பைத்தியக்காரன்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பைத்தியக்காரன்(பெ)
- பித்துப்பிடித்தவன்; பித்தன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- பைத்தியக்காரன் = பைத்தியம் + காரன்
- பைத்தியக்காரனுக்குத் தமிழ்நாட்டிலே பல பெயர்கள் உண்டு. படிக்காதவர்கள் அவனைப் "பித்தன்" என்பார்கள்; பித்துக்கொண்டவன் என்னும் பொருள் நன்றாகத் தோன்றும்படி "பித்துக்கொள்ளி" என்றும் சொல்லுவார்கள். கிறுக்கன் என்பதும் அவனையே குறிக்கும். திருநெல்வேலியிலே பைத்தியக்காரனைக் "கோட்டிக்காரன்" என்பர். கோட்டி என்பது நல்ல தமிழ்ச் சொல். கோட்டம் என்றால், வளைவு அல்லது கோணல். மனத்திலே உள்ள கோணல் "மனக்கோட்டம்" எனப்படும். பேச்சிலே வளைவு நெளிவு காணப்பட்டால் அதைச் "சொற்கோட்டம்" என்பர். இவ்விருவகைக் கோட்டத்தையும் திருவள்ளுவர் எடுத்துக் காட்டியுள்ளார். "சொற்கோட்டமில்லது செப்பம்; ஒரு தலையா உட்கோட்ட மின்மை பெறின்" (குறள்-119). என்பது திருக்குறள். எனவே, அறிவிலே கோட்டம் உடையவனைக் "கோட்டி" என்று சொல்வது பாண்டிய நாட்டு வழக்கு.(பழகு தமிழ்: வேருக்கு நீர் வார்த்தவர்கள் -1, இடைமருதூர் கி.மஞ்சுளா, தமிழ்மணி, 14 ஆக 2011)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பைத்தியக்காரன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
பித்தன் - பித்துக்கொள்ளி - பித்துக்குளி - கிறுக்கன் - கோட்டிக்காரன் - கோட்டி - உன்மத்தன் - கிறுக்கி - பைத்தியக்காரி