மனைவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ)

என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

மனைவி = பொண்டாட்டி

  1. ஒரு ஆணுக்கு அவனை மணம் செய்து கொண்டவளைக் குறிக்கும் உறவு முறைப் பெயர்,
  2. திருமணம் செய்து கொண்ட ஆண், பெண் இருவரில் பெண்ணைக் குறிக்கும் சொல்.
  3. திருமணம் என்ற உறவின் வழியாகத் தன்னை மணம் கொண்ட தலைவனுக்குக் காதல், அன்பு, நம்பிக்கை போன்றவற்றைத் தந்து மனையில் இருக்கும் உறவுகளை எல்லாம் பேணுபவள்.
  4. ஒரு பெண் அவளது கழுத்தில் தாலி கட்டியவருக்கு அவள் என்ன உறவுமுறை என்பதைக் குறிக்கும் சொல்.
விளக்கம்

மனைவி என்றால் வீட்டை விளங்கச்செய்பவள் என்று பொருள். மனை=வீடு = வி=விளங்கச்செய்பவள். பெண்டாட்டி என்றால் பெண்டாளப்படக் கூடிய பெண் என்று பொருள். பெண்டு என்றால் பெண்மை என்பதாகும். ஆட்டி என்றால் பெண். எடுத்துக்காட்டு: மணவாட்டி = மணப்பெண்.

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் : wife
  • பிரான்சியம் : épouse, femme

ஒத்த சொற்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=மனைவி&oldid=1983736" இலிருந்து மீள்விக்கப்பட்டது