உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:dado2

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கொடிகள் இல்லாமல் உள்ள மொழிப்பட்டையை உடைய பக்க வடிவத்தைப் பார்க்க dado3 என்னும் பக்கத்தைப் பார்க்கவும். எழுத்துகள் கத்தரிப்பூ நிறத்தில் இருக்கும் dado4 என்னும் பக்க வடிவதையும் பார்க்கவும். மேலும் தொடர்பான கருத்துகளுக்கு பேச்சு:dado என்னும் பக்கத்தைப் பார்க்கவும்.--செல்வா 15:17, 16 ஆகஸ்ட் 2010 (UTC)

  • நீங்கள் செய்யும் தொகுப்புகளின் நம்பகத்தன்மையை பிறர் உறுதிப்படுத்திக் கொள்ள, தயவுசெய்து தகவல் ஆதாரங்களைத் தரவும். என்று கீழே அறிவிப்பு உள்ளதால் தான், முன்பு இருந்த உசாத்துணை என்ற சொல்லிற்கு பதிலாக, ஆதாரம் என்ற சொல்லை தொடர்ந்து பயன்படுத்த கேட்டுக் கொள்கிறேன்.--த*உழவன் 00:49, 19 ஆகஸ்ட் 2010 (UTC).
  • xடே6டோ6 அருகில் இருக்கும் இந்த கொடிக்கோப்பு (Flag of the United States.svg )28 படவணுக்கள் இருந்தால் தெளிவாகத்தெரிகிறது. இதனால் முன்னிருக்கும் டே6டோ6 அளவினை விட மீறாமலும் இருக்கிறது. மேலும், அங்குள்ள நிரல்களை ஒரு சாதாரணப் பங்களிப்பாளர் எளிமையாகப் பயன்படுத்துமாறு செய்தால் அதனைத் தயங்காமல் பயன்படுத்த பலர் முன்வருவதற்கான வாய்ப்புண்டு.--த*உழவன் 11:19, 19 ஆகஸ்ட் 2010 (UTC)
இவை தானியங்கியாயும் வருவிக்க இயலும். தானியங்கியாய் இல்லாவிடினும் எளிதாக ஒரு பயனர் இட வழி செய்யலாம் (பல முறைகள் உள்ளன). ஆனால் ஒலிப்புகளை அம்மொழியை நன்கு உணர்ந்தவர்களோ, அல்லது அனைத்துலக ஒலியன் நெடுங்கணக்குக் குறியீடுகளை உணர்ந்து அச்சொல்லுக்கான ஒலிப்புகள் அவற்றில் தந்திருந்தாலோதான் தர இயலும். மிகப்பெரும்பாலான ஆங்கிலச் சொற்களுக்கும் ஏறத்தாழ எல்லா இந்திய மொழிகள் சொற்களுக்கும் ஒலிப்புகள் தருவது எளிதே (பலரும் செய்ய கூடும்). ஆனால், அரபுமொழி, உருசிய மொழி, போலந்திய மொழி, வியட்நாமிய மொழி, சீன மொழி போன்ற பிற பல மொழிகளுக்கு அவ்வளவு எளிதல்ல (ஆனாலும் இயலும்). --செல்வா 00:34, 20 ஆகஸ்ட் 2010 (UTC)
  • //xடே6டோ6 அருகில் இருக்கும் இந்த கொடிக்கோப்பு (Flag of the United States.svg )28 படவணுக்கள் இருந்தால் நன்கு தெரியும்// என்பதனை மாற்றம் செய்ய கேட்டுக்கொள்கிறேன். அனைத்துலக ஒலியன் நெடுங்கணக்குக் குறியீடுகளை கற்பதனை விட க1,க2,க3,.. என்று கற்பது எளிமையாக இருக்கிறது. அடிநிலைக் கல்வி கறபவரும் ஏற்பர். உரையாடலுக்கும் எளிமையாக உள்ளது. பிறருக்கு கற்பிக்கும் போதும் உடன் பலன் கிடைக்கிறது. மற்ற பல முறைகளை கையாண்ட போது குழந்தைகள் முகம் சுளிக்கின்றனர்() கொட்டாவி விடுகின்றனர். பி.பி.சி.யில் ஆங்கில ஒலியன்களை கற்பித்தல் போல, தமிழ் மூலம் பிற மொழிகளின் ஒலிப்பை கற்றபிக்க திட்ட மிட வேண்டுகிறேன். எனக்கு அனைத்துலக ஒலியன் நெடுங்கணக்குக் குறியீடுகளை கற்றலை விட, இது எளிமையாக இருக்கிறது. அனைத்துலக ஒலியன் நெடுங்கணக்குக் குறியீடுகளை உரையாடல்களில் தெரிவிப்பதற்கு அதற்குரிய குறியீடுகளை எப்படி தட்டச்சு செய்வது என்பதில் குழப்பம்.
இதனை வளர்த்தெடுக்க குறிப்பாக இந்திய மொழிகளில் ஆவணசெய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். என்னால் இயன்ற வரை ஒலிக்கோப்புகளை இந்திய மொழிகளுக்கு இணைக்கிறேன்.

மிக்க நன்றி. வணக்கம்--த*உழவன் 02:30, 20 ஆகஸ்ட் 2010 (UTC)

  • ஒலி என்னும் சொல்லுக்கு அருகே உள்ள கொடியின் அளவைப் பெரிது படுத்தலாம் (28 படவணுக்களாக). அதில் சிக்கல் இல்லை.
  • ஆம், தமிழ் எழுத்துகளில் இருந்தால் புரிந்துகொள்ள மிகவும் உதவியாக இருக்கும். அன்னைத்துலக ஒலியன்களைத் தட்டச்சு செய்ய (மைக்குரோசாவ்'ட் வோர்டு போன்ற மென்கலத்தைப் பயன்படுத்தினால், இப்பக்கத்தில் உள்ளவாறு செய்யலாம். இவை எல்லாவற்றையும் விட குறிகள் தரப்பட்டிருக்கும் இடத்தில் இருந்து ஒற்றி ஒற்றுவதே (copy-paste) எளிது. இந்திய மொழிகளுக்கும், பிற மொழிகளுக்கும் தமிழ் எழுத்தின் வழியே முறைகள் உருவாக்கி உள்ளேன், ஆனால் விரித்து எழுதாமல் இருக்கின்றேன். பவுல் விரும்பியவாறு மிக விரைவில் அஒநெ ஒலிக்குறிகளுக்கு ஈடான தமிழ் ஒலிக்குறிகள் இங்கு இடுவோம்.--செல்வா 13:16, 20 ஆகஸ்ட் 2010 (UTC)
  • படவணுக்களை மாற்றிவிட்டேன்.மின்கலம் என்பதற்கும், மென்கலம் என்பதற்கும் என்ன வேறுபாடு? பதிவேறவுள்ள சொற்களுக்கு அஒநெ எழுதித்தாருங்கள். பின்னர்,விக்கிப்பீடியாவில் விரிவு படுத்தவும். அதனை தானியங்கி படிவத்தில் இணைக்க முற்படுகிறேன். ஏதேனும் இடர் இருப்பின் தெரியப்படுத்துகிறேன்.
  • மின்கலம் என்பது வேதியியல் வினையால் மின்னாற்றலை உருவாக்கி நல்கும் சிறு உருளி அல்லது பெட்டி, பொதுவாக மின்வாய். மின்கலன் என்றால், மின்பயன்பாட்டுப் பொருள். மென்கலன் என்ன்பது மென்பொருள் என்பதற்கான மற்றொரு சொல். படைக்கலன் என்றால் ஆயுதம், அணிகலன் என்றால் நகைகள் என்பது போல மென்கலன் என்பது "மென்"வினைகளுக்கான (கணிநிரல்களுக்கான) கலன்] (பொருள்). மின்கலன் என்பதை மின்தொடர்பான கருவிகள், பொருள்கள் ஆகிய அனைத்திற்கும் பயன்படுத்தலாம். ஆங்கிலத்தில் "electrical stuff" என்று பொதுப்பட, பேச்சுவழக்காகக் கூறுவதைப் போன்றது ஆனால் மின்கலம் என்பது நன்னடையான தமிழ்ச்சொல். ஒளியுமிழும் இருமுனையி (Light-emitting diode, LED) அல்லது ஒளியீரி (LED) (இங்கு ஈரி என்பது இருமுனையம் என்றும்ம், ஒளி ஈனுவது என்றும் இருபொருள் தருவது சிறப்பு என்று நினைக்கின்றேன்.--செல்வா 15:09, 6 செப்டெம்பர் 2010 (UTC)Reply
பொருள் சுருக்கமாக தரும் வார்ப்புரு.விளக்கம் விரிவாக தரும் வார்ப்புரு. பயன்பாடு என்பதனை விளக்கம் என்பதிலேயே அடக்கலாமென்று எண்ணுகிறேன். பலருக்கு எதில் எதைத் தரவேண்டும் என்ற குழப்பம் வர வாய்ப்புண்டு என்பதால் நீக்கக் கேட்டுக்கொள்கிறேன்.
dado உள்ள ஆதாரங்களையும், கொடை பற்றிய குறிப்புகளையும் எங்கு குறிப்பிட விரும்புகிறீர்கள்
கொடி பற்றி ஆலமரத்தடியில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைக் காணவும்(ஆலமரத்தடியில்

6.4 எந்த மொழிக்கு என்ன மொழிப் பட்டி(கொடி பற்றி..) என்பதிலுள்ள உரையாடல்கள்)}}). கொடியில் மட்டுமே இறுதி முடிவு மாற்றப்பட வேண்டும். மற்ற அனைத்தும் இறுதி முடிவு எடுக்கப்பட்டு விட்டது.நன்றி.வணக்கம்.--த*உழவன் 01:16, 5 செப்டெம்பர் 2010 (UTC)Reply

இறுதி முடிவுகள் யாவை? தெரிந்துகொள்ளலாமா?

[தொகு]

1) *த*உழவன், கொடியில் மட்டுமே இறுதி முடிவு மாற்றப்பட வேண்டும். மற்ற அனைத்தும் இறுதி முடிவு எடுக்கப்பட்டு விட்டது என்று கூறுகிறீர்கள். ஆலமரத்தடியிலும் பேச்சுப் பகுதியிலும் நீண்ட உரையாடல்கள் (பலமுறை) நடந்ததன் விளைவாக இவ்வாறு சொன்னீர்கள் என்பது புரிகிறது. ஒரு சில முக்கியமான முடிவுகள் எடுக்கும் தருணத்தில் உள்ளோம் என்பது தெளிவு. ஆனால் தாங்கள் கூறுகின்ற (ஏற்கெனவே எடுக்கப்பட்ட) முடிவுகள் யாவை என்று தெரியவில்லை. ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவுகளை அருள்கூர்ந்து வரிசைப்படுத்தி இங்கே தருவீர்களா? உரையாடலில் கலந்துகொண்ட அனைவரும் அம்முடிவுகளைத் தெளிவாக அறிந்துகொள்ள இது வழியாகும் என நினைக்கிறேன். மேலும், dado2, dado3, abacus போன்று மேலே மாதிரி இடுகைகளைக் குறிப்பிட்டதுபோல, இன்னும் ஒருமுறை துல்லியமாகச் சுட்டிக்காட்டினால் வாக்கெடுப்பில் பலரும் கலந்துகொள்ள வாய்ப்பு இருக்கும்.

  • அடுத்து, கொடி பற்றி என்ன முடிவு எடுக்க வேண்டும்? பல முன்மொழிதல்களில் ஒன்றைத் தெரிந்தெடுக்கக் கேட்கிறீர்களா? அந்த முன்மொழிதல்களை ஒன்று, இரண்டு...என்று தெளிவாக வரிசைப்படுத்தி, எம்முறை சிறந்தது என்று கேட்டுக் கருத்துக் கணிப்பு நடத்தினால் சிறப்பாயிருக்கும்.
  • பல விக்சனரி ஆர்வலர்களின் பங்களிப்போடு நல்ல முடிவுகளை நெருங்கிக்கொண்டிருக்கின்றோம் என்று நினைக்கும்போது அகம் மகிழ்கின்றது. பாராட்டுகள்!:)--பவுல்-Paul 02:10, 5 செப்டெம்பர் 2010 (UTC)Reply

2) பவுல் ஐயாவின் கேள்விகளே என்னுடையதும். முடிவு எடுத்துவிட்டீர்கள் என்றால், யார் எப்பொழுது எந்த அணுகுமுறையில் எடுக்கப்பட்டது? தகவலுழவனின் கூற்றுகள் விக்கிமுறையைப் புரிந்துகொண்டதாகவே எனக்கு உணர்த்தவில்லை. இங்கு அனைவரும் கலந்துரையாடும்பொழுது முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்று தகவலுழவன் கூறுவது எனக்குச் சரியாகப் படவில்லை. முடிவு எடுக்க வேண்டியது செல்வாவோ, தகவலுழவனோ, பழ. கந்தசாமியோ என்று எந்த ஒரு தனிப் பயனரும் அல்ல. பொதுவான ஒரு கருத்தை எல்லோரும், அல்லது பலரும் விரும்புகின்றார்கள் என்றால், அதனை முன் வைத்துக் கருத்துக்கண்ணிப்பு செய்வது வேண்டும். பவுல் அவர்கள் எத்தனையோ அக்கறையுடன் பல கருத்துகளைக் கூறியுள்ளார். நானும் கூறியுள்ளேன். பொதுவில் கருத்துக்கணிக்காமல் இப்படிச் செய்வது சரியல்ல. அனைவரையும் அரவணைத்து இணக்க முடிவாக எடுப்பதே முறை. இவற்றை எல்லாம் இப்படி இங்கு சொல்லவேண்டியுள்ளதே எனக்கு வேதனையாக உள்ளது!!--செல்வா 03:27, 5 செப்டெம்பர் 2010 (UTC)Reply

3) //த*உழவன், கொடியில் மட்டுமே இறுதி முடிவு மாற்றப்பட வேண்டும். மற்ற அனைத்தும் இறுதி முடிவு எடுக்கப்பட்டு விட்டது//என்பதில் ஒரளவு என்ற சொல்லை சேர்த்து,

//த*உழவன், கொடியில் மட்டுமே இறுதி முடிவு மாற்றப்பட வேண்டும். மற்ற அனைத்தும் ஓரளவு இறுதி முடிவு எடுக்கப்பட்டு விட்டது //. வேகமாக செயல்பட்ட பொழுது ஏற்பட்ட இப்பிழையினைப் பொறுக்கவும்.

பேச்சு:dado என்ற பக்கத்தில் முந்தைய வடிவத்தின் தகவல்கள் உள்ளது. அவற்றினை dadoஇல் இட்டுள்ளேன். நீங்களும் அம்முந்தைய பக்கத்தகவல்களை dado2வில் இட்டால் நன்றாக இருக்கும்.இப்பக்கம் உங்களின் முன்மொழியும் பக்கமென்பதால் நீங்கள் தான் இட வேண்டும். படத்தைத் தவிர மற்ற தகவல்கள் ஒவ்வொரு பதிவேற்றச் சொல்லிலும் இருக்கும். பிறகு, கருத்து கணிப்பு நடத்தினால் நன்றாக இருக்கும்.கருத்துக்கணிப்புக்கு பிறகு தானியங்கி மூலம் சோதனைப் பதிவேற்றங்களை இட்டால் சரியாக இருக்குமென நம்புகிறேன். நன்றி. --த*உழவன் 04:13, 5 செப்டெம்பர் 2010 (UTC)Reply

இலக்கணக் குறிப்புச் சொற்கள்

[தொகு]

பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல் முதலான இலக்கணச்சொற்களுக்கு உள்ளிணைப்பு இருப்பது தேவை என்று நினைக்கின்றேன். வியங்கோள் வினைமுற்று என்றால் எல்லோருக்கும் என்னவென்று விளங்காது. உரிச்சொல் என்னும் சொல்லும் கூட பலருக்கும் தெரியாமல் இருக்ககூடும். ஆகவே இலக்கணக்குறிப்புச் சொற்கள் யாவும் ஒரே சீராக உள்ளிணைப்பு கொண்டு இருத்தல் நல்லது. பின்னர் வினைச்சொல்லிலும், தன்வினை பிறவினை முதலியன சுட்ட நேரலாம் (எ.கா படி, படிப்பி). இது என் தனிப்பட்ட கருத்துதான். பயனர்கள் விரும்புமாறு கூடிச்செய்வோம்.--செல்வா 13:16, 5 செப்டெம்பர் 2010 (UTC)Reply

  • இலக்கணக் குறிப்புச் சொற்கள் ஒரே சீராக அமைய வேண்டும் என்பதே என் கருத்தும்கூட. உரிச்சொல்லைப் பெயர் உரிச்சொல், வினை உரிச்சொல் என்று வேறுபடுத்திக் காட்ட வேண்டும். இடைச்சொல் என்றொரு வகை வேண்டும் (conjunction, preposition...). தன்வினை, பிறவினை என்பதை எளிமை கருதி விட்டுவிடலாம் என நினைக்கிறேன். ஆனால் விக்சனரியில் கையாளப்படுகின்ற சுருக்கக் குறியீடுகளின் அடைவு (பட்டியல்) ஓரிடத்தில் தொகுத்து அமைந்தால் பயனருக்குப் பயன்தரும் :)--பவுல்-Paul 13:51, 5 செப்டெம்பர் 2010 (UTC)Reply

கருத்துக் கணிப்புக்கான கேள்விகள்

[தொகு]

த*உழவன் அவர்களே, பலர் இணைந்து மிக்க முனைப்புடன் செயல்படுவது விக்சனரியின் சிறப்புக் கூறு. குறிப்பாக, பலரும் ஆங்காங்கே கூறிய கருத்துகளையெல்லாம் தொகுத்தும் பகுத்தும் இணைத்தும் தாங்கள் அளித்துவருவதைப் பாராட்டுகிறேன். தற்போது, விக்சனரி இடுகைகளின் அமைப்பும் தோற்றமும் அழகும் வண்ணமும் விரிவும் ஆழமும் பற்றி பல நாள்கள் கலந்துரையாடிவிட்டோம்.

அடுத்து வரும் கட்டம் கருத்துக் கணிப்பு. அதற்கு முதலில் சரியான கேள்விகள், முறையாகக் கேட்கப்பட வேண்டும். கேள்விகளை உருவாக்குவதிலும்கூட நாம் விக்கி நெறியைக் கையாளலாம். அதாவது, சில நாள்கள் கெடு கொடுத்து, கருத்துக் கணிப்புக் கேள்விகளை முன்வைக்குமாறு விக்சனரி பயனர்களை/ஆர்வலர்களைக் கேட்கலாம். ஒவ்வொரு கேள்வியையும் பயனர்கள் சரியாகப் புரிந்துகொள்வதற்காக வார்ப்புருக்கள், மாதிரி இடுகைககள் கட்டாயம் காட்ட வேண்டும். கேள்விகள் ஏராளம் வந்து குவிந்துவிட்டால் அவற்றைச் சுருக்கலாம். -:) இதன் ஒருங்கிணைப்பாளராகத் தாங்களே செயல்படுவதில் கருத்து வேறுபாடு இல்லை என்று நினைக்கிறேன்.

கேள்விகள் தெளிவாகக் கேட்கப்பட்டால் அதுவே தீர்வுக்குப் பாதி வழியாக அமையும்.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்கக் கொளல் (குறள் 504)
என்னும் வள்ளுவர் பெருமான் வழியே நம் வழி ஆகட்டும்! பணி தொடரட்டும்!! --பவுல்-Paul 13:51, 5 செப்டெம்பர் 2010 (UTC)Reply

ஒருங்கிணைப்பு தேவை(பவுல்+செல்வாவுக்கு)

[தொகு]
  • படிவ உட்கூறுகள்:இலக்கணக் குறிப்புச் சொற்கள்,படம்,பொருள், விளக்கம் உள்ளிட்ட வார்ப்புருக்கள், மொழிபெயர்ப்பு, கருத்துக்கணிப்பு பற்றி பல இடங்களில் கலந்துரையாடல்கள் நடந்துள்ளன.அவை அனைத்தினையும் ஒருங்கிணைத்து, கருத்தில் கொண்டு நாம் தொடர்வது சிறப்பான முறைகளுள் ஒன்றெனக் கருதுகிறேன்.

அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு திட்டப்பக்கம் இருப்பின் சிறப்பாக இருக்கும்.70% உரையாடல்கள் ஒருங்கிணைப்பு உள்ள பகுதி விக்சனரி:மொழியைக் குறிப்பிடும் தலைப்பு ஆகும். அதிலும் விடுபட்ட உரையாடல்களை இணைக்க வேண்டும்.

அதே போல மொழிபெயர்ப்பு, தலைச்சொல் பற்றியும் நீங்கள் (பவுல், செல்வா,பழ.கந்தசாமி) உரையாடியது காலத்தால் காக்கப்பட வேண்டியது. ஆழ்ந்த கருத்துகள் அடங்கிய பெட்டகம். அக்கருத்துக்கள் உருபெற்றால் இணைய தமிழ் அகரமுதலிகளிலே, தமிழ் விக்சனரி சிறப்பாக இருக்கும். நமக்கு பின் துவங்கிய Tamildict தமிழ்,செர்மானிய மொழிகளில் முன் சென்றுவிட்டது.

இங்குள்ள வளமைகளை ஒருங்கிணைக்க,மேற்கூறிய உட்கூறுகளுக்கான, ஒவ்வொரு சொல்லும் ஒரு திட்டபக்கமாக இருப்பின் சிறப்பாகும்.(எ. கா.) dado2என்ற இப்பக்கம், dado2வின் வடிவத்திற்கு மட்டும் கலந்துரையாட அமைந்தது.

பொதுவாக அனைத்திற்கும் பொருந்துபவைகளை கலந்துரையாட, ஆலமரத்தடியினைப் பயன்படுத்தலாம். ஆலமரத்தடியில் அதிக கருத்துக்கள், ஒரு குறிப்பிட்ட பொதுவானவையில் குவிந்தால், அதனை திட்டப் பக்கங்களில் மாற்றிட்டால் நோக்கம் சிறப்பாக முடிவாகும்.

அம்முறையில் கருத்துக்களை தெரிவிக்கப் பயன்படுத்தினால் குழப்பம் இல்லாமலும், உரையாடலுக்கு வசதியாகவும் இருக்கும். இப்படி செயல்படும் போது, எதுவும் விடுபடாமலும் இருக்கும். முன்னர் நிகழ்ந்த கலந்துரையாடல்களும் காலத்தால் காக்கப்படும்.

அதனைத்தவிர்த்து வெவ்வேறு இடங்களில் உரையாடுவது, முந்தையவற்றை அறியாமல் முழுக்க கைவிட்டு, புதிய வைகளை கையில் நாம் எடுத்தால், நம்மைக் கண்டு , நமக்கு பின்வருபவர் நம் உழைப்பைக்காப்பது ஐயத்திற்குரியது என்று என்னுள் படுகிறது.

ஏற்கனவே உள்ள கருத்துக்களை சிறப்பாக ஒருங்கிணைக்க எனக்கு வழிகாட்டினால், நான் அவர்களுடன் இணையக் காத்திருக்கிறேன்.நான் இதற்காக செய்யும் முதல் முயற்சிகளை, சாய்வு என்று விமர்சிப்பது, எனக்கு மனச்சோர்வினைத் தருகிறது.

த.இ.ப. கொடைப்பக்க அமைப்பு
(முதல்10சொற்கள்+ இறுதி10சொற்கள்)

த.இ.ப. சொற்பதிவேற்றத்திற்கு மட்டும் பயன்படும் உட்கூறுகளை (1.ஆங்கிலம்,2.{.{பொருள்}}சுருக்கமாகச் சொல்ல,3.{{விளக்கம்}.} விரிவாகச் சொல்ல, 4.இவற்றிற்கு உதவிய மூலங்கள், 5.பகுப்புகள் , 6.தமிழக அரசின் கொடைக்குறிப்பு ) தனித்தனித் திட்டபக்கமாக்கஃ கொண்டு, ஒருங்கிணைத்து கலந்துரையாடுவதே சிறப்பனெ எனக்குப் படுகிறது.

பிற வற்றினை த.இ.ப. பக்கத்தில் தேவையானவைகள் என்று பட்டியலிட்டுள்ளேன். நீங்களும் மேம்படுத்துங்கள்.

படம்,இலக்கணக்குறிப்புகள், ஒலிக்குறிப்புகள் போன்றவற்றை நாம் தான் இணைக்க வேண்டும். அவர்கள் தரவில்லை.அவர்கள் அளிதத்தை மாதிரி படமாக இணைத்துள்ளேன்.

மேற்கூறிய கருத்துக்கள் dado2 மட்டும் பொருந்துவன அல்ல. நீங்கள் இப்பக்கத்தில் கருத்திட்டதால், திட்டப்பக்கத்திற்கு பதிலாக இங்கு குறிப்பிட்டுள்ளேன். இச்சீரமைப்பை/கலந்துரையாடல் ஒருங்கிணைப்பை இங்கிருந்தே துவங்கினால் நன்றாக இருக்கும்.

உங்களின் உயரிய நேரத்தினை, தமிழ் விக்சனரியின் வளர்ச்சிக்கு செலவிடுவதற்கு மிக்க நன்றி. வணக்கம்--த*உழவன் 17:10, 5 செப்டெம்பர் 2010 (UTC)Reply

சோர்வு வேண்டாம்!

[தொகு]

த*உழவனே, சோர்வடைய வேண்டாம்! ஒருங்கிணைப்புப் பற்றித் தாங்கள் கூறுவது மிக முக்கியமான கருத்து. அதன்படியே ஒழுங்கு முறையாகச் செயல்பட்டால் மிகச் சிறப்பாக விக்சனரியை முன்னெடுத்துச் செல்லலாம். வாழ்த்துகள்!--பவுல்-Paul 17:36, 5 செப்டெம்பர் 2010 (UTC)Reply

  • தகவலுழவன், சோர்வு வேண்டாம். இங்கு நாம் யாவருமே பொதுநலத்துக்காக உழைக்கின்றோம். நீங்கள் ஒருபக்கமான கருத்துகளை மட்டுமே தந்து பிற கருத்துகளைக் கூறாததால் சாய்வு என்றேன். இதற்கான சுட்டிகளையும் தந்திருந்தேன். நாம் எல்லோரும் வளர்ந்தவர்கள், தக்கவற்றை, தக்க காரணங்களுடன் கூறப்படும்பொழுது அவற்றை வளர்முக கண்ணோட்டத்துடன் எடுத்துக்கொள்வது நம் எல்லோருக்குமே நல்லது. எனக்கும் பன்முறை நம் உரையாடலில் இச்சோர்வும், மன வருத்தமும் கூட ஏற்பட்டு மிகவும் அலுப்புற்றும் இருந்திருக்கின்றேன். அவற்றை எல்லாம் தவறான நோக்கில் பொருள்கொள்ளாமல், அவற்றில் இருந்து நான் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்னும் நினைப்புடனேயே செயல்பட்டு வந்திருக்கின்றேன். இதற்கு நிறைய பொறுமையும் வேண்டும், பொறுப்பும் வேண்டும், வளர்முகக் கண்ணோட்டமும் வேண்டும் என்று என்னைத் தேற்றிக்கொண்டிருக்கின்றேன். உணர்வுகளை முன்வைக்காமல், கருத்துகளையும், திட்டத்தின் நல்விளைவுகளையும் முன்னிறுத்திச் செயல்பட வேண்டுகிறேன்.--செல்வா 20:05, 5 செப்டெம்பர் 2010 (UTC)Reply
  • த*உழவனே! முன்மொழியப்படும் பக்கங்களுக்கிடையில் அடிப்படையில் பெரிய வேறுபாடுகள் இல்லை. இருக்கும் சில வித்தியாசங்களும் கலந்துரையாடி விரைவில் களையப்படும் என்றே தோன்றுகிறது. ஏழரைக் கோடி தமிழர்களில் ஒரு ஏழு பேர் விக்சனரியில் சற்று முனைப்புடன் செயலபட்டு வருகிறோம். நாமே சோர்வடையக் கூடாது. முனைப்புடன் அரும்பணி யைத் தொடரவும். நன்றி பழ.கந்தசாமி 20:17, 5 செப்டெம்பர் 2010 (UTC)Reply

கருத்துக்கள்

[தொகு]

1)கருத்துக்கள்:--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 07:22, 6 செப்டெம்பர் 2010 (UTC)Reply

1) படத்தின் விளக்கம், படத்தின் கீழ் பகுதியிலேயே கொடுக்கப்பட வேண்டும்.
2) எந்தவொரு விக்கியிலும் படம் தனியாகவும், விளக்கம் தனியாகவும் உள்ளதை நான் பார்த்ததில்லை.
3) பலுக்கல் என்னும் சொல்லை விட்டுவிட்டதற்கு நன்றி. தமிழ் விக்சனரியைத்தவிர வேறெங்கும் கண்டிராத கேட்டிராத சொல். அதற்கு பதிலாக ஒலி அல்லது ஒலிப்பு என்பதனை பயன்படுத்துவதே சரியாகும்.
ஆகவே dado2---க்கு நான் ஆதரவு அளிக்கிறேன். --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 07:22, 6 செப்டெம்பர் 2010 (UTC)Reply
ஆம் திருச்சி பெரியண்ணன், ஒலிப்பு என்பதைப் பயன்படுத்தலாம் என்பது என் பரிந்துரை.--செல்வா 00:47, 7 செப்டெம்பர் 2010 (UTC)Reply
  • நன்றி.பெரியண்ணன். உங்கள் 2வது கருத்தால் பல விக்கிப் பக்கங்களையும் கவனிக்கிறேன்.நமது மொழிப்பட்டையின் அழகு மற்றதை விட நன்கு உள்ளது. எனினும், சுந்தர், மாகிர் போன்றோரின் கருத்துக்களையும் அறிய ஆவல். --த*உழவன் 23:56, 8 செப்டெம்பர் 2010 (UTC)Reply

2)அதிக இடங்களில் ஒன்று என்ற எண் வருவதால், இப்படி மாற்றலாமென எண்ணுகிறேன். இது தமிழக அரசுக்கான நன்றியாகவும், நமது மகிழ்ச்சியையும் குறிக்குமென எண்ணுகிறேன். உங்களின் கருத்தென்ன? ஒன்று என்பதனைக் குறிக்கும் 1 என்பது தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பு இருப்பதால், [1] குறியிடலாமென்று முன்பு எண்ணினேன். இது மிகச்சிறியக்குறியீடு என்பதால் அக இணைப்பு இருப்பது தெரியாமலேப் போக வாய்ப்புண்டு.--த*உழவன் 02:16, 11 செப்டெம்பர் 2010 (UTC)Reply

  • இயன்றவரை சுருக்கக் குறியீடுகளைத் தவிர்த்தல் நலம் என்பது என் கருத்து. dado2 இடுகையில் இரு படங்களும் dado என்னும் சொல்லுக்குச் சற்றே வேறுபட்ட இரு பொருள்களும் தரப்படுவதுபோல் அடிக்கடி வராது. எனவே "1", "2" என்பதற்குப் பதில் (படம் 1)),(படம் 2) என்று தெளிவாகக் கூறினால் பயனருக்கு எளிதில் பொருள் விளங்கும். --பவுல்-Paul 03:27, 11 செப்டெம்பர் 2010 (UTC)Reply
படம்-1, படம்-2 என்பது போல குறிப்பிடலாம். ஆனால் வெவ்வேறு மொழிகளுக்கான படங்கள் யாவும் ஒரே பக்கத்தில் இருக்கும் பொழுது படங்களைத் தொடர்ச்சியாய், 5, 6 என்பதுபோல குறிப்பதென்றால் எனக்கு உடன்பாடே. மேலே குறிப்பிடப்பட்டது, அரசு கொடையாகத் தந்த தரவையும் அவர்கள் தந்தப் சொற்பொருளையும் குறிப்பிட.--செல்வா 03:42, 11 செப்டெம்பர் 2010 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:dado2&oldid=791353" இலிருந்து மீள்விக்கப்பட்டது