அடிமனை
Appearance
பொருள்
அடிமனை, (பெ).
- வீடு, கட்டடம் முதலியன கட்டப்பட்டிருக்கும் மனை
- சுற்றுச்சுவர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்g
விளக்கம்
பயன்பாடு
- தலைமை கழக கட்டிடமும், அடிமனையும் ஜானகி அம்மாளுக்குத்தான் சொந்தம். அதை கட்சிக்காக பரிசாக கொடுத்து பதிவு செய்துவிட்டார். (எம்.ஜி.ஆரின் 23 பக்க உயில், மாலை மலர், செப்டம்பர் 09, 2011)
- சில ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீஅரங்கநாதசுவாமி திருக்கோயில் நிர்வாகம், பட்டர்கள் குடியிருந்து வரும் வீடுகளின் அடிமனைகள் கோயிலுக்குச் சொந்தமானவை; எனவே, குடியிருப்பவர்கள் அடிமனைகளுக்கு வாடகைச் செலுத்த வேண்டும் என்று கூறியது. இதற்கு, குடியிருப்பவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். (ஸ்ரீரங்கத்தில் தொடரும் இரு முக்கிய பிரச்னைகள்!, தினமணி, 03 ஜூலை 2011)
- ஸ்ரீரங்கம் தொகுதியில் கோவிலுக்கும், மடங்களுக்கும் சொந்தமான நிலங்கள் ஏராளமாக உள்ளன. இந்த நிலங்களில் அந்த பகுதி வாசிகள் வீடு கட்டி பல தலைமுறைகளாக குடியிருந்து வருகிறார்கள். இதற்காக கோவிலுக்கு அடிமனை வாடகையும் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் அவர்கள் குடியிருக்கும் இடங்களை அந்தந்த வீட்டு உரிமையாளர்களுக்கு பட்டா போட்டு கொடுக்க வேண்டும் என்று ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்கள். (தொகுதி விவரம்: ஸ்ரீரங்கம், மாலைமலர், 07 மார்ச் 2011)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---அடிமனை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற