப்ப இயலுமா? நன்றி. பழ.கந்தசாமி (பேச்சு) 07:53, 30 மார்ச் 2012 (UTC)Reply[பதில் அளி]
நீங்கள் பதிவேற்றியச்சொற்களைக் கண்டேன். சில மாற்றங்களைச் செய்துள்ளேன். காணவும். (எ. கா.) unnegotiable .மின்னஞ்சலில் திருத்தப்பட்டக் கோப்பினை அனுப்பியுள்ளேன். மற்றவை பிறகு..--19:16, 30 மார்ச் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
 • தகவலுழவன், மிக்க நன்றி. நீங்கள் அனுப்பிய உரிச்சொற்களில் புதியவை அனைத்தும் பதிவேற்றம் ஆகிவிட்டன. ஏறத்தாழ 250 புதிய சொற்கள் சேர்ந்திருக்கும். மீண்டும் உங்கள் உற்சாகத்துக்கு நன்றி. பழ.கந்தசாமி (பேச்சு) 23:11, 30 மார்ச் 2012 (UTC)Reply[பதில் அளி]

வடிவம்[தொகு]

கண்டேன்.மகிழ்ந்தேன்.பொருட்பகுதியில், #என்ற குறியீட்டை, இனி பயன்படுத்தலாம் என எண்ணுகிறேன். ஏனெனில்,புதுப்பயனர் தற்பொழுதுள்ள குறியீடுகளை இட, நான்கு விசைகளைப் பயன்படுத்த வேண்டும். தமிழ் சொற்களுக்கு, #மற்றும்#:பயன்படுத்துவது போல, இதற்கும் அமைந்தால், ஒரு பொது விதியாக, புதுப்பயனர் கருத வாய்ப்புண்டு. எந்த ஒரு மொழியின் சொல்லுக்கும், பொருளை எழுதும் போது, இதனை பொது விதியாக இருக்க எண்ணுகிறேன். பக்க வடிவத்தில் ஒரு ஒற்றுமை இருப்பின், புதியவர் தெளிவாகப் புரிந்து செயல்படுவர் என்ற நோக்கத்தில் இதனை முன்மொழிகிறேன். அநேகமாக இன்னும் சிறிது நேரத்தில் பெயர்ச்சொல்லுக்கான, சோதனைக்கோப்பினை அனுப்புவேன்.--03:54, 31 மார்ச் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

 • N - பெயர்ச்சொற்களுக்கான, சோதனைக் கோப்பினை அனுப்பியுள்ளேன். --04:42, 31 மார்ச் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
 • நீங்கள் அனுப்பிய சொற்களை எழுத்துப்பிழை சரிபார்த்துப் பதிவேற்றிவிட்டேன். #, மற்றும் நீங்கள் மஞ்சள்குறியிட்ட பகுதி, பகுப்பு முதலியன பற்றி நாளை பேசுவோம். நன்றி. பழ.கந்தசாமி (பேச்சு) 07:01, 31 மார்ச் 2012 (UTC)Reply[பதில் அளி]
எத்தகையப் பிழைகள் வந்தன என்று தெரிந்து கொள்ளவிரும்புகிறேன். ஏற்கனவே ஒரு சொல் இருந்தால் அவற்றை வடிகட்டி பதிவேற்றும் முறையை(vlookup), கற்று வருகிறேன். சிறு தடைகள் தற்பொழுது அம்முயற்சியில் உள்ளது. அடுத்தமுறை இல்லாதவைகளை மட்டும் பிரித்தெடுத்து பதிவேற்றலாம். அநேகமாக இன்னும் 5நிமிடங்களில் மின்தடை வரும்.மீண்டும் சந்திப்போம். வணக்கம்.--06:39, 1 ஏப்ரல் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
 • இல்லாத சொற்களைத் தனியே பிரித்தெடுக்கவேண்டியதில்லை, ஏனெனில், சொல் ஏற்கனவே இருந்தால், பதிவேற்றும்போது 'page already exists' என்று தானாக வந்துவிடுகின்றது.
 • வேறு 10-15 எழுத்துப்பிழைகள் இருந்தன. அவற்றைத் திருத்திப் பதிவேற்றினேன்.
 • இன்று என்னால் கூப்பிடமுடியவில்லை. ஓரிரு நாட்களில் பேசும்போது விரிவாகப் பேசலாம். பழ.கந்தசாமி (பேச்சு) 03:23, 2 ஏப்ரல் 2012 (UTC)Reply[பதில் அளி]
 • உங்களுக்கு உகந்த நாளில் தொடருவோம்.காத்திருக்கிறேன்.வணக்கம்.--04:01, 2 ஏப்ரல் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

கொக்கி(விசிறி)[தொகு]

தமிழ் எழுத்துக்கள் எழுதும் முறையைப் பற்றி, தவறான கருத்து தமிழ்விக்கிப்பீடியாவில் முன்வைக்கப்படுகிறது என எண்ணுகிறேன்.அதாவது கி போன்ற எழுத்துக்களை எழுதும் போது, க எழுதியவுடன், மேலே போடப்படும் கொக்கி எழுதும் முறைப்பற்றி ... அக்கொக்கியானது, க எழுத்தின் மேலுள்ள கிடைமட்டக் கோட்டிற்கு மேலே எழுதக் கூடாது என்ற கருத்தை முன் வைத்துள்ளனர். எனது கருத்தை அங்கு முன் வைத்துள்ளேன். உங்கள் கருத்தை அறிய ஆவல். அங்குள்ள மாதிரிப்படத்தின் படி எழுத வேண்டுமெனக் கூறுகின்றனர்.பாருங்கள்.--02:50, 24 ஏப்ரல் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

 • தகவலுழவன், ஜார்ஜ் அவர்கள் கூறிய கருத்துதான் எனதும். வீச்செழுத்தில் எழுதும்போது கையை எடுக்காமல் தொடர்ச்சியாக எழுதினால் நம்மை அறியாமல் கொக்கி இடதுபுறம் வந்துவிடலாம். கையை எடுத்தெடுத்து எழுதுபவர்கள் வேகமாக எழுதும்போது எழுத்தின்மேல் ஏதோ ஓர் இடத்தில் கொக்கி விழும் (வேகமாக எழுதுதுகையில் ஆங்கில i-க்கு மேற்புள்ளியை பலர் வேறெங்கோ இடுவதைப்போல). அவ்வளவுதான். கொக்கி எங்கே என்பதில் மொத்தமாக எழுத்துரு மாற்றத்தை அனைவரும் ஏற்கும் வகையில் ஏற்படுத்தவேண்டுமானால் அது உத்தமம் போன்ற அமைப்புகளின் ஏற்பின்றி நடந்துவிடாது என்றே நினைக்கிறேன். மற்றபடி இது அவரவர்கள் விருப்பந்தான். படம் பார்க்கச் சிறப்பாக இருக்கலாம் என்பதற்காக இதைச் செய்யலாமேயன்றி மற்றபடி அதில் காலத்தை ஏன் விரயஞ்செய்யவேண்டுமெனத் தெரியவில்லை. பேசுவோம். பழ.கந்தசாமி (பேச்சு) 03:18, 24 ஏப்ரல் 2012 (UTC)Reply[பதில் அளி]
தெளிந்தேன்.கசடற கற்பித்தமைக்கு நன்றி. சந்திப்போம். வணக்கம்.--18:26, 24 ஏப்ரல் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

ஆலமரத்தடியில் கேட்டிருந்தேன் ஒரு கேள்வி[தொகு]

தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் இருந்து நாம் பெற்ற சொற்களை விக்சனரியில் பதிவேற்றியதைப் பற்றி விக்சனரியில் பதிவு செய்த ஆவணப்பக்கங்கள் எங்குள்ளன என்று தெரியவில்லை. அவற்றின் இடம் மாறிவிட்டதா என்றும் தெரியவில்லை. இதைப்பற்றி ஆலமரத்தடியில் கேட்டிருந்தேன் (ஒரு மாதத்திற்கு முன்பு), நீங்கள் பார்த்தீர்களா இல்லையா என்று தெரியவில்லை. எங்கிருக்கின்றது என்று தெரிவிக்க வேண்டுகின்றேன். செம்மமொழி மாநாட்டில் குறிந்தகடு/இறுவட்டு வழங்கும் படமும் கூட இருந்தது. ஆலமரத்தடியில் இங்கு கேட்டிருந்தேன். நன்றி.--செல்வா (பேச்சு) 13:53, 28 ஏப்ரல் 2012 (UTC)Reply[பதில் அளி]

 • உங்களின் முந்தைய குறிப்பை நான் பார்க்கவில்லை. தகவலுழவனோ, சோ.பா.வோ பரணிட்டிருப்பார்கள் என நினைக்கிறேன். தகவலுழவன் இதைப்பார்த்தால் நிச்சயம் பதிலளிப்பார். நானும் தேடிப்பார்க்கிறேன்.பழ.கந்தசாமி (பேச்சு) 16:40, 28 ஏப்ரல் 2012 (UTC)Reply[பதில் அளி]
நானும் தேடியே வருகிறேன். பல உரையாடல்களை தேதிவாரியாக கோர்க்க வேண்டும். மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளேன். AWB-யில் ஏற்பட்ட தடையை சரிசெய்து விட்டேன். பொதுவாக XP-யில் 98%சரியாக வேலை செய்கிறது. ஆனால், இணைய வேகம், 7-இல் தான் நன்றாக இருக்கிறது.அனைத்து விக்கிப் பங்களிப்புகளையும் படிப்படியாக உபுண்டு போன்ற இயக்கநிரலுக்கு மாற்ற எண்ணி செயல்படுகிறேன்.அதில் பைத்தான் குறித்த உங்களை அனுபங்களை, பகிர்ந்து வருதலுக்கு நன்றி.மேலும் எதிர்நோக்குகிறேன். வணக்கம்.--01:17, 13 மே 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
 • குறிப்புகளை அனுப்பி விட்டேன்.மி.அ.காணவும். மிக்க நன்றி. வணக்கம்.--02:18, 13 மே 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

மின்னஞ்சல்[தொகு]

மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.--00:54, 21 மே 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

அதிரடி ஆயிரம்[தொகு]

தகவலுழவன், அதிவிரைவாக சுமார் 1500 சொற்களைப் பத்துநாட்களுக்குள் பதிவேற்றியுள்ளீர்கள். உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.பழ.கந்தசாமி (பேச்சு) 04:43, 21 மே 2012 (UTC)Reply[பதில் அளி]

மி.அ. அனுப்பியுள்ளேன்.--02:08, 1 சூன் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

சொல்வளம் என்பதனை நெருக்கமானச் சொற்கள் என மாற்றலாமா? நான் சிலரிடம் உரையாடிய போது, என்மனதில் தோன்றியது. தொடர்புடையச் சொற்கள் என்றால் சில சமயங்களில், இந்த சொல் தொடர்பு இல்லாதது என வாதிடுகின்றனர். சொல்வளம் என்றால் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. நெருக்கம் என்றால், சொல் வளத்தின் நோக்கத்தினை உடனே புரிந்து செயல்படுவரா? உங்களின் கருத்தென்ன?--04:04, 25 சூன் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

mass delete[தொகு]

ஒரே பயனரின் பங்களிப்புகளை நீக்க சிறப்பு:Nuke உபயோகப்படுத்தலாம் பழ. கந்தசாமி. ஒரே சொடுக்கில் எளிதாக நீக்கலாம்--shanmugam (பேச்சு) 14:39, 28 சூன் 2012 (UTC)Reply[பதில் அளி]

 • நன்றி. அப்படி ஒரு கட்டளை இருக்கிறது எனத் தெரியும். ஆனால், நீக்கவேண்டிய பக்கங்கள் பத்துக்குள் இருந்ததால், மெனக்கெட்டுத் தேடிப் பார்க்கவில்லை. பழ.கந்தசாமி (பேச்சு) 15:31, 28 சூன் 2012 (UTC)Reply[பதில் அளி]
சரி, ( ஒரு குறிப்பு:சிறப்புப் பக்கங்கள் பக்கத்தின் மூலம் அனைத்து சிறப்பு பக்கங்ளையும் எளிதாக பார்க்கலாம்..)--shanmugam (பேச்சு) 16:09, 28 சூன் 2012 (UTC)Reply[பதில் அளி]

ஆலமரத்தடியில் - பகுப்பு பற்றிய வசதி[தொகு]

பகுப்பில் வார்ப்புரு இணைப்பு பற்றி என்ற தலைப்பில் சிறப்பான வசதிப்பற்றி, உங்களின் கருத்தறிய ஆவல்.--06:45, 29 சூன் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

கருத்து / ஓட்டு இடுக[தொகு]

விக்கி பல்கலைக்கழகம் துவங்க உங்கள் கருத்தென்ன? இங்கே காணவும்.-- உழவன் +உரை.. 19:43, 7 சூலை 2012 (UTC)Reply[பதில் அளி]

குளம்பிகள்[தொகு]

சொற்களை பற்றிய கலந்துரையாடல், பல பகுதிகளில் விக்கிப்பீடியாவில் நடைபெறுகிறது. அதற்கென்று தனிப்பிரிவையும் உருவாக்கியுள்ளனர். அது விக்சனரி போன்ற திட்டத்திற்கு பின்னடைவே. இருப்பினும், நானும் கலந்து, அவர்களை இங்கு அழைத்து வர, அவ்வப்போது முயல்வதுண்டு. உங்களுக்கு பணியடர்வு இருப்பினும் ஒரு வேண்டுகோள். இங்கு உங்கள் கருத்திடுக.அவசரமில்லை. அப்பக்கத்தின் கிரேக்க சொல் பகுதியாவது வாசியுங்கள். வணக்கம்.-- உழவன் +உரை.. 06:17, 11 சூலை 2012 (UTC)Reply[பதில் அளி]

சரி.மேலும் அங்கு சொற்களுக்காக, தனிபக்கங்களையும் உருவாக்குகின்றனர். அது தவறென அப்பக்கங்களில் ஒன்றில் கருத்திட்டுள்ளேன்.-- உழவன் +உரை.. 14:43, 11 சூலை 2012 (UTC)Reply[பதில் அளி]

indo word net[தொகு]

இது பல்வேறு இந்திய மொழியியல் அறிஞர்களால் உருவாக்கப்பட்டது. இதனை இணைப்பது பற்றி, உங்களின் கருத்தென்ன? -- உழவன் +உரை.. 04:55, 21 சூலை 2012 (UTC)Reply[பதில் அளி]

 • நல்ல முயற்சியாகத் தெரிகிறது. தொடர்ந்து கவனிக்கவேண்டும். கன்னடம் மீண்டும் பாய ஆரம்பித்துள்ளது. கவனித்தீர்களா? பழ.கந்தசாமி (பேச்சு) 05:00, 21 சூலை 2012 (UTC)Reply[பதில் அளி]

Sciote என்பதில் எசுபானிய பொருளையும் சேர்க்கவும்.உரிய ஆங்கில விக்சனரிப்பக்கத்திற்கு இணைப்பு கொடுத்துள்ளேன்.-- உழவன் +உரை.. 03:06, 24 சூலை 2012 (UTC)Reply[பதில் அளி]

பரண்[தொகு]

41.1 வரை இருப்பவைகள், 2011ஆண்டிற்கு உரியவை. அவற்றை நீங்கள் பரண் இடலாமே? ஏனெனில், குறைந்த அலைவரிசையில் இயங்கும் போதும், அலைப்பேசி வழியே பார்க்கும் போதும் நேரவிரயம் ஆகிறது. அவற்றை படித்துப் பாரத்தேன்.பெரும்பாலும் நாம் இருவர் பேசிய நடந்த முடிந்த உரையாடல்களே.41.2 முதல் இருப்பவை,2012ஆம் ஆண்டிற்கு உரியவை ஆகும்.வணக்கம்.-- உழவன் +உரை.. 04:11, 25 சூலை 2012 (UTC)Reply[பதில் அளி]

குறும்பக்கங்கள்[தொகு]

ஆலமரத்தடியில் ஒரு வினா பக்கம் ஏன் கூடவில்லை?-- உழவன் +உரை.. 11:34, 25 சூலை 2012 (UTC)Reply[பதில் அளி]

எசுப்பானிய மொழியில்[தொகு]

எசுப்பானிய மொழியில் மேலெழுத்து எழுதினாலும், கீழ் எழுத்து எழுதினாலும் ஆங்கில மொழியைப்போன்று ஒரு பொருள்தானே?(எ. கா.) chino / Chino என்பதும் ஒரே பொருளா? அல்லது மாறுபடுமா?-- உழவன் +உரை.. 06:51, 3 ஆகத்து 2012 (UTC)Reply[பதில் அளி]

சென்னைப்பேரகரமுதலி[தொகு]

சென்னைப்பேரகரமுதலியின் தரவுகளை, அட்டவணைச் செயலியில் கொண்டு வரும் முயற்சிகள் பைத்தானின் நிரல் மூலம் நடைபெறுகிறது. விரைவில் நற்செய்தியுடன் சந்திக்கிறேன். சில கல்லூரி மாணவர்களும், சென்னை சிறினீ என்ற பைத்தான் நிரலரும் இதில் இணைய உள்ளனர். அதன் தொடக்கத்தினை இங்கு காணலாம். வணக்கம்-- உழவன் +உரை.. 18:27, 14 ஆகத்து 2012 (UTC)Reply[பதில் அளி]

 • தகவலுழவன், மிக்க மகிழ்ச்சி. உங்கள் முயற்சிகளுக்கு நன்றி. பேசிப் பல மாதங்கள் ஆகிவிட்டன, இந்த வார இறுதியில் (ஞாயிறு இரவு வாக்கில்) உங்களை அழைக்கிறேன். உங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும் (மாறிவிட்டதாக நினைவு) பழ.கந்தசாமி (பேச்சு) 18:32, 14 ஆகத்து 2012 (UTC)Reply[பதில் அளி]
அதே அலைப்பேசி எண் தான். 90 95 34 33 42 சுவாசுத்துடன், நேசமிருக்கும். நேசத்துடன் விக்சனரியும் இருக்கும். பணியடர்வில் இருப்பீர்கள். அவசரமில்லை. விக்சனரியையும் தாண்டி, தமிழ் அகரமுதலியியல் என்ற நோக்கில், நமது எண்ணங்கள் கமழ திட்டமிடுகிறேன். அதனால், தாமதம் ஏற்படுகிறது. அநேகமாக வரும் பொங்கலோ, பொங்கல் சிறப்பாகவும்,மேன்மையாகவும் இருக்கும். வணக்கம்.-- உழவன் +உரை.. 19:46, 14 ஆகத்து 2012 (UTC)Reply[பதில் அளி]

தமிழ் கம்பியூட்டர்[தொகு]

தமிழ் கம்பியூட்டர் என்ற தமிழ் இதழில் விக்கி திட்டங்களைப் பற்றி கட்டுரைத்தொடர் வருகிறது. அதில் தமிழ்விக்சனரி பற்றியும் குறிப்பிட விரும்புகின்றனர். இங்கு நாம் இருவரும் முனைப்புடன் இருப்பதால், நமது நிழற்படத்தை கேட்கின்றனர். உங்களது படத்தை அனுப்புக.-- உழவன் +உரை.. 05:58, 19 ஆகத்து 2012 (UTC)Reply[பதில் அளி]

 • பயனர்:தகவலுழவன்/விக்சனரி இது போல ஆவண உருவாக்கம் அவசியம் என்பதால், இன்று முதல் உருவாக்க முனைந்துள்ளேன்.இங்குள்ள தகவல்களையே, அப்பத்திரிக்கையோ அல்லது பிறரோ எடுப்பர். தனிப்பட்ட முறையில் வேறு எதுவும் நான் தரப்போவதில்லை.வணக்கம்.
 • என் படம் தேவையா? வேண்டுமெனில் தேடி அனுப்புகிறேன். என்றைக்குள் வேண்டும்? நன்றி.
 • பயனர்:தகவலுழவன்/விக்சனரி என்பதில் உங்கள் படத்தை இணைத்துள்ளேன். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது, அப்படத்தைப் பெரிதாக்கி, கீழுள்ள இணைப்பின் வழியே புதிய படத்தை பதிவேற்றவும். அப்பொழுது, ஏற்கனவே இப்படம் பயன்படுத்தப்பட்டுள்ள இடங்களிலும், புதியபடம் தானாகவே மாறிவிடும். நன்றி. சந்திப்போம். வணக்கம்.-- உழவன் +உரை.. 06:43, 21 ஆகத்து 2012 (UTC)Reply[பதில் அளி]
 • இனி #: குறியீடுகள் இட்டால் அதற்கு பிறகுவருபவை சிறிதாக வரும். அதேஎடுத்துக்காட்டு இலக்கியப் பகுதியில் வந்தால் பெரிதாக இருக்கும். அடுத்தவாரம்,மொழிபெயர்ப்பு பகுதியில், ஒரு எண்ணுக்குரிய # முன்னால் சொடுக்கினால், அதனை மட்டும் தொகுக்கும் வழியை கொண்டுவர உள்ளேன்.எடுத்துக்காட்டாக அம்மா, அரசர்சின்னம் காணவும்.-- உழவன் +உரை.. 10:11, 29 ஆகத்து 2012 (UTC)Reply[பதில் அளி]

சிவப்பு இணைப்புகள்[தொகு]

எனது இப்பக்கத்தினைப் பாருங்கள். அங்கு சிவப்பாக இருப்பவை, இங்கு தெரியும். ஆனால், இதனை நகல்எடுக்கும் போது, ஒன்றன் கீழ் ஒன்றாக அமையாமல், ஒரே வரியாக நகலெடுத்த து வருகிறது. நீங்கள் செய்து பார்க்கவும். எனக்கு நகல் எடுக்கும் போது, கீழ்கண்டவாறு வருகிறது.

unmoaneddunnameddunnationalluaiduayueadueapvailveratrinvermiculatevichyvicugnavide infravide 

supravilleinagevisadvolapukwawaacwaafwackewadwaddedwaddlewaddywaderwadywafdwafercakewaferywafflewafflewaffleironwage

earnerwagefreezewagefundwaggerywagonlitwagonerwaifwailfulwailingwainwaistbandwaitabitwaitinglistwaitingmaidwaitingro

omwakerobinwakedwakefulwakenwakenerwakeningwakeswakingwalachwalachianwaleknotwaleswalkin 

coolerwalkoutwalkoverwalkerwalkielookiwalkiepushiewalkingfernwalkingleafwalkingpaperswalkingpartwalkingstrawwalkingt

ourwalkswalkwaywallcreeperwallcresswallfernwallfruitwallgamewallmosswallmustardwallpaintingwallpepperwallatewallruew

allspacewallwasherwallaroowalledwallfishwalloonwallsendwallstreetwalltreewalnutjuicewalpurgisnightwaltzingwampumwan

wandered

உங்களுக்கு எப்படி வருகிறது?-- உழவன் +உரை.. 16:30, 6 செப்டெம்பர் 2012 (UTC)

 • தகவலுழவன், Ctrl-C மூலம் நகலெடுத்தால் இடைவெளியின்றி வருகிறது. ஆனால், உலாவியில் File->Save Page As செய்து அதில் Save as type: Text file செய்தால் சரியாக வருகிறது. பழ.கந்தசாமி (பேச்சு) 18:32, 6 செப்டெம்பர் 2012 (UTC)
  • எனக்கும் வருகிறது. லினக்சுவில் இயங்கக் கற்றுவருகிறேன். விரைவில் இந்த சைத்தான், பைத்தானில் இயங்கும். ரூபி பற்றி ஏற்கனவே, கூறியிருந்தீர்கள் அதனை எதற்கு பயன்படுத்துகிறீர்கள் என்று அறிய விரும்புகிறேன். உங்கள் அடி ஒட்டி, உடன்வர விரும்பியே கேட்கிறேன்.அதன் முக்கியத்துவம் கூறுங்கள்.வணக்கம்.-- உழவன் +உரை.. 14:38, 7 செப்டெம்பர் 2012 (UTC)

சொல்வளப் பெட்டி[தொகு]

வேதநாவர் பார்த்தேன். அங்குள்ள சொல்வளம் பகுதிச் சொற்களை எப்படி கோர்க்கிறீர்கள்? ஏதேனும் நிரல் மூலம், சொல்வளம் பகுதியை மேலாண்மை செய்ய இயலுமா? அம்மா சொல்லைப் போலவே, சொல்வளத்தைக் கையாளலாமென்றே எண்ணுகிறேன். உங்களின் கருத்தறிய ஆவல்.-- உழவன் +உரை.. 06:05, 13 செப்டெம்பர் 2012 (UTC)

 • தகவலுழவன், இவை சொற்களுக்கு ஏற்றவாறு நகலெடுத்து ஒட்டி மாற்றுகிறேன். இதை எவ்வாறு நிரல் மூலம் தானாகச் செய்யமுடியும் எனத் தெரியவில்லை. தற்போதெல்லாம் வேறுவேலைகளில் மூழ்கிவிட்டீர்களா? பழ.கந்தசாமி (பேச்சு) 21:19, 13 செப்டெம்பர் 2012 (UTC)
எனது சிந்தனை இங்கு தான். அகரமுதலி நிரலாக்கத்திற்காகவும், பைத்தானுக்காகவும், பலரையும் ஈடுபாடு கொள்ள செய்யவும் சுழன்று வருகிறேன். இனி வாரவாரம் அதிக சொற்களை பதிவேற்றுவேன்.-- உழவன் +உரை.. 02:44, 14 செப்டெம்பர் 2012 (UTC)
 • தானியக்கமாகச் செய்வது நல்லதுதான். நானும் அதுகுறித்த எண்ணுகிறேன். நன்றி. பழ.கந்தசாமி (பேச்சு) 15:44, 14 செப்டெம்பர் 2012 (UTC)

இனி..(அம்மா)[தொகு]

அம்மா என்ற சொல்லை இதுவரை வந்த அனுபவங்களின் (அலைப்பேசி, கணினி, பிறமொழி பயனர், பதிவேற்றத் தானியங்கி..) அடிப்படையில், உருவாக்கியுள்ளேன். இனி இதுபோல, புது தமிழ் சொற்களைப் பதிவேற்ற விரும்புகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.இங்கு கருத்திடுக.-- உழவன் +உரை.. 14:14, 14 செப்டெம்பர் 2012 (UTC)

 • தகவலுழவன், பொதுவான அமைப்பு பிடித்திருக்கிறது. ஆனால், மொழிபெயர்ப்புகளில் ஆங்கில மொழிபெயர்ப்பு முதலில் வரவேண்டியதன் அவசியத்தை முன்பு உரையாடியிருக்கிறோம். இங்கு வருபவர்கள் பெரும்பாலும் அதை நாடியே வருகின்றனர். மொழிபெயர்ப்பாளர்களான நாமும் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் பழக்கமுள்ளவர்கள். ஆங்கிலத்தில் பொருள் எங்கே எனத் தேடுவதில் கடினமானால், இங்கு வருபவர்கள வராமல் போய்விடுவர். 15:36, 14 செப்டெம்பர் 2012 (UTC)
 • ஆம்.மறந்தே போனேன். இப்ப சரியா? உங்களின் இந்த எண்ணத்தை இங்கும் குறித்தால், பலருக்கும் அப்பக்கத்தை காட்டும் போது, வசதியாக இருக்கும். பலரும் உங்கள் எண்ணத்தை, அப்பக்கத்திலேயே அறிவர். மீண்டும் சந்திப்போம். வணக்கம்-- உழவன் +உரை.. 17:46, 14 செப்டெம்பர் 2012 (UTC)

மகிழ்ச்சியுரை - பைத்தான்[தொகு]

ஒருவழியாக பைத்தான் மூலம் பதிவேற்ற கற்க துவங்கிவிட்டேன்எனது முதற்பதிவுகள் வருமாறு;-


17:31, 24 அக்டோபர் 2012 ‎surprisal (வரலாறு) ‎[321 பைட்டுகள்] ‎தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("{{subst:noun|திடீர்ச்செயல், அதிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
17:31, 24 அக்டோபர் 2012 ‎surplusage (வரலாறு) ‎[271 பைட்டுகள்] ‎தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("{{subst:noun|விஞ்சு மிகை}}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
17:30, 24 அக்டோபர் 2012 ‎surpassingly (வரலாறு) ‎[285 பைட்டுகள்] ‎தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("{{subst:adj|தலைசிறந்த நிலையில்}}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
17:30, 24 அக்டோபர் 2012 ‎surpassing (வரலாறு) ‎[319 பைட்டுகள்] ‎தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("{{subst:adj|விஞ்சிய, மிக மேற்பட்..."-இப்பெயரில் புதிய பக்

இருப்பினும் இதில் இன்னும் மேம்படுத்த வேண்டிய கற்றல்கள் இருக்கின்றன. உங்களுக்கு நேரம் இருக்கும் போது அழைக்கவும். ஒரு 10நிமிடங்கள் பேசணும். வணக்கம்.-- உழவன் +உரை.. 18:10, 24 அக்டோபர் 2012 (UTC)Reply[பதில் அளி]

 • தகவலுழவன், மகிழ்ச்சி. வார இறுதியில் அழைக்கிறேன். அலைபேசி எண் மாறியுள்ளதா? பணிப்பளுவின் காரணமாக கடந்த சில நாட்களாக அதிகம் பங்களிக்க இயலவில்லை. பழ.கந்தசாமி (பேச்சு) 18:34, 24 அக்டோபர் 2012 (UTC)Reply[பதில் அளி]
உங்கள் பணியடர்வினை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவசரமில்லை.காத்திருக்கிறேன்.உங்களின் மகிழ்வுக்காகவே பைத்தான் பற்றி கூறினேன். எனது முன்னேற்றத்தில் அக்கரையுள்ள அண்ணன் என்றே என்னுள் எண்ணுகிறேன்.சென்னைப் பேரகரமுதலியின் இணைய வடிவம் சீராக இல்லாத தால், தரவிறக்கத்தில் சில தடைகள் உள்ளது. மேலும் அவர்களும் பணிச்சூழலாலும், வளர்முக நிலையில் இருப்பதாலும் தொய்வுநிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் உங்களைப்போன்று , ஒவ்வொரு நாளும் செயற்படுவேன்.அலைப்பேசி எண்ணை எப்பொழுது மாற்றினாலும், உங்களிடம் சொல்வேன். 90 95 34 33 42 சந்திப்போம். விடைபெறுகிறேன்.வணக்கம்.-- உழவன் +உரை.. 05:53, 25 அக்டோபர் 2012 (UTC)Reply[பதில் அளி]

பைத்தான் + அட்டவணைச் செயலி[தொகு]

நீங்கள் பைத்தான் மூலம் பதிவேற்றும் போது, தரவுகளை நேரடியாக அட்டவணைச் செயலியில் இருந்து பதிவேற்றுகிறீர்களா? அல்லது gedit / notepad போன்றவற்றிலிருந்து பதிவேற்றுகிறீர்களா? pywikipedia அடைவில் நீங்கள் பதிவேற்றப் போடும், குறிப்பேட்டின் மாதிரி ஒன்றை நான் ஆவல் படுகிறேன். அதனை மின்னஞ்சலில் அனுப்புக. மற்றவை உங்கள் மின்னஞ்சல் கண்டு, வணக்கம்-- உழவன் +உரை.. 17:33, 30 அக்டோபர் 2012 (UTC)Reply[பதில் அளி]

 • தகவலுழவன், அட்டவணைச் செயலியிலிருந்து ஒரு ரூபி செயலியின் மூலம் ஓர் ஆவணமாக்கி. அந்த ஆவணத்தைக் கொண்டு பதிவேற்றினேன். ஒரு பைத்தான் செயலியின் மூலமே அதை முறைமைப் படுத்தியபின் உங்களோடு பகிர்வேன். அழைக்கிறேன்.

பழ.கந்தசாமி (பேச்சு) 19:02, 30 அக்டோபர் 2012 (UTC)Reply[பதில் அளி]

பைவிக்கிப்பீடியவிற்கான கோப்பு - மின்னஞ்சல்[தொகு]

நாம் புதுச்சொற்களை பதிவேற்றும் பொழுது பு என்ற சொல் அண்மையமாற்றங்கள் பகுதியில் காண்கிறோம். அச்சொல்லின் இறுதியில்

-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

என்ற வரிகளும் அதே பொருளைத்தான் உணர்த்துகிறது. தேவையான மாற்றங்களை பைத்தான் நிரல்மூலம் ஏற்படுத்தி, அதனை தங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளேன். அதனை பயன்படுத்துவதன் மூலம், புதுச்சொல்லின் விளக்கம், அப்பக்கத்தில் இன்னும் தெளிவாக, அதிக சொற்களுடன் தெரியும். இது குறித்து, உங்கள் கருத்தறிய ஆவல்.-- உழவன் +உரை.. 16:09, 1 நவம்பர் 2012 (UTC)Reply[பதில் அளி]

சோதனைகளை இச்சொற்களில் செய்துள்ளேன். ஒவ்வொரு சொல்லின் வரலாற்றுப் பக்கத்தினைக் காண்பதன் மூலம் அறிய முடியும்.மேலும், பயனர்:Shanmugamp7 , நானும் பதிவேற்றிப் பார்த்துள்ளோம். இருப்பினும், உங்கள் பதிவுகளில் காண ஆவல்.:-- உழவன் +உரை.. 04:47, 3 நவம்பர் 2012 (UTC)Reply[பதில் அளி]

வேற்றுமையுருபு தானியக்கம்[தொகு]

பெங்களூரில் இந்திய விக்கி நிரலர் கலந்தாய்வு நடைபெறுகிறது. அங்கு சென்றிருக்கும் நமது பங்களிப்பாளர் சண்முகம் பல்வேறு தகவல்களைத் தெரிவித்துள்ளார். இதில் இரண்டு முக்கியமானவை. இப்போது பைத்தானில் தானியக்கமாகச் செயல்படும் கட்டளைகளை, தொகுத்தல் சாளரத்துடனும் பயன்படுத்தும் வண்ணம் முக்கிய நிரல்கள் பற்றி அலசப் படுகிறது. சிறீகாந்து வேற்றுமையுருபு உருவாக்கத்தைத் தானியக்கமாக செய்ய, யாவாவில் நிரல்கள் எழுத முனைந்துள்ளார். சிவப்பு இணைப்புகளையும், அவற்றிற்கு உரிய தமிழ் பொருட்களையும் பிரித்தெடுக்கும் நிரல் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. செய்து பார்த்துவிட்டு கூறுகிறேன். வணக்கம்..-- உழவன் +உரை.. 04:09, 11 நவம்பர் 2012 (UTC)Reply[பதில் அளி]

புதிய பணிச்சூழல்[தொகு]

மதிப்பிற்குரிய கந்தசாமி அவர்களுக்கு, புதிய பணியொன்றில் இணைந்துள்ளேன். இப்பொழுது பயிற்சி காலத்தில் இருக்கிறேன். இதனால் எனது பணச்சுமை சற்றுக் குறைந்துள்ளது. ஓரிரு நாட்களில் விரிவாக மின்னஞ்சல் செய்கிறேன். வணக்கம். -- உழவன் +உரை.. 07:32, 14 சனவரி 2013 (UTC)Reply[பதில் அளி]

 • தகவலுழவன், செய்தி கண்டு பேருவகை அடைகிறேன். இதைத்தான் தை பிறந்தால் வழிபிறக்கும் என்கிறார்களோ? வாழ்த்துகள். பழ.கந்தசாமி (பேச்சு) 04:36, 16 சனவரி 2013 (UTC)Reply[பதில் அளி]

மின்னஞ்சல்[தொகு]

மதிப்பிற்குரிய அண்ணன் அவர்களுக்கு, உதவி கேட்டு, மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளேன். உங்களுக்கு பணியடர்வு இருக்கும். இருப்பினும் உதவிடுக. -- உழவன் +உரை.. 12:37, 24 சூலை 2013 (UTC)Reply[பதில் அளி]

கருத்திடுக.[தொகு]

பாட்டாசாரியம் என்ற சொல்லானது, சென்னைப்பேரகரமுதலியில் இருந்து உருவாக்கப்பட்டது. அதில் உள்ள ஆங்கிலக்குறிப்புச்சொல்லுக்கு(எ.கா = (W.) ) விளக்கமான பக்கமொன்றை உருவாக்கியுள்ளேன். அதுபோலவே, அனைத்து சொற்களுக்கும் குறிப்புப் பக்கத்தினை உருவாக்கலாமென்று எண்ணிகறேன். இதுபற்றிய உங்களின் கருத்தறிய ஆவற்படுகிறேன்.-- உழவன் +உரை.. 06:57, 31 ஆகத்து 2013 (UTC)Reply[பதில் அளி]

தகவலுழவன், அவ்வாறு குறிக்கலாம் என்றே தோன்றுகிறது. எனினும், நாம் செ.பேரகரமுதலியை ஆதாரங்கள் பகுதியில் இட்டுவிடுவதால், அதற்கு மேலும் ஒரு குறிப்பு தேவையா என்றும் தோன்றுகிறது? (பணிப்பளு காரணமாக எனது பங்களிப்புகள் கொஞ்சம் குறைவாக உள்ளது. விரைவில் அது மாறும் என நினைக்கிறேன்) பழ.கந்தசாமி (பேச்சு) 18:07, 31 ஆகத்து 2013 (UTC)Reply[பதில் அளி]
ஆதாரங்களில் இருக்கும் இணையம் மாறிவிட்டால், தமிழ் இணையக்கல்விக்கழக இணைப்புகளைப் போல உரிய பக்கமில்லாமல் அற்றுப்போக வாய்ப்புண்டு. மேலும், அதனை விரிவாக குறிப்பிட்டால் நன்றாக இருக்குமென்றே எண்ணி, இவ்விதம் செயல்பட்டேன். அங்கு நூல்வடிவ குறிப்புகளே உள்ளன. இங்கு இணையவடிவம் வேண்டுமென்பதால், இப்படி மேம்படுத்த எண்ணினேன். இம்மாதம் சென்னையில் 28,29 ஆகிய நாட்களில் வி்க்கிப்பீடியாவின் பத்தாமாண்டு விழா நடைபெற உள்ளது. இடம் தெரியவில்லை. தெரிந்தவுடன் தெரியப்படுத்துகிறேன். மற்றபடி வழக்கமான வாழ்க்கைதான். மீண்டும் சந்திப்போம். வணக்கம்.-- உழவன் +உரை.. 17:17, 10 செப்டம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]

திரைவிசைப்பலகை[தொகு]

சோதனை அடிப்படையில் திரைவிசைப்பலகை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பக்கத்தில் உள்ளது போல செய்தால், தொகுத்தல் சாளரத்தில் தட்டச்சுக்கருவிகள் என்பது தோன்றும். நேரமிருந்தால், நீங்களும் பரிசோதிக்கலாம். வணக்கம்.-- உழவன் +உரை.. 13:33, 8 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]

 • நன்றி, தகவலுழவன். பயன்படுத்திப் பார்க்கிறேன். ஆனால், கொடுக்கப்பட்டுள்ள உருளியை எங்கே இடவேண்டும் என்பதுதான் மறந்துவிட்டது. சந்திப்போம். பழ.கந்தசாமி (பேச்சு) 23:28, 8 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]

குறிப்புகள்[தொகு]

கூகுள்ஆவணவழியாகப் பதிவேற்றும் கருவி.[தொகு]

தங்களுக்கு ஒரு மின்னஞ்சல் மேற்கூறியவைகள் விவரித்து அனுப்பியுள்ளேன். மற்றவை உங்கள் உரை கண்டு.. வணக்கம்--தகவலுழவன் (பேச்சு) 18:43, 31 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

பெயர்மாற்றம்[தொகு]

விக்சனரியின் மீடியாவிக்கி பேச்சு:Gadget-mySandbox.js என்பதில் தங்களின் மேலான எண்ணங்களைத் தெரிவிக்கக் கோருகிறேன். இந்நடைமுறை, பிறவிக்கிகளைப் போல பின்பற்றப்படுகிறது.வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 02:19, 15 மார்ச் 2014 (UTC)Reply[பதில் அளி]

 • தகவலுழவன், பார்க்கிறேன். பணிப்பளு காரணமாக இன்னும் கொஞ்சநாள் குறைவாகத்தான் பங்களிக்க இயலும். பேசுவோம். பழ.கந்தசாமி (பேச்சு) 03:57, 28 மார்ச் 2014 (UTC)Reply[பதில் அளி]
சரி. காத்திருப்பேன். பல புதிய செய்திகளுடன்...--தகவலுழவன் (பேச்சு) 06:06, 28 மார்ச் 2014 (UTC)Reply[பதில் அளி]

ஊடக உரிம வேண்டுகோள்[தொகு]

 1. படிமம்:thavani-girl.jpg
 2. படிமம்:ramshackle.jpg
 3. படிமம்:olympic relay.jpg

நீங்கள் பதிவேற்றிய ஊடகங்களுக்கு உரிய உரிமம் தர வேண்டுகிறோம். முழுக்க முழுக்க உங்களின் சுயமுயற்சியால் உருவாக்கப்பட்ட ஊடகம் எனில், . {{GFDL}} என்ற உரிமத்தை இடலாம். (எ. கா.) படிமம்:DSAL-neechalkaran-spreadsheet-customised-model-word.png. மேற்கண்ட உரிமம் வழங்க உங்களுக்கு உகப்பெனில், அவ்வூடகபக்கத்தினைத் திறந்து, {{GFDL}} என்று ஒட்டினால் போதும். அவ்வாறு உரிமத்தை வழங்கவில்லையெனில் அவை நீக்கப்பட பெருமளவு வாய்ப்புள்ளது. ஐயமிருப்பின் வினவவும் .--தகவலுழவன் (பேச்சு) 05:01, 3 சூலை 2014 (UTC)Reply[பதில் அளி]

விக்சனரி:தமிழ்ப்பேரகரமுதலியின் சொற்பதிவேற்றுத் திட்டம்[தொகு]

நீங்கள் மிக அதிகமான சொற்களை, சென்னைப் பேரகரமுதலியில் பதிவேற்றியுள்ளீர்கள். மீதமுள்ள சொற்கள் யாவையும் பதிவேற்ற இத்திட்டத்தில் ஒப்பமிட்டு ஆதரவு தருக. பணியடர்வாக இருப்பீர்களென்றே எண்ணுகிறேன். இருப்பினும் இவ்வேண்டுகோள். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 16:28, 6 திசம்பர் 2014 (UTC)Reply[பதில் அளி]

 • தகவலுழவன், நலமா? ஆம். இன்னும் சற்று வேலையாகத்தான் உள்ளேன். சில திங்களில் மீண்டும் உத்வேகத்துடன் தொடர்வேன். பேசுவோம். பழ.கந்தசாமி (பேச்சு) 18:47, 10 திசம்பர் 2014 (UTC)Reply[பதில் அளி]

Translating the interface in your language, we need your help[தொகு]

Hello Pazha.kandasamy, thanks for working on this wiki in your language. We updated the list of priority translations and I write you to let you know. The language used by this wiki (or by you in your preferences) needs about 100 translations or less in the priority list. You're almost done!
அனைத்து விக்கிகளிலும் மொழிபெயர்ப்பு சேர்க்க அல்லது மாற்ற, தயவு செய்து மீடியா விக்கி மொழிபெயர்ப்பு திட்டமான translatewiki.net ஐ பயன்படுத்துங்கள்.

Please register on translatewiki.net if you didn't yet and then help complete priority translations (make sure to select your language in the language selector). With a couple hours' work or less, you can make sure that nearly all visitors see the wiki interface fully translated. Nemo 14:06, 26 ஏப்ரல் 2015 (UTC)Reply[பதில் அளி]

பெயர்ச்சொல் விளக்கம்[தொகு]

பெயர்ச்சொல்லைப் பற்றிய விளக்கம் கீழ்க்கண்ட ஆறு பக்கங்களிலும் வருகிறது. பொருட்பெயர், இடப்பெயர், காலப் பெயர், சினைப் பெயர், பண்புப் பெயர், தொழிற் பெயர். இதைச் சீரமைக்க வேண்டுகிறேன்.

MTSudar (பேச்சு) 13:14, 27 மே 2015 (UTC)Reply[பதில் அளி]

w:விக்கிப்பீடியா:உதவித்தொகை என்பதில் கலந்து கொள்க[தொகு]

இந்திய விக்கிமீடியாவின் நிதி உதவியால், மடிக்கணினிப் பெற, தமிழ்விக்கிசமூகத்தின் ஒப்புதல் பெற வேண்டும். எனவே, w:விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer (தகவலுழவன்) என்ற திட்டப்பக்கத்தில், விண்ணப்பித்துள்ளேன். இதுபற்றி ஏற்கனவே, தமிழ் விக்கிப்பீடியாவின் மேனிலைப் பங்களிப்பாளர்(Bureaucrats)களுக்கும், சிறப்புநிலைப் பங்களிப்பாளர்(system operator) களுக்கும், அவரவர் உரையாடற்பக்கத்தில், தனித்தனியே செய்தி விடுத்துள்ளேன். பிற பங்களிப்பாளரகளும், அத்திட்டபக்கத்தில் தங்களின் நிலைப்பாட்டைக் கூற அழைக்கிறேன். மேலும், பிற தமிழ் திட்டங்களின் ஆலமரத்தடியிலும், இச்செய்தி விடுத்துள்ளேன். வணக்கம்.---- உழவன்+உரை.. 01:46, 11 சூலை 2015 (UTC)Reply[பதில் அளி]

வாக்கிடுக[தொகு]

https://ta.wikipedia.org/s/54k8 என்ற திட்டபக்கத்தில் வாக்கிடக் கோருகிறேன். வணக்கம்--தகவலுழவன் (பேச்சு) 13:45, 30 நவம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]

உழவனுக்கான வாக்கெடுப்பில் கலந்து கொள்க[தொகு]

நலமாக இருப்பீர்களென்று நம்புகிறேன். உங்களுடன் பேசி, நீண்ட வருடங்கள் ஆகிறது. நேரம் இருக்கும் போது அழையுங்கள். விக்சனரி:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்#அதிகாரி தரத்துக்கான வேண்டுகோள் (Request for bureaucratship) வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, தங்களது மேலான கருத்துக்களையும்அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனால் எனக்கு புதிய உயரணுக்க பயனர்களையும்(sysop), தானியங்கி அணுக்கல்களையும் வழங்க இயலும். இருப்பினும், அனைத்து மாற்றங்களையும், அனைத்துத் தமிழ் விக்கிமீடியத்திட்டங்களில் அறிவித்து, உடன் பங்களிக்கும் அன்பர்களின் கருத்தினை உள்வாங்கியே, ஒவ்வொரு முறையும் செயற்படுவேன் என உறுதி கூறுகிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 11:43, 7 மே 2019 (UTC)Reply[பதில் அளி]

Your advanced permissions on ta.wiktionary[தொகு]

Hello. A policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, interface administrator, etc.) was adopted by community consensus in 2013. According to this policy, the stewards are reviewing activity on wikis with no inactivity policy.

You meet the inactivity criteria (no edits and no logged actions for 2 years) on this wiki. Since this wiki, to the best of our knowledge, does not have its own rights review process, the global one applies.

If you want to keep your advanced permissions, you should inform the community of the wiki about the fact that the stewards have sent you this information about your inactivity. A community notice about this process has been also posted on the local Village Pump of this wiki. If the community has a discussion about it and then wants you to keep your rights, please contact the stewards at the m:Stewards' noticeboard, and link to the discussion of the local community, where they express their wish to continue to maintain the rights.

If you wish to resign your rights, please request removal of your rights on Meta.

If there is no response at all after one month, stewards will proceed to remove your administrator and/or bureaucrat rights. In ambiguous cases, stewards will evaluate the responses and will refer a decision back to the local community for their comment and review. If you have any questions, please contact the stewards.

Yours faithfully. --علاء (பேச்சு) 19:06, 7 பெப்ரவரி 2021 (UTC)Reply[பதில் அளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Pazha.kandasamy&oldid=1904408" இருந்து மீள்விக்கப்பட்டது