அணல்
Appearance
அணல் (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தாடியைச் சங்க இலக்கியம் "அணல்' என்று கூறுகிறது. ""புலம் புக்கனனே! புல் அணற்காளை (புறநா-28) எனும் புறநானூற்றுப் பாடலில் ஒரு வீரனுக்குப் புற்களைப்போல முகத்தில் தாடி மண்டிக்கிடந்த செய்தியை அறிய முடிகிறது. சில சங்கப் பாடல்களில் உடன்போக்கில் செல்லும் தலைவனைக் குறிக்கும்போது அவனை "மைஅணல் காளை' - "கருமையான தாடியை உடைய இளைஞன்' என்று அடையாளப்படுத்திப் பாடியுள்ளதை அறியமுடிகிறது. (அணல் - ஆண்மையின் அடையாளம்!, தமிழ்மணி, 24 ஜூலை 2011)
- சங்க இலக்கியம் "அணல்' என்ற சொல்லால் மனிதர்களின் தாடியை மட்டும் குறிப்பிடாமல், கோழி, சேவல், ஓந்தி, குரங்கு ஆகியவற்றின் தாழ் கழுத்து மயிரையும் குறிப்பிடுகிறது. ""உள் இறைக் குரீஇக் கார் அணல் சேவல் என்று நற்றிணை (181) கரிய மோவாயை உடைய குருவியின் சேவலையும், "மனைஉறை கோழி அணல் தாழ்வு அன்ன' என்று அகநானூறு (187) கோழியின் தாழ் மயிரையும், "வைவால் ஓதி மை அணல்' என்று அகநானூறு (125) ஓந்தியின் தாடியையும் குறிப்பிடுகின்றன. (அணல் - ஆண்மையின் அடையாளம்!, தமிழ்மணி, 24 ஜூலை 2011)
(இலக்கியப் பயன்பாடு)
- கறையணற் குறும்பூழ் (பெரும்பாண்.205).
- மையணற் காளை(புறநா. 83).
- மொய்யணலானிரை (பு. வெ. 1, 12)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அணல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +