உள்ளடக்கத்துக்குச் செல்

விக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்/2011/ஜனவரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
« 2010/டிசம்பர்

(Recycled டிசம்பர்)

ஜனவரி

(Recycled ஜனவரி)

2011/பெப்ரவரி »

(Recycled பெப்ரவரி)

நாள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31

{{wotd | சொல் | p.o.s | விளக்கம்| மாதம் | நாள் }}

{{wotd | சொல் | p.o.s | விளக்கம்| மாதம் | நாள் | audio=En-uk-{{subst:PAGENAME}}.ogg }}

When the words for a given month have all been replaced (or whatever) then subst: the sub-templates in on this page. That will preserve this month's archive, leaving the entries in the "Recycled" monthly pages to be (optionally) reused next year.

தினம் ஒரு சொல்   - ஜனவரி 1
வயலின் (பெ)
வயலின்
  1. வயலின் என்பது ஒரு கம்பி வாத்தியம்.
  2. இது மேற்கித்திய நாடுகளில் பயன்படுத்தும் இசைக்கருவி.
  3. violin...ஆங்கிலம்
  4. வயலின் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன கருநாடக இசையை வயலினில் வாசித்தோரில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஜனவரி 2
அல்லி (பெ)
அல்லி மலர்
  • அல்லி மலர் தண்ணீரில் இருக்கும்.
  • அல்லி மலர் இரவில் மலரும்.
  • இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
ஆம்பல் --- water lily
தாமரை --- lotus nymphaea lotus
அகவிதழ்; பூவின் உள்ளிதழ் --- inner flower petals
பூந்தாது --- filament of a stamen
அல்லியரிசி --- lily seeds
இளவேர் --- new root, shoot
காயா மரம் --- iron-wood tree
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஜனவரி 3
பைஞ்சுதை (பெ)
பைஞ்சுதைக் கலவை
  • பைஞ்சுதை --- சிமிட்டி
  • கட்டிடப் பணிகளுக்கு, பைஞ்சுதை மிக அவசியமாகும்.
  • கட்டிடப் பணிகளில், ஒட்டுவதற்கு பயனாகும் ஒரு பொருள் ஆகும்.
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஜனவரி 4
Pagoda (பெ)
The World Peace Pagoda - Lumbini
  • புத்த மதத்தைச் சார்ந்த ஆலயம். (புத்த ஆலயம்)
  • கௌதம புத்தரின் பிறந்த இடமான லும்பினியில் (கபிலவஸ்த்துவிற்கு அருகில்) உள்ள பக்கோடா.
  • உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூருக்கு அருகில் நேப்பாள நாட்டில் இந்திய நாட்டின் எல்லைக்கு அருகே உள்ளது.
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஜனவரி 5
துளி (பெ)
மலர்த்தேன் (nectar) --- பூவில் தேன் துளிகள்
  1. ஒரு சொட்டு --- a drop
  2. சிறிய பகுதி --- a very little
  3. நீர்ம அளவில் ஒரு சிற்றலகு; துளி --- minim
  4. பனித்துளி (பனியின் துளி - காற்று மண்டலம் குளிர்வதால் உருவாகிப் படியும் நீர்த்துளி)
  5. மணித்துளி (ஒரு மணிக்கு 60 மணித்துளிகள். ஒரு மணித்துளிக்கு 60 நொடிகள்.)
  6. தேன் துளிகள் (nectar)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஜனவரி 6
நிழல் (பெ)
நீர்நிலையில் பறவையின் நிழலும் அதன் பிரதிபிம்பமும்
  1. சாயை, சாயல் --- shade, shadow
  2. பிரதிபிம்பம் --- image, reflection, as in a mirror
  3. அச்சு --- type, representation, counterpart
  4. புகலிடம் --- protection, asylum, refuge
  • மர நிழல் --- shade of tree
  • அவளை நிழல் போலப் பின்தொடர்ந்து சென்றான் --- He followed her like a shadow
  • வெயிலின் அருமை நிழலில் தெரியும் (பழமொழி)
  • நிழல் பிரிவதில்லை தன் உடலை விட்டு அது அழிவதில்லை கால் அடிகள் பட்டு (பாடல்)
  • தண்ணிழல் வாழ்க்கை (பட்டினப்பாலை 20)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஜனவரி 7
கர்ணகடூரம் (பெ)
  • காதுக்குக் கடுமையான, துன்புறுத்தும், கேட்கக் கூசும் சொல் அல்லது ஒலி
  • that which unpleasant to hear; harsh, jarring, discordant sound
  • கர்ணகடூரம் --- கர்ணம் (காது) + கடூரம்
  • 'கர்ணம்’ என்றால் சம்ஸ்கிருத மொழியில் 'காது’ என்று பொருள். (உ-ம்: கஜகர்ணம் - யானைக் காது).
  • காதைப் பொத்திக்கொள்ளும் அளவுக்குக் கடுமையான சொற்களைக் 'கர்ணகடூரம்’ என்று கூறுகிறோம்.
  • கொடூரம் என்பது செயல். கடூரம் என்பது சொல். கடுமையான, துன்புறுத்தும் சொற்கள் என்று அர்த்தம்.
  • .......மேலும் கடூரமான வார்த்தைகளால் அவளை ஏசுகிறான். சபையில் இருந்த பெரியவர்கள் காதைப் பொத்திக்கொள்கிறார்கள். அதுவே கர்ணகடூரம்!
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஜனவரி 8
உண்டாட்டு (பெ)
  1. களியாட்டம், கொண்டாட்டம், விழா
  2. கள்ளுண்டுமகிழ்தலைத் தெரிவிக்கும் புறத்துறை
  3. விளையாட்டு
  4. மகளிர் விளையாட்டு வகை
  1. festivity, joviality, as of warriors celebrating the seizure of cows by indulging in drink
  2. poems describing the merry-making of victors
  3. play, game
  4. a ladies' game
  • வெட்சி கரந்தைப் போர்களில் ஈடுபட்டு வென்று மீண்ட வீரர்களைப் பெருமைப் படுத்துவதற்காக ஊரவர் உண்டாட்டு நிகழ்த்திக் கொண்டிடாடிய நிகழ்வுகளைச் சங்க இலக்கியங்கள் சுவைபடப் பேசுகின்றன.
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஜனவரி 9
தடாகம் (பெ)
தாமரைத் தடாகத்தில தாமரை மலர்கள் பூத்திருக்கின்றன
  • தடாகம் என்பது ஒரு நீர் நிலையாகும். தடாகத்தில், குறிப்பாக தாமரைச் செடிகள் வளரும்.
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஜனவரி 10
தொன்னை (பெ)
தொன்னை
  • இலையால் செய்யப்பட்டக் குவளை அல்லது கோப்பை / கலம்
  • A cup made of plantain or other leaf pinned up at the corners
  1. நெய்க்கு தொன்னை ஆதாரமா.. தொன்னைக்கு நெய் ஆதாரமா? (பழமொழி)
  2. இளைஞர் இலக்கியம், பாரதிதாசன் -->
ஏரிக்கரை எல்லாம் பனை, தென்னை - அதன்
இடையிடையே அலரி நல்ல புன்னை
சார்ந்தவர்கள் எனக்குத் தந்தால் தொன்னை - பனஞ்
சாற்றை ஊற்றிக் குடிக்கச் சொன்னார் என்னை.
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஜனவரி 11
அரிமா (பெ)
தினம் ஒரு சொல்/பரண்/2011/ஜனவரி:
சிம்மக் கர்ஜனை
ஆர்பரிக்கும் சிங்கம்
  • ஆண் சிங்கம்
மொழிப்பெயர்ப்புகள்
சொல்வளம்
  • அரிமா சங்கம் --- lion's club
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஜனவரி 12
பலூன் (பெ)
படிமம்:Himeji Oshiro Matsuri August09 189.jpg
Toy Balloon --- பொம்மை பலூன்
  1. காற்றடைத்த பை
  2. ஊதும்பை; வளிக்கூடு
  3. வாயுக்கூடு; வாயுக்கூண்டு
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஜனவரி 13
கூழைக்கடா (பெ)
கூழைக்கடா
  • கால் குட்டையாகவும், பின்புற வால் குட்டையாகவும், பெரிய உடலுடன், அலகில் ஒரு பை போன்ற அமைப்பைக் கொண்ட ஒரு நீர்ப் பறவை இனம்.
  • வால் குட்டையாகவோ இல்லாமலோ இருந்தால் கூழை என்பர்.
  • வால் குட்டையாகவோ இல்லாமலோ இருக்கும் மாட்டுக்கும் கூழைமாடு என்பர். *இப்பறவை எழுப்பும் ஒலி கடாமாடு எழுப்பும் ஒலியைப் போல் இருப்பதால் கூழைக்கடா எனப் பெயர் பெற்றது.
  • ஆங்கிலம்
  1. ornithol.pelican
  2. spotted-billed pelican or grey pelican


.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஜனவரி 14
பூவை (பெ)

ஆங்கிலம்

  • பூவை, திரௌபதி புகழ்க் கதையை (பாஞ்சாலி சபதம், பாரதியார்)
  • பூவை நிறங் கொண்டபுத்தேள் பொன்மார்பில் வீற்றிருந்த (கந்த புராணம்)
  • பூவை யன்னதோர் மொழியினாள் சிறுகுடிப் புகுந்து (கந்த புராணம்))
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஜனவரி 15
பொங்கல் பானை (பெ)
பொங்கல் பானை
  • பொங்கல் திருநாளில், பொங்கல் சமைக்கப் பயனாகும் பானை.
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஜனவரி 16
பரிமாணம் (பெ)
பல பரிமாணங்கள் உடைய வடிவங்கள்

பரிமாணம் (சூடாமணி நிகண்டு) - இச்சொல் ஒரு பல்பொருள் ஒரு மொழி ஆகும்.

  1. அளவு - அந்த கப்பலின் பரிமாணம் என்ன?
  2. அளவீடு - அக்கட்டிடம், நல்ல பரிமாணங்களோடு உள்ளது
  3. உருவளவை - எந்த சிக்கலும், பல பரிமாணங்களை உடையது.
  4. பருமன் - நமது உடல் பரிமாணம் பெற, உடற்பயிற்சி அவசியம் ஆகும்.
  5. பருமானம் - பூமியின் பரிமாணம் இடத்திற்க்கு இடம் வேறுபடுகிறது.
  6. மற்றொருப் பார்வை / கோணம் - அவரது இசைப் பரிமாணங்கள், அருமையாக உள்ளன.
  1. dimension (ஆங்)
  2. dimensión (எசு)
  3. परिमाण (இந்தி)
  4. വിസ്തീര്‍ണ്ണം (மலை)
  5. মাত্রা (வங்)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஜனவரி 17
ஆறுமணிக்குருவி (பெ)
ஆறுமணிக்குருவி
  1. ஆறுமணிக்குருவி என்பது ஒரு சிறு பறவையாகும்.
  2. இதன் மற்ற பெயர்கள் --- தோட்டக்கள்ளன், பொன்னுத்தட்டான், காளி.

(ஆங்)

  1. indian pitta --- pitta
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஜனவரி 18
முருகு (பெ)
The world's tallest statue of Murugan, at Batu Caves.--- மலேசியாவில் உள்ள உலத்திலேயே உயரமான முருகன் சிலை
  • அழகு, இளமை, கடவுள் தன்மை
  • முருகு என்றால் அழகு என்று பொருள்.
  • முருகன் என்றால் அழகன் என்பதாகும்.
  • beauty ஆங்கிலம்
  • முருகு என்றால் அழகு என்பார்கள். இந்த சொல்லுக்கு இளமை, அழகு, மணம், கடவுள் தன்மை, தேன் என்று பல பொருள்களும் இருக்கிறது.
  • ஆதலால் முருகன் மாறாத இளமையும், அழியாத அழகும், குறையாத நறுமணமும் நிறைந்த தெய்வத்தன்மையும், தெவிட்டாத இனிமையும் உடையவன் என்று பொருள் கொள்ளப்படுகிறது.
  • மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு என்றாயிற்று. (ம்+உ, ர்+உ, க்+உ --- மு ரு கு)
  • இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும் என்றும் சொல்கிறார்கள்.

சொல்வளம்

ஒர் - உர் - முர் - முறு - முருகன் - மருகன் (protector)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஜனவரி 19
நிகண்டு (பெ)
  • அகராதிகள் தோன்றுவதற்கு முன் தமிழ்ச் சொற்களின் பொருள்களை அறிந்துகொள்வதற்குப் பயன்பட்டவை நிகண்டுகள் எனப்பட்ட நூல்களாகும்.
  • செய்யுள் வடிவில் அமைந்தவை.
  • நிகண்டு என்னும் சொல் தொகை, தொகுப்பு, கூட்டம் என்னும் பொருள் தரும்.
  • இதிலே, சொற்கள் பொருள் அடிப்படையில் (தெய்வப் பெயர்கள், மக்கட் பெயர்கள்) என்று தொகுதிகளாகக் கொடுக்கப்பட்டிருக்கும்.
  • இந் நூல்கள் ஆரம்பத்தில் உரிச்சொற்பனுவல் என்ற தமிழ்ச் சொல்லால் அழைக்கப்பட்டன. எனினும் இச் சொல் நீளமாக இருந்ததனாலோ அல்லது இடைக் காலத்திலேற்பட்ட வடமொழிச் சொற்பயன்பாட்டு மோகம் காரணமாகவோ நிகண்டு என்ற வடமொழிப் பெயரே நிலைபெற்று விட்டது.
  • திவாகர நிகண்டு (திவாகர முனிவர் இயற்றியது) (கி.பி. 8 ஆம் நூற்றாண்டு)
  • பிங்கல நிகண்டு (பிங்கலம் இயற்றியது)
  • சூடாமணி நிகண்டு (மண்டலபுருடர் இயற்றியது)
  • தொடர்புச் சொற்கள்
1)அகரமுதலி, 2)அகராதி, 3)நிகண்டு, 4)சொற்பொருளி
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஜனவரி 20
பஞ்சகவ்வியம் (பெ)
பசு மாடு
  • பஞ்சகவ்யம் என்றால் பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவது. அவை! 1)சாணம் 2) கோமியம் 3) பால் 4) நெய் 5) தயிர்
  • இவை ஐந்தையும் சரியான விதத்தில் கலந்து தயாரிக்கபடுவதே பஞ்சகவ்யம் இது ஆயுர் வேத வைத்தியம் , பயிர் வளர்ப்பு இரண்டிலும் பயன்படுகிறது.
  • மேலும் சில மூலப்பொருட்களை சேர்த்து இதன் திறனை அதிகரித்து இயற்கை விவசாயத்தில் தற்போது பயன்படுத்துகிறார்கள்.
  • The five products of the cow mixed together while reciting mantras, viz., milk, curd, ghee, urine and dung
  • பஞ்சகவ்யம் --- இது வந்த நோயைப் போக்கும். இனிவரும் நோயை வராமல் தடுக்கும்.
  • பஞ்சகவ்வியங் கொள்ளவோர் பசுவருளென்றான் (உத்தரரா. அசுவ. 129)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஜனவரி 21
சிறகு (பெ)
சிறகுகளால் ஆன இறகு
சிறகு --- இறகின் பகுதி
  • சிறகுகள் () --- இறகின் பகுதி

ஆங்கிலம் - feather

 :(சிறகுகளின் தொகுதி) - (இறகு) - (இறக்கை) .

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஜனவரி 22
நாவாய் (பெ)
மொசாம்பீக்கில் ஒரு பாய்மரக் கப்பல்
  1. பாய்மரக் கப்பல், மரக்கலம்
  2. காற்றின் விசை கொண்டு செல்லும் கப்பல்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஜனவரி 23
பனித்துளி (பெ)
பனித்துளி --- dew-drop
  1. பனியின் துளி - காற்று மண்டலம் குளிர்வதால் பெய்யும் / உருவாகிப் படியும் நீர்த்துளி
  2. குளிர்ச்சி
  3. பனித்துளி --- பனி + துளி

ஆங்கிலம்

  1. dew-drop; dew; mist
  2. chillness
 :பனி - துளி - மழைத்துளி - [[ ]] - [[]]


.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஜனவரி 24
ஓலை (பெ)
பதப்படுத்தாத ஓலை
பதப்படுத்தப்பட்ட ஓலை
  1. பனை மரத்தின் இலை.
  2. குருத்தோலை.


.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஜனவரி 25
அம்பாரம் (பெ)
நெற்குவியல்
  • குவியல், அடுக்கு, நெற்குவியல், களஞ்சியம்.
  • அம்பாரம் தேத்துறது. (வாரு பலகையால் உப்பு அம்பாரத்தைத் தேய்த்து குவியலாய் அமைத்தல். )
  • நெல்லை அளக்கும்போது, படியில் அம்பாரமாக நெல்லைக் குவிக்கும்போது தாராளமாக அள்ளிவைத்துப் பெட்டியில் கொட்டுவார்கள்.
 :(உப்பு அம்பாரம்) - (புகையிலை அம்பாரம்) .

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஜனவரி 26
முண்டகம் (பெ)

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஜனவரி 27
சல்லிக்கட்டு (பெ)
சல்லிக்கட்டு நிகழ்படம்
  • தமிழகத்தில் பொங்கலன்று நடைபெறும் சல்லிக்கட்டு (மஞ்சுவிரட்டு) பழம்பெருமை வாய்ந்தது. சல்லி என்பதற்கு பணம் என்பது பொருளாகும். பண முடிப்பை, மாட்டின் கொம்புகளுக்கிடையே கட்டி விடுவர். அம்மாட்டினை அடக்குவோர், அப்பணமுடியை எடுத்துக் கொள்ளலாம்.
  • பலர் ஜல்லிக்கட்டு என்றே உச்சரிக்கின்றனர்.. இது சரியான தமிழ் உச்சரிப்பு அல்ல.
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஜனவரி 28
வனம் (பெ)
துருக்கியின் வனம்
  • இது ஒரு வடமொழி வழக்காகும் (சுந்தர வனம்).
  • ஒவ்வொரு நாட்டிலும், வனம் மூன்றில் ஒரு பகுதி இருக்க வேண்டும்.
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஜனவரி 29
அன்றில் (பெ)
அன்றில் பறவை (பிற படங்கள்)

(ஆங்)

  • அன்றில் ஒரு பறவையினம் ஆகும்.


.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஜனவரி 30
kiosk (பெ)
IBM Kiosk
  • a computer terminal that provides information
  • தகவல்களை தெரிவிக்கும் கணினி
  • பெட்டிக்கடை
  • வெளிப்புறக் கட்டமைவு
  • சிறுகடை
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஜனவரி 31
சங்கு (பெ)
சங்கு
  1. நீர்வாழ் சங்கு
  2. ஒரு பேரெண்
  3. பெரும்படை

ஆங்கிலம்

  1. chank, conch, large convolute shell
  2. thousand billions
  3. A large army
  • சங்கு சுட்டாலும் வெண்மைதரும் (மூதுரை, ஔவையார்)
  • சங்குதங்கு தடங் கடல் (திவ். பெரியதி. 1, 8, 1)
  • சங்குதரு நீணிதியம் (சீவக சிந்தாமணி. 493).
  • கழுக்கடை சங்கொடு . . . விழுப்படை யாவும் (கந்தபு. சகத்திரவாகு)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக