உள்ளடக்கத்துக்குச் செல்

பணிவிடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பணிவிடை(பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • ஒருவர், தன்னைவிட ஏதோ ஒரு வகையில் உயர்ந்த, மற்றொருவருக்கு உதவியாக இருக்குமாறு செய்யும் பணிகள் (வேலைகள்). பெற்றோர், பெரியோர், குரு முதலியவர்களுக்குப் பணிவுடனும் கனிவுடனும் தேவைப்படும் உதவிகள் செய்தல்
  • ஒருவர் கோயில், தொண்டு, அற நிறுவனங்களில் இசைவுடன் செய்யும் பணிகள் (வேலைகள்).
  • பணிவிடை செய் (வி)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. service to parents, elders, needy - கைத்தொண்டு, சேவை, தொண்டு, சேவகம், குற்றேவல்
  2. temple service; temple construction - திருப்பணி
  3. work, business, occupation, office, work of an artist - தொழில்
  4. commission, order, command - கட்டளை
பயன்பாடு
  1. நீ சாகக் கிடந்தபோது அவர்கள் இருவரும் உனக்கு இரவு பகல் பணிவிடை செய்து உன்னைக் காப்பாற்றினார்கள் (அலை ஓசை, கல்கி) - When you were seriously ill, those two served you day and night and saved you
  2. என்னைத் தங்களுடைய சிஷ்யனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்; தங்களுக்குப் பணிவிடை புரியவும், தாங்கள் அழைத்த குரலுக்கு ஓடி வரவும் எனக்கு அனுக்கிரகிக்க வேண்டும் (குருபீடம், ஜெயகாந்தன்)
  3. ஒரு தந்தை தமக்குப் பணிவிடை செய்யும் மகன்மீது கருணை காட்டுவதுபோல் நான் அவர்கள் மீது கருணை காட்டுவேன் (விவிலியம்)
  4. பணிவிடை வானவர் புரிய (குற்றா. தல. மூர்த்தி. 10).
  5. பொருடனை . . . பணிவிடைக்குரித் தாக்கிய பெருமான் (உபதேச கா. சிறப்புப். 10).
  6. இறைவ விப்பணிவிடை தருக (பாரத. வேத். 32)

DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=பணிவிடை&oldid=1184900" இலிருந்து மீள்விக்கப்பட்டது