விக்சனரி:மேற்கோளிடல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இப்பக்கம் தமிழ்விக்சனரியின் நோக்கம், கொள்கை, நடைமுறை குறித்தவை ஆகும்.
இங்குள்ளவைகளை வாக்கெடுப்பு நடத்திய பின்பே மாற்ற வேண்டும்.
நோக்கங்கள்: விரிவாக்கம் - கருதுகோள் - வழிமாற்று - விளக்கம் - மேற்கோள் - தானியங்கிகள் - தடுப்பு - நடுநிலை - நீக்கல்

ஒரு மேற்கோளை தேர்ந்தெடுப்பது எப்படி?[தொகு]

பெரும்பாலான வளர்ந்த நாடுகளின் மொழியில் அமைந்த விக்கிதிட்டங்களில், மொழிசார்ந்த நுண்ணறிவும், மொழியியல் தொழில்நுட்பமும், கணினியியல் தொழில்நுட்பமும் ஒன்றிணைந்து பெருமளவு செயற்படுத்தப்படுகிறது. இருப்பினும் அவை முழுமையாக இல்லை. அந்த அளவுக்குக்கூட, நம் தமிழ் மொழிக்கு, அத்தகைய வளங்களை, நாம் இன்னும் கூட்டவில்லை. “தமிழைக் கண்ணால் காண்பது மட்டும், தமிழ் கணிமையன்று” என, இத்துறை அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும் காண்க: TACE16

 1. சிறந்த விளக்கவுரையுள்ள நூலில் இருந்து எடுத்து கையாளலாம். இலக்கிய வட்டத்தில் இருக்கும் ஆசிரியர்கள், பேராசியர்கள், மாணவர்கள் போன்றோரின் அனுபவ அறிவின் வழியே, இதனைச் சிறப்பாக செய்ய இயலும்.
 2. இணையத்தில் இருந்து எடுக்கலாம்.
  • விக்கிமூலம் வழியே இங்கு தோன்ற செய்வது எளிமை. எனவே, அங்கு நமது இலக்கியங்களும், நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களும் மேம்படுத்தப்பட வேண்டும். அதே போல, விக்கி மேற்கோள்களும் பயன்படுத்தப்பட வேண்டும்.
  • தமிழ்ச் சொல்லை, திசு'கி (TSCII Interface) எழுத்துருவில், இலக்கியங்களில் தேடுவதற்கான தேடு பொறி.(உதவி:uni2tsc tsc2uni)
 3. ஒருங்குகுறியில் அமைந்த இலக்கிய மேற்கோள் தேடுபொறி இதுவரை உருவாக்கப்பட வில்லை. இணையத்திலும், இணைய இணைப்பிலா நிலையிலும் இலக்கிய மேற்கோள்களைத் தேடித்தர, ஓரிரு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.
  • இணையத்தில்..
  • பைத்தானில்..
  • வின்டோசில்..

தேர்ந்தெடுத்த மேற்கோளை இடுவது எப்படி?[தொகு]

 1. தேர்ந்தெடுக்கும் மேற்கோள், சொல்லுக்கான பொருளுடன் பொருந்த வேண்டும். அப்படி பொருந்தும் போது, பொருளை # குறியிட்டு எழுதுவது வழமை. அதற்கு அடுத்து ஒரு #: குறிகள் இட்டு, அப்பொருளுக்குரிய அம்மேற்கோளை இடுக. (எ. கா.) அரசர்சின்னம் - திமில் - அம்மா
 2. தனிப்பகுதி - பொருள் மயக்கம் இருக்கும் மேற்கோள்களையும், ஒன்றிற்கு மேற்பட்ட பொருள் வரும் மேற்கோள்களையும் சரிவர உணர முடியவில்லையெனில், அவ்விதமான மேற்கோள்களை == இலக்கிய மேற்கோள்கள்== என்ற உட்பிரிவில் இடுக. (எ. கா.) அம்மா

மேற்கோள்களுக்கான வார்ப்புருக்கள்[தொகு]

மேற்கோள்களை எளிமையாக இடவும், குறுகிய காலத்தில் செவ்வன, நிறைய சொற்களுக்கு செய்யவும், பின்வரும் வார்ப்புருக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

 1. .
 2. .
 3. .
 4. .
 5. .
 6. .
 7. .
 8. .
 9. .
 10. .

கவனிக்கப்பட வேண்டிய குறிப்புகள்[தொகு]

 1. உள்ளிடப்படும் தரவுகளின் குறுக்கங்களையும், அஃகுப்பெயர்களையும், சுருகங்களையும் முடிந்தவரை விரிவாக்கிக் கூற வேண்டும். இதற்குரியவைகளை [[ |இவ்விணைப்பில்]] காணலாம்.
 2. எடுத்தாளப்படும் மேற்கோள்களை சாய்வு எழுத்துகளில் (''....'') குறிப்பிடக்கூடாது. அதற்கு மாற்றாக, “மேற்கோள் குறியீடுகளால்” (“....”) குறிக்க வேண்டும்.
  (எ. கா.)
  • அறம் செய்ய விரும்பு எனச் சாய்வெழுத்துக்களால் குறிக்கக் கூடாது.
  • “அறம் செய்ய விரும்பு” என மேற்கோள் குறியீடுகளால் குறிக்க வேண்டும்.
 3. வருடத்தைத் தடிமனாகவும், மேற்கோள் நூலை சாய்வெழுத்துக்களிலும், அந்நூலின் சுருக்கப்பெயரை மேற்கோள்குறியீடுகளிலும் குறிக்க வேண்டும்.
(எ. கா.) gully என்ற சொல்லில் இருந்து காட்டப்படுகிறது.
பெருங்கத்தி
(வார்ப்புரு:context 1) வட இங்கிலாந்தில் பயன்படுத்தப்படும் பெரிய கத்தி. இதனை கப்பல் ஊழியர் அதிகம் பயன்படுத்துவர்.