உள்ளடக்கத்துக்குச் செல்

கோட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கோட்டி(பெ)

 1. பித்துப்பிடித்தவன்; பித்தன்
 2. பைத்தியம் காமக்கோட்டியால் மனங்கூசினேன் (இராமநா. உயுத். 41)
 3. துன்பம்
 4. பகிடி
 5. விகடக்கூத்து, கோட்டாலை
 6. கோஷ்டி; சபை தோமறுகோட்டியும் (மணி. 1, 43)
 7. கூட்டம்
 8. பேச்சு வீரக்கோட்டிபேசுவார் (கம்பரா. மாயாசனகப். 13)
 9. ஒருவரோடு கூடியிருக்கை. தன்றுணைவி கோட்டியினி னீங்கி (சீவக.1035)
 10. கோபுரவாசல் ஆயிழைகோட்டத் தோங்கிருங் கோட்டி யிருந்தோய் (சிலப்.30, 62)
 11. மனைவாயில்
 12. கிட்டிப்புள்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

 1. crazy person, mad man
 2. insanity, madness
 3. trouble, vexation, annoyance
 4. pleasantry, jest, joke, mimicry (Loc)
 5. grotesque gestures, as of one possessed by the devil; antic
 6. assembly of learned or respectable persons
 7. multitude, collection, class
 8. speech or utterance, as in an assembly
 9. company or association, as of a person
 10. gateway under a temple tower
 11. door of a house
 12. larger stick in the game of tip-cat
பயன்பாடு
 • "பிள்ளை பெத்து வீட்டுக்கு வந்து நாலைந்து நாளாகச் சரியாத் தூங்கவே இல்லை போல இருக்கு. எப்போ பார்த்தாலும் பொட்டப்புள்ளையாப் போச்சு, கருப்பா வேற இருக்கு. தலையில இடி விழுந்துட்டது. பயந்தது மாதிரியே ஆயிப் போச்சுண்ணு புலம்பிக்கிட்டே இருந்திருக்கா. இப்படியே விட்டால் கோட்டி கீட்டி புடிச்சுரும்னு டாக்டர்கிட்டே மறுபடி கூட்டிக்கிட்டுப் போயிருக்காங்க. அவங்க தூக்கமாத்திரை குடுத்திருப்பாங்களோ என்னமோ, எப்ப பார்த்தாலும் சதா தூங்கிக்கிட்டே கிடக்கா. ஒண்ணு மாத்தி ஒண்ணு பேசுதா.."(மாசிலாமணிக்கு குழந்தை பிறந்திருக்கிறது, வண்ணதாசன்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

பித்தன் - கோட்டிக்காரன் - கோட்டம் - கோட்டாலை

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோட்டி&oldid=1986675" இலிருந்து மீள்விக்கப்பட்டது