அரசர்சின்னம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- அரசர்சின்னம், பெயர்ச்சொல்.
- சூடாமணி நிகண்டு, கீழ்கண்ட 21பொருட்களை, அரசரின் சின்னங்களாகக் கூறுகிறது.
- முடி
- (எ. கா.) நாடு உயர்ந்தால் முடிஉயரும் (ஓளவையார்)
- குடை
- கவரி
- (எ. கா.) முரசுக் கட்டிலில் உறங்குவதைக் கண்ட சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறை, மோசி கீரனாரைத் தண்டிக்காமல் அவருக்குக் கவரி வீசினான்.
- தோட்டி
- முரசு
- (எ. கா.) முரசு மாறு இரட்டும் அரு தொழில் பகை தணிந்து (ஐங்குறுநூறு)
- சக்கரம்
- (எ. கா.) தாமரைச் சதங்கை மாலை சக்கரம்என்ன வீழ்த்தும் (சீவக சிந்தாமணி)
- யானை
- (எ. கா.) இயல்புகும் களி நல் யானைஇனம் தெரிந்து மாபோல் (கந்தபுராணம்)
- கொடி
- (எ. கா.) மணி உடைக் கொடி தோன்ற வந்து ஊன்றல் ஆல். (கம்பராமாயணம்)
- மதில்
- (எ. கா.) மதில் வாயில் காவலின் சிறந்த (சிலப்பதிகாரம்)
- தோரணம்
- (எ. கா.) வாயில் தோரணம்கற்பக மாலை தாழ்ந்து (சீவகசிந்தாமணி)
- நீர்க்குடம்
- பூமாலை
- (எ. கா.) பூமாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து உரையேன் புத்தேளிர்க் (திருவாசகம்)
- சங்கு
- (எ. கா.) சங்கு இனம் முழங்க, எல்லாத் தானையும் பரந்து சூழ (வில்லிபாரதம்)
- கடல்
- (எ. கா.) கடல் உடையான் மலையான் ஐந்து பூதத்து (திருமந்திரம்)
- மகரம்
- (எ. கா.) மகரம் என்பது, சோதிடத்தில் ஒரு இராசியாக கருதப்படுகிறது.
- ஆமை
- (எ. கா.) ஆமை ஒன்று ஏறி அகம்படியான் என (திருமந்திரம்)
- இணைக்கயல்
- சிங்கம்
- தீபம்
- (எ. கா.) தீபம் முற்றவும் நீத்து அகன்று என, சேயது ஆர் உயிர் தேய (கம்பராமாயணம்)
- இடபம்
- ஆசனம்
- (எ. கா.) அருந் தவர்க்கு அமைந்த ஆசனம் காட்டி (மணிமேகலை)
- (எ. கா.) ஆசனம் கொடுத்து அம் கண் இருத்தியே (கந்தபுராணம்)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- இராசசின்னம் - ராஜசின்னம் - இராசலட்சணம் - அரி - சிங்கம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +