அகராதிகள் தோன்றுவதற்கு முன் தமிழ்ச் சொற்களின் பொருள்களை அறிந்துகொள்வதற்குப் பயன்பட்டவை நிகண்டுகள் எனப்பட்ட நூல்களாகும்.
செய்யுள் வடிவில் அமைந்தவை.
நிகண்டு என்னும் சொல் தொகை, தொகுப்பு, கூட்டம் என்னும் பொருள் தரும்.
இதிலே, சொற்கள் பொருள் அடிப்படையில் (தெய்வப் பெயர்கள், மக்கட் பெயர்கள்) என்று தொகுதிகளாகக் கொடுக்கப்பட்டிருக்கும்.
இந் நூல்கள் ஆரம்பத்தில் உரிச்சொற்பனுவல் என்ற தமிழ்ச் சொல்லால் அழைக்கப்பட்டன. எனினும் இச் சொல் நீளமாக இருந்ததனாலோ அல்லது இடைக் காலத்திலேற்பட்ட வடமொழிச் சொற்பயன்பாட்டு மோகம் காரணமாகவோ நிகண்டு என்ற வடமொழிப் பெயரே நிலைபெற்று விட்டது.
திவாகர நிகண்டு (திவாகர முனிவர் இயற்றியது) (கி.பி. 8 ஆம் நூற்றாண்டு)