வானப்பிரஸ்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வானப்பிரஸ்தம்(பெ)

  1. ஆச்சிரமம் நான்கனுள் மனைவியுடன் காட்டிற்குச்சென்று தவம் செய்யும்நிலை
  2. காட்டிருப்பை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. life when leaves with his wife to be an ascetic in the forest
  2. wild mahwa
விளக்கம்
  • பிள்ளைகள் வளர்ந்து அவர்களும் குடும்பவாழ்க்கைக்கு வந்ததும் ஒருவன் அதற்கு மேலும் வாழ்க்கையில் ஒட்டிக்கொண்டிருக்கக் கூடாது. அது அவனுக்கும் கஷ்டம் பிள்ளைகளுக்கு அதைவிடக் கஷ்டம். அவன் தன் மனைவியை பிள்ளைகளிடம் ஒப்படைத்துவிட்டு குடும்பவாழ்க்கையை விட்டு முழுமையாக விலகிவிடவேண்டும். அதற்குப்பெயர்தான் வானப்பிரஸ்தம். வனம்புகுதல் என்று பொருள். மனைவியும் வானப்பிரஸ்தம் வர விரும்பினால் அவளையும் கூட்டிக்கொண்டு செல்லலாம்.
  • வானப்பிரஸ்தம் என்பது ஒருவகைத் துறவு. அதுவரை செய்துவந்த உலகியல் சார்ந்த விஷயங்கள் எல்லாவற்றில் இருந்தும் முழுமையாக விடுபட்டு, தன்னுடைய மனநிறைவுக்குரிய செயல்களை மட்டுமே செய்தபடி வாழ்வதுதான் அது. (வயதடைதல், ஜெயமோகன்)
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வானப்பிரஸ்தம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வானப்பிரஸ்தம்&oldid=1880334" இலிருந்து மீள்விக்கப்பட்டது