அவதாரம்
Appearance
பொருள்
அவதாரம்(பெ)
- இறங்கி வருதல், கீழிறங்குதல்
- திருவிறக்கம், பிறப்பு, திவ்யப்பிறப்பு
- பிரிக்கை
- தீர்த்தத் துறை
- அபராதம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- descent
- incarnation, birth of a great or divine person, the assumption of a body by a deity
- tearing, dividing
- sacred ghat
- fine
- பிரான்சியம்
- வங்காளம்: অবতার
விளக்கம்
பயன்பாடு
- "அவதாரம்' என்பதைக் "அஸ்டமா சித்தி" பெற்றவர் கடவுளால் புவியில் பிறக்கப்படுபவர்.அவரே கடவுளாக மாறும் தன்மையுடையவரே அவதாரம் என்பதாகும்.(மொழிப்பயிற்சி-51, கவிக்கோ ஞானச்செல்வன், 05 ஆக 2011)
- முருகன் அவதாரமா?
- வைகாசி விசாகம் வரும்போதெல்லாம் நமது செய்தி ஏடுகளில் முருகனைப் பற்றிய கட்டுரைகள் வரும். வந்து கொண்டுள்ளன. விசாகம், முருகன் அவதாரம் செய்த நாள் என்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
- ஒரு காட்சி ஊடகத்தில் முருகப் பெருமான், கிழவனாக அவதாரம் செய்து வள்ளியிடம் சென்றான் என்றும் சொன்னார்கள். கிழவனாக உருமாறியதையும் அவதாரம் என்றார்கள்.
- வைணவ நெறியில் அவதாரம் உண்டு. பரம்பொருள் (பெருமாள்) பூமிக்கு இறங்கி வந்து மனிதனாகப் பிறப்பெடுப்பார். பிற உயிரினங்களாகப் பிறப்பெடுத்தலும் உண்டு. அவதாரம் எனில் "கீழே இறங்கி வருதல்" என்று பொருள். வானிலிருந்து தேவன் பூமிக்கு வருதலே அவதாரமாம்.
- சைவசித்தாந்த நெறியில் அவதாரக் கொள்கையில்லை. பரம்பொருள் (சிவன்) மனித வடிவில் வந்து அற்புதங்களை நிகழ்த்துவார்; காட்சி தருவார்; மறைந்து போவார். சிவன் வேறு, முருகன் வேறல்லர்.
- இராமபிரானைப்போல், கண்ணபிரானைப் போல் முருகப் பெருமான் உயிர் நீத்தமை (சிறப்பு) சொல்லப்படவில்லை. ஆதலின் முருகன் அவதாரம் செய்தார் என்றும் அவதார நட்சத்திரம் விசாகம் என்றும் ஆன்மிகப் பேச்சாளர்களும் எழுத்தாளர்களும் பேசாமலும் எழுதாமலும் இருத்தல் நல்லது. . (பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம், கவிக்கோ ஞானச்செல்வன், 04 செப் 2011)
- மனித அவதாரம் - incarnation of a deity in human form
- அவதாரமெடு - take incarnation as a human
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---அவதாரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி