வன்னம்
Appearance
பொருள்
வன்னம்(பெ)
- வண்ணம்
- வன்ன மகளிர் வசப்பட வேபல மாயங்கள் சூழ்ந்திடு வான் (கண்ணன் - என் தோழன், பாரதியார்)
- எழுத்து
- தங்கம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வன்னம் - வண்ணம். இரு சொற்களுக்கும் நிறம், அழகு எனும் பொருள் உண்டு. இருப்பினும் நிறத்தைக் குறிக்க நாம் வண்ணம் எனும் சொல்லையே பயன்படுத்துகிறோம். இரண்டிற்கும் வேறுபாடான பொருளும் உண்டு. "வன்னம்" எனில் எழுத்து. "வண்ணம்" எனில் இசைப்பாட்டு வகை என்று இருவேறு பொருள் காணலாம். இவ்வண்ணம், இவ்வாறாக என்ற பொருளிலும் பயன்பாட்டில் உள்ளது. இராமபிரானின் கைவண்ணம், கால் வண்ணம் பற்றியெல்லாம் கம்பன் பாட்டில் கண்டு மகிழலாமே. (மொழிப் பயிற்சி - 27 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 20 பிப் 2011)
(இலக்கியப் பயன்பாடு)
- அவைதாம் பளிங்கிலிட்ட வன்னம்போற் காட்டிற்றைக் காட்டி நிற்றலான் (சி.போ. பா. 8, 3)
- மொழிகளும் வன்னமும் (திருக்காளத். பு. 28, 9)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வன்னம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +