ஒளியீரி
Appearance
பொருள்
ஒளியீரி (பெயர்ச்சொல்)
- மின்னியல்: ஒளியுமிழும் குறைகடத்திக் கருவி. ஒரு குறைகடத்தி இருமுனையக் கருவியில் மின்னோட்டம் பாய்வதால் உள்ளே நிகழும் எதிர்மின்னி புரைமின்னி மீள்சேர்வால் (மீள்கூட்டத்தால்) ஒளி வெளிப்படுகின்றது இக்கருவிகளில். சிவப்பு, பச்சை ஒளியுமிழும் ஒளியீரிகள் முன்பு உருவாக்கியது போலவே அண்மையில் நீல நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் ஒளியுமிழும் ஒளியீரிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
விளக்கம்
- இது ஒளியுமிழ் இருமுனையம் (Light-emitting diode, LED) என்றும் அழைக்கப்பெறுகின்றது.
பயன்பாடு
- அண்மைக்காலத்தில் காலியம் நைட்ரைடு என்னும் கூட்டுக் குறைகடத்தியின் உதவியால் நீலநிறம் தரும் ஒளியீரிகள் உருவாக்கப்பட்டு விற்பனையாகுகின்றன.
மொழிபெயர்ப்புகள்
xx
ஐரோப்பிய மொழிகள் கிழக்காசிய மொழிகள் |
இந்தியத் துணைக்கண்ட மொழிகள் சிறுபான்மை திராவிட மொழிகள்
|
- -