முருகு
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- முருகு, பெயர்ச்சொல்.
- இளமை
- முருகு விம்மிய மொய் குழலேழை (சீவ.)
- கடவுள் தன்மை
- முருகு மெய்ப் பட்ட புலைத்திபோல (புறநா. 259)
- மணம்.
- முருகமர்பூ முரண்கிடக்கை (பட்டினப். 37)
- அழகு
- வெறியாட்டு.
- முருகயர்ந்துவந்த முதுவாய் வேலன் (குறுந். 362).
- வேள்வி.
- படையோர்க்கு முரு கயர (மதுரைக். 38)
- திருவிழா. (திவா.)
- முருகயர்பாணியும் (சூளா. நாட். 7)
- பூத்தட்டு. (நாமதீப. 429.)
- தேன்.
- முருகு வாய்மடுத்துண்டளி மூசும் (நைடத. மணம்புரி. 23)
- கள்
- எலுமிச்சை
- எழுச்சி. (திவா.)
- அகில்
- திருமுருகாற்றுப்படை.
- முருகு பொருநாறு (பத்துப் பாட்டு, தனிப்பா.)
- விறகு. (திவா.)
- காதணிவகை.
- வச்ர முருகை யெந்தக் கோனான் றன் கையிற் கொடுத்தானோ (விறலிவிடு. 703)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - muruku
- Tenderness, tender age; youth
- divinity
- Fragrance
- Beauty
- Dancing while under possession by Skanda
- Sacrificial feast
- Festival
- Flower-salver
- Honey
- Toddy
- Sour lime
- Elevation, height
- Eagle-wood
- A poem in Pattu-p-pāṭṭu
- Fuel
- An ornament worn in the helix of the ear
விளக்கம்
- இந்த சொல்லுக்கு இளமை, அழகு, மணம், கடவுள் தன்மை, தேன் என்று பல பொருள்களும் இருக்கிறது. ஆதலால் முருகன் மாறாத இளமையும், அழியாத அழகும், குறையாத நறுமணமும் நிறைந்த தெய்வத்தன்மையும், தெவிட்டாத இனிமையும் உடையவன் என்று பொருள் கொள்ளப்படுகிறது.
- மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு என்றாயிற்று. (ம்+உ, ர்+உ, க்+உ --- மு ரு கு)
- இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும் என்றும் சொல்கிறார்கள்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +