இது விக்கிமீடியா-தமிழ் இணையக் கல்விக்கழகக் கூட்டுமுயற்சியின் ஒரு பகுதியாக, அவ்வப்போது, தமிழ் விக்சனரிக்குக் கொடுக்கப்படும் தரவுகளை குறித்தத் திட்டப்பக்கம் ஆகும். இத்திட்டப்பக்கச் செய்திகள், தொடர்ந்து இற்றைப்படுத்தப்படுமென்பதால், மறுமுறையும் வந்து கவனிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இத்திட்டத்திற்குரிய அனைத்துத் தேவைகளும், ஏற்பட்ட மாற்றங்களும், இங்கு சுருக்கமாகத் தெரிவிக்கப்படும். அவற்றை விரிவாக, இப்பக்கத்தில் காணலாம்.
அண்மையமாற்றங்களில் ஒரு சொல் பதிவேறும் போது, அதன் உள்ளடக்கமும் தெரியத் தேவையான பைத்தான் நிரலாக்கத்தினை த.சீனிவாசன் அளித்துள்ளார். தரப்படும் தரவினை, விக்சனரிக்கேற்பப் பிரித்துப் பயன்படுத்த நிரலாக்கம் செய்துள்ளார்.
சொற்பிரிப்புக்குரிய பைத்தான் நிரலை, சுந்தர் உருவாக்கி, பொது ஆக்குனர் உரிமத்தில் அளித்துள்ளார். இந்நிரலாக்கத்தினைக் கொண்டு, கொடுக்கப்பட்டத் தரவில், விக்சனரியில் இல்லாதச் சொற்களையும், இருக்கும் சொற்களையும் தனித்தனியே பிரித்தெடுக்க இயலும். கணினியின் இயக்க நேரம் வெகுவாகக் குறைந்து, மின்சாரச் செலவும் வெகுவாக குறைகிறது.
கூகுள் விரிதாள் வழியே, சொற்களைப் பதிவேற்றும் கூகுள் தொழினுட்பத்தை, நீச்சல்காரன் செய்தளித்துள்ளார். இது பிறமொழி விக்சனரி பங்களிப்பாளர்களிடம் இணைந்து செயற்பட பேருதவியாக இருக்கிறது. இதில் பல நுட்பங்கள் புகுத்தப்பட உள்ளது.