உள்ளடக்கத்துக்குச் செல்

விக்சனரி:தினம் ஒரு சொல்/ஜனவரி 19

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - ஜனவரி 19
நிகண்டு (பெ)
  • அகராதிகள் தோன்றுவதற்கு முன் தமிழ்ச் சொற்களின் பொருள்களை அறிந்துகொள்வதற்குப் பயன்பட்டவை நிகண்டுகள் எனப்பட்ட நூல்களாகும்.
  • செய்யுள் வடிவில் அமைந்தவை.
  • நிகண்டு என்னும் சொல் தொகை, தொகுப்பு, கூட்டம் என்னும் பொருள் தரும்.
  • இதிலே, சொற்கள் பொருள் அடிப்படையில் (தெய்வப் பெயர்கள், மக்கட் பெயர்கள்) என்று தொகுதிகளாகக் கொடுக்கப்பட்டிருக்கும்.
  • இந் நூல்கள் ஆரம்பத்தில் உரிச்சொற்பனுவல் என்ற தமிழ்ச் சொல்லால் அழைக்கப்பட்டன. எனினும் இச் சொல் நீளமாக இருந்ததனாலோ அல்லது இடைக் காலத்திலேற்பட்ட வடமொழிச் சொற்பயன்பாட்டு மோகம் காரணமாகவோ நிகண்டு என்ற வடமொழிப் பெயரே நிலைபெற்று விட்டது.
  • திவாகர நிகண்டு (திவாகர முனிவர் இயற்றியது) (கி.பி. 8 ஆம் நூற்றாண்டு)
  • பிங்கல நிகண்டு (பிங்கலம் இயற்றியது)
  • சூடாமணி நிகண்டு (மண்டலபுருடர் இயற்றியது)
  • தொடர்புச் சொற்கள்
1)அகரமுதலி, 2)அகராதி, 3)நிகண்டு, 4)சொற்பொருளி
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக