வெகுளி
Appearance
பொருள்
- (பெ) வெகுளி
- கோபம்
- வெறுப்பு
- கள்ளங்கபடம்/விகல்பம் அற்றவர்; அப்பாவி
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- வெகுளிப் பெண்: கள்ளம், கபடம் அறியாத சூது, வாது தெரியாத (அப்பாவிப்) பெண்ணை வெகுளிப் பெண் என்று சொல்லி வருகிறோம். பெண்ணை மட்டுமன்று, "அவனா... சுத்த வெகுளிப்பய; ஒரு மண்ணுந் தெரியாது' என்று ஆண் பிள்ளையையும் சுட்டுவதுண்டு. ஆக வெகுளி என்றால், உலக நடப்பு அறியாத நல்லது கெட்டது தெரியாத தன்மை என்று கருதுகிறோம். உண்மையில், வெகுளி என்பதற்குச் சினம் (கோபம்) என்பதுதான் பொருள். (கவிக்கோ ஞானச்செல்வன், மொழிப் பயிற்சி: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, தினமணிக்கதிர், 27 பிப் 2011)
பயன்பாடு
- உடுமலையார் மேல் ஒரு முறை, தன் வாய்த் தாம்பூலத்தை உமிழ்ந்துவிட்டார் கலைவாணர்; வெகுளியின் உச்சத்தில் நடந்த விபரீதம் இது!கோபித்துக்கொண்டு ஊருக்குப் போன உடுமலையாரின் கால் கை பிடித்துக் கெஞ்சாத குறையாக அவரை அழைத்து வந்தார் என்.எஸ்.கே! (நினைவு நாடாக்கள், வாலி, ஜூனியர் விகடன், 04-மே -2011)
- குழந்தை போல் வெகுளி (innocent like a child)
- உலகம் தெரியாத வெகுளி (ignorant naive)
(இலக்கியப் பயன்பாடு)
- வெகுளி கணமேனுங் காத்த லரிது (திருக்குறள்)29
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ