உள்ளடக்கத்துக்குச் செல்

முரண்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முரண்டு (பெ)

  1. பிடிவாதம்
  2. எதிர்ப்பு; முரண்பாடு; மாறுபாடு
  3. அமையாமை
  4. வளையாமை, இணங்காமை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. obstinacy (Colloq.)
  2. opposition, stiff resistance, variance
  3. disagreement
  4. unyielding nature
விளக்கம்
பயன்பாடு
  • முரண்டுபிடி, முரண்டு செய் - be obstinate; give stiff resistance
  • குழந்தைகளில் அனைவரும் பிடிவாதம் பிடிப்பது போலவும், ஒரு பொருள் தேவையோ அல்லது ஒரு செயல் செய்ய வேண்டும் என்றாலோ அவர்கள் அதில் அதீத தீவிரமும் பிடிவாதம் பிடிப்பதும்,முரண்டு பிடிப்பதும் சில சமயங்களில் நம்ம்கு எரிச்சலூட்டுவது போல இருக்கும் ([1])
  • "என்னைவிட வைதீகமோ இல்லியோ, முரண்டு அதிகம். அறிவு, காரண காரியத்துக்குச் செவி சாய்க்கும், முரண்டு எதுக்கும் செவி சாய்க்காது." ( துளசி மாடம், தீபம் நா. பார்த்தசாரதி)
  • "எங்கே எப்படி இருக்கணுமோ, அப்பிடி இருக்க அவாளாலே முடியும். 'எங்கேயும் இப்படித்தான் இருப்பேன் - இப்பிடித்தான் இருக்க முடியும் - இதுதான் பிடிக்கும்'னு முரண்டு பண்றதெல்லாம் நம்ம ஜனங்க கிட்டத்தான் அதிகம்...." (துளசி மாடம், தீபம் நா. பார்த்தசாரதி)
  • வாத்தியார் அடிப்பார் என்று பள்ளிக்கூடம் போக முரண்டு செய்யும் குழந்தைகளும் (நெருப்புக் கோழி, ந.பிச்சமூர்த்தி)
  • ஏறப் பார்க்கிறவன் தன் எஜமானன் அல்ல என்பதை அந்த அறிவுக் கூர்மையுள்ள குதிரை தெரிந்து கொண்டது. அந்த வேற்று மனிதனை ஏற்றிக் கொள்ள மாட்டேன் என்று முரண்டு பிடித்தது! (பொன்னியின் செல்வன், கல்கி)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---முரண்டு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பிடிவாதம் - முரண்படு - முரண் - முரண்பாடு - எதிர்ப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=முரண்டு&oldid=1242198" இலிருந்து மீள்விக்கப்பட்டது